search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mandi"

    • பாகிஸ்தானுக்கு ஆட்டா (மாவு), மின்சாரம் தேவை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் வளையல்கள் கூட இல்லை என்பது எங்களுக்குத் தெரியாது.
    • பாகிஸ்தான் வளையல் அணியவில்லை என்கிறர்கள். பாகிஸ்தான் வளையம் அணியவில்லை என்றால், இந்தியா அணிய வைக்கும்.

    பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் சிம்லாவில் உள்ள குலுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது கங்கனா ரனாவத் கூறியதாவது:-

    பாகிஸ்தானுக்கு ஆட்டா (மாவு), மின்சாரம் தேவை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் வளையல்கள் கூட இல்லை என்பது எங்களுக்குத் தெரியாது. அவர்கள் (பரூக் அப்துல்லா மற்றும் மணி சங்கர் அய்யர் பாகிஸ்தான் அணுஆயுதத்தை பயன்படுத்தும் எனக் கூறியதை சுட்டிக்காட்டி) பாகிஸ்தான் வளையல் அணியவில்லை என்கிறர்கள். பாகிஸ்தான் வளையம் அணியவில்லை என்றால், இந்தியா அணிய வைக்கும்.

    பயந்துபோன பிரதமர் தலைமையில் ஸ்திரமற்ற மற்றும் பலவீனமான காங்கிரஸ் ஆட்சியை இந்தியா விரும்பவில்லை. மோடியின் கரத்தை வலுப்படுத்த பா.ஜனதாவுக்கு வாக்களியுங்கள். அதை தவிர்த்து மற்ற பட்டன்களை அழுத்தினால், உங்களுடைய வாக்கு வீண் என்பதாகிவிடும்

    இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பது குறித்து மத்திய பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்திருந்தார்.

    அது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா பதில் அளிக்கையில் "பாதுகாப்பு மந்திரி அதைச் சொன்னால், மேலே செல்லுங்கள். நாங்கள் யார் நிறுத்துவது? ஆனால் நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் (பாகிஸ்தான்) வளையல் அணியவில்லை. அவர்களிடம் அணுகுண்டுகள் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக அந்த அணுகுண்டு நம் மீது விழும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது. உள்ளது மற்றும் இருக்கும். இந்தியாவின் வளர்ந்து வரும் சக்தி, கௌரவம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை இந்தியாவில் சேர விரும்புவதற்கு வழிவகுக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    மணி சங்கர் அய்யர் "பாகிஸ்தானும் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. எனவே, அந்நாட்டுக்கு இந்தியா மரியாதை அளிக்க வேண்டும். அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏனென்றால், பாகிஸ்தானிடமும் அணுகுண்டு இருக்கிறது. அப்படி மரியாதை அளிக்காவிட்டால், அவர்கள் இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டை பயன்படுத்துவது பற்றி பரிசீலிப்பார்கள். பாகிஸ்தானில் யாராவது பைத்தியக்கார மனிதர் பதவிக்கு வந்து, அணுகுண்டை பயன்படுத்தினால், அது நல்லதல்ல. அது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார்.

    • மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அறிவிக்கப்பட்டுள்ளார்
    • இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்

    இமாச்சலப் பிரதேசம், மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், கங்கனா தன்னை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

    நேற்று கங்கனா மண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, "நான் ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி, மணிப்பூர் என நாடு முழுவதும் எங்கு சென்றாலும் எனக்கு வியப்புதான். ஏனெனில், அந்த அளவுக்கு மக்கள் என்மீது அன்பு பொழிந்து வருகின்றனர். நடிகர் அமிதாப் பச்சனுக்குப் பிறகு, இந்தத் துறையில் யாருக்காவது இவ்வளவு அன்பும் மரியாதையும் கிடைக்கிறது என்றால், அது எனக்குத்தான். இதை என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்" என்று பேசியுள்ளார்.

    இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கங்கனாவை கலாய்த்து வருகின்றனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 20 வருடங்களில் ஒரு நடிகையாக நான் அனைத்து விதமான பெண்களின் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன்- கங்கனா.
    • தனது சமூக வலைதள பக்கங்களை பல்வேறு நபர்கள் பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் பதில்.

    நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா கடந்த 24-ந்தேதி வெளியிட்டது. இதன்படி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

    5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் நடிகர், நடிகைகள், மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்ப வழங்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்தது.

    இதற்கிடையே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத்தின் கவர்ச்சி புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று வெளியாகி இருந்தது. இந்த பதிவு கங்கனா ரனாவத்தை இழிவு படுத்தும் வகையில் இருந்ததால் பலரும் சுப்ரியா ஸ்ரீனேட்டுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், கங்கனா ரனாவத் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த 20 வருடங்களில் ஒரு நடிகையாக நான் அனைத்து விதமான பெண்களின் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன்.

    குயின் படத்தில் ஒரு அப்பாவி பெண்ணாகவும், தாக்கட் படத்தில் மயக்கும் உளவாளியாகவும், மணிகர்ணிகாவில் ஒரு தெய்வப் பெண்ணாகவும், சந்திரமுகியில் ஒரு பேயாகவும், ராஜ்ஜோவில் விலைமாதுவாகவும், தலைவியில் புரட்சிகரமான பெண்ணாகவும் நடித்துள்ளேன்.

    கட்டுப்பாடுகளில் இருந்து நமது மகள்களை விடுவிக்க வேண்டும். அவர்களின் உடல் உறுப்புகள் பற்றிய ஆர்வத்தை தவிர்த்துவிட்டு உயர வேண்டும். அனைத்திற்கும் மேலாக பாலியல் தொழிலாளிகள் வாழ்க்கையை மோசமான விமர்சனத்திற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அனைத்து பெண்களுக்கும் கண்ணியம் உண்டு" என்று குறிப்பிட்டுள்ளார்.

    கங்கனா விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், தனது 'எக்ஸ்' தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது சமூக வலைதள பக்கங்களை பல்வேறு நபர்கள் பயன்படுத்தி வருவதாகவும், அதில் யாரோ ஒருவர் மோசமான பதிவை வெளியிட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

    இது குறித்து தனது கவனத்திற்கு வந்த உடனேயே அந்த பதிவை நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ள அவர், பெண்களைப் பற்றி அந்தரங்கமான முறையில் விமர்சிக்கும் பழக்கம் தனக்கு கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான ஜெய்ராம் தாகூர் "இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். பெண்களை இழிவுப்படுத்துவம் காங்கிரஸ் பழக்கமாகியுள்ளது. ஒட்டுமொத்த மண்டி மற்றும் இமாச்சல பிரதேசம் கோபத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி அதற்கு விலை கொடுத்தாக வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    ×