search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி கே.கே.நகரில் தொடர் கொள்ளை முயற்சியால் பொது மக்கள் அச்சம்
    X

    திருச்சி கே.கே.நகரில் தொடர் கொள்ளை முயற்சியால் பொது மக்கள் அச்சம்

    • திருச்சி கே.கே. நகர் பகுதியில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் குடியிருந்து வருகின்றனர்.
    • இந்த பகுதிகளில் தொடர் கொள்ளை முயற்சி சம்பவத்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    திருச்சி;

    திருச்சி மாநகரில் அதிக அளவில் வளர்ச்சி பெறும் பகுதியாக உள்ளது கேகே நகர். இந்த பகுதி பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் குடியிருந்து வருகின்றனர். மேலும் திருச்சி மாநகரின் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் இருந்து வரும் பகுதியாகவும் உள்ளது.

    இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி கே கே நகர் தங்கையா நகர் அருகில் உள்ள சண்முகா நகர் பகுதியில் வீட்டில் இருந்த தாயை கட்டி போட்டுவிட்டு மகளிடம் பாலியல் சீண்டல் செய்து, கொள்ளை சம்பவம் நடந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதே சண்முகா நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வரும் ஜானகிராமன் என்பவரது வீட்டில் நேற்று இரவு தூங்கி கொண்டிருந்தபோது வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஜன்னல் கதவுவை கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காலையில் அவர்கள் எழுந்து பார்த்த போது தான் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்ததுள்ளது தெரியவந்தது.

    இதேபோன்று தங்கையா நகரில் வசித்து வரும் சுங்கத்துறையில் பணியாற்றி வரும் விஜயலட்சுமி என்பவரது வீட்டிலும், அதற்கு எடுத்து எதிர் வீடான கராத்தே பயிற்சியாளராக இருக்கும் சங்கர் என்பவரது வீட்டிலும் கொள்ளை முயற்சி நடத்தப்பட்டது இருப்பதும் தெரிய வந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த கேகே நகர் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர் கொள்ளை சம்பவத்தால் இப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். திருச்சி கே.கே.நகர் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×