search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lakes"

    • நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
    • 33 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக 174 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மேலும் 215 ஏரிகள் 75சதவீதத்துக்கு மேலும், 241 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 246 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும், 33 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன. இந்த தகவலை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கடந்த 3 நாட்களாக நீடிக்கும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    • தொடர்ந்து மழை நீடித்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் மொத்தம் 8895 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளவில் 75 சதவீதம் ஆகும்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டிவருகிறது. இன்று காலையும் கனமழை கொட்டியது. கடந்த 3 நாட்களாக நீடிக்கும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 525 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. இதில் 2755 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1080 மி.கனஅடி. இதில் 692மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 197 கனஅடி தண்ணீர் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 3138 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு இன்று காலை நீர்வரத்து 451 கனஅடியாக அதிகரித்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை நீர்மட்டம் மீண்டும் எட்டி உள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மழை நீடித்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. தற்போது ஏரியில் இருந்து 162 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

     

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1874 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 210 கனஅடி தண்ணீர் வருகிறது. 68 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 436மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 20 கனஅடி தண்ணீர் வருகிறது.10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • 24 மணிநேரமும் இயங்கும் பேரிடர் கால அறை திறப்பு
    • சாலைகளில் தேங்கிய மழைநீர், மரங்கள் பொதுப்பணித்துறை ஊழி–யர்கள் மூலம் உடனுக்குடன் அகற்றப்படு–கிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் 13-ந்தேதி மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை மறுநாள் செவ்வாய்க் கிழமை இரவு 8 மணி வரை இடைவிடாமல் 26 மணி நேரம் மழை கொட்டியது.

    இந்த தொடர் மழையால் புதுவை பகுதியில் உள்ள ஏரி நிரம்பி வருகிறது. இதுகுறித்து புதுவை பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    புதுவையில் வடகிழக்கு பருவமழை தீவிர–மடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படாமல் இருக்க முதல்-அமைச்சர் ஆணைப்படி அனைத்து அரசு துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. 2 நாட்கள் பெய்த மழையின் போது கள ஆய்வு மேற்கொள் ளப்பட்டு முன்னெச்ச–ரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பொதுப்பணித்துறை மூலம் அனைத்து கொம்யூ னில் உள்ள நீர்ப்பாசன வாய்க்கால்கள், பெரிய வாய்க்கால்கள், வரத்து கால்வாய்கள் என மொத்தம் 142 கி.மீ. தூரத்துக்கு தூர் வாரப் பட்டது. நகர பகுதியில் உப்பார், கருவடிக்குப்பம் வாய்க்கால் 3 கி.மீ. தூரத் திற்கு தூர்வாரப்பட்டது.

    பாகூர் கொம்மந்தான் மேடு, வடக்கு கரையில் அணைக்கட்டு அருகே மழை யினால் ஏற்படும் வெள்ள பெருக்கை தடுக்க மணல் மூட்டை அடுக்கப்பட்டது. பாகூர் சித்தேரி முதன்மை வாய்க்காலில் தண்ணீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தப் பட்டு, நிலங்களில் இருந்து தண்ணீர் வெளி–யேற்றப்பட்டு வருகிறது.

    ஷட்டர்கள் மூலம் கட்டுப் படுத்தி தண்ணீர் ஆற்றுக்கு திருப்பி விடப் படுகிறது. புதுவையில் மொத்தம் உள்ள 84 ஏரி களில் 19 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி–யுள்ளது. 10 தடுப்பணைகள் முழு கொள்ளளவை எட்டி யுள்ளது.

    பாவாணர் நகர் பகுதியில் வெள்ளி நீர் பாதிப்பு வராமல் இருக்க தடுப்பு பலகை அமைக் கப்பட்டு மழைநீர் வடிய–விடப்பட்டுள்ளது.

    சாலைகள் நகராட்சி மூலம் மேம்படுத்தப்பட உள்ளது. ரெயின்போ நகர் சுற்றியுள்ள பகுதியில் வெள்ள நீர் பாதிப்பு வராமல் தடுக்க மின் மோட்டார் அமைக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றப் பட்டது. சாலைகளில் தேங்கிய மழைநீர், மரங்கள் பொதுப்பணித்துறை ஊழி–யர்கள் மூலம் உடனுக்குடன் அகற்றப்படுகிறது.

    இந்த பணிக்காக 25 ஜே.சி.பி. எந்திரங்கள் மரம் அறுக்கும் கருவிகள் தயார்நிலையில் உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர்கால நடவடிக்கை மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசர கால கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.  

     புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க சுழற்சி முறையில் பணிபுரிய அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். சம்பந்தப் பட்ட துறை அலுவலர் களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கையும் எடுக்கப் பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • 28- ஏரிகள் 75-சதவீதம். 63-ஏரிகள் 50 சதவீதம், 175- ஏரிகள் 25 சதவீதம் எட்டி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

    காஞ்சிபுரம் மாதா கோவில் தெரு, தாமல்வார் தெரு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார் நகர், விளக்கடி பெருமாள் கோவில் தெரு போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி செல்கிறது.

    அதேபோல காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஆவா கூட்டை தெரு, லிங்கப்பன் தெரு முருகன் காலனி பல்லவர் மேடு போன்ற இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    மழையின் காரணமாக உள்ளாவூர் மதகுஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம்ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கள், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல்சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி, கோவிந்தாவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வெளியூர் சித்தேரி ஆகிய முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    காஞ்சிபுரம் பகுதியில் மொத்தம் 381- ஏரிகள் உள்ளன. இதில் ஏரிகள் முழுவதும் நிரம்பியது. 28- ஏரிகள் 75-சதவீதம். 63-ஏரிகள் 50 சதவீதம், 175- ஏரிகள் 25 சதவீதம் எட்டி உள்ளது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்துக்கு நீர் பாசனத்திற்கு இந்த பயன்பாட்டுக்கு உகந்த பெரிய ஏரிகளான தாமல், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, உத்திரமேரூர், மணிமங்கலம், போன்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    • 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.
    • வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே வெளி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருகிறது.

    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும், சென்னை மாவட்டத்தில் 16 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 ஏரிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஏரிகளும் என மொத்தம் 1022 ஏரிகள் உள்ளன.

    இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், வெளி மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக இந்த ஏரிகள் நிரம்பி வருகின்றன.

    காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1022 ஏரிகளில் தற்போது வரை 38 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 21 ஏரிகள் முழுமையாக நிரம்பிவிட்டன. மேலும் 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பக்கம் ஏரிக்கும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 23 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது 21.5 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரி விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் பராமரிப்பு பணி நடைபெற்றது. மதகுகள் தண்ணீர் திறப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏரி முழு கொள்ளளவை எட்டியவுடன் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே வெளி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருகிறது.

    • பாசன நீர் வழங்கும் ஏரிகளை போர்க்கால அடிப்படையில் புனரமைக்க வேண்டும்.
    • விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க மாவட்ட கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.

    திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் முடிகொண்டான் ராஜா, மாநில செயலாளர் உலகநாதன், நிர்வாகிகள் அரவிந்தசாமி, வில்லு ஜெகதீஷ், பவுன்ராஜ், ஜெயபால், விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில், காவிரி, கல்லணை, வெண்ணாறு ஆகியவைகளின் பாசன வாய்க்கால், இதனுடைய பாசன நீர் வழங்க கூடிய ஏரிகள் போர்க்கால அடிப்படையில் புனரமைக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் முந்திரி, பலா, சின்ன வெங்காயம், துவரை போன்ற பயிர்கள் மற்றும் கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்களை பயிர் செய்ய விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் 2021-2022 மற்றும் 2022-23 -ம் ஆண்டில் நெல், உளுந்துக்கு காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.

    அரியலூர் மாவட்டம் தூத்தூர், தஞ்சை மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவுடன் கூடிய அணை கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

    • ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆட்டரம்பாக்கம், கோடுவெளி, கோட்டையூர், கடப்பேரி ஏரிகளில் பழுது பார்த்தல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • ஜல்சக்தி அமைச்சகத்தின் ஆணையர் கோயல் தலைமையில் அதிகாரிகள் குழு புனரமைத்தல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டத்தின் கீழ் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கங்கள் மற்றும் 336 ஏரிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆட்டரம்பாக்கம், கோடுவெளி, கோட்டையூர், கடப்பேரி ஏரிகளில் பழுது பார்த்தல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இப்பணிகளை ஜல்சக்தி அமைச்சகத்தின் ஆணையர் கோயல் தலைமையில் அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது. பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணித் திலகம், உதவி செயற்பொறியாளர் சத்யநாராயணா, உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு ஏரிகளில், உரிய அனுமதியுடன் அதிக அளவில் வண்டல் மண் எடுக்கப்படுகிறது.
    • பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுப்ப ணித்துறை, உள்ளாட்சி த்துறை கட்டுப்பாட்டில் ஏரிகள் உள்ளன. பல்வேறு ஏரிகளில், உரிய அனுமதியுடன் அதிக அளவில் வண்டல் மண் எடுக்கப்படுகிறது.ஆனால் திண்டிவனம் அய்யன் தோப்பு அருகே உள்ள தாங்கல் ஏரியில் வண்டல் மணல் அள்ளுவது தொடர்கதையாக உள்ளது. பொக்லைன் மூலம், இரவில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு உத்தரவை மீறி, நாளுக்கு நாள் மண் திருட்டு, அதிகரித்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து திண்டிவனம் தாசில்தார் வசந்த கிருஷ்ணனிடம் கூறுகையில் தாங்கல் ஏரியில் மணல் அல்லுவது பற்றி புகார் வந்துள்ளது. உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் .மேலும் அனுமதி இன்றி மணல் அள்ளுவதைப் பற்றி புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

    • மணல் கொள்ளையை தடுத்திட தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • சமுத்திர ஏரிக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு ஏரியை அகலப்படுத்தி ஆழப்படுத்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் மாவட்ட தலைவர் சேவையா தலைமையில் நடைபெற்றது. துணை செயலாளர் துரை.மதிவாணன், உடல் உழைப்பு சங்க மாவட்ட பொது செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட செயலாளர் தில்லைவனம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இந்த கூட்டத்தில், தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்திடவும், குவாரிகளை முறையாக செயல்படுத்தவும் கண்காணிப்பு குழு அமைப்பதுடன், அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வருகிற 19-ந்தேதி தஞ்சை ரெயிலடி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது,

    சமுத்திர ஏரிக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு ஏரியை அகலப்படுத்தி ஆழப்படுத்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 564 ஏரிகள் உள்ளன. இதில் 517 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி இருக்கிறது. 45 ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் நிரம்பி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஏரி-குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 1,523 பாசன ஏரிகள் உள்ளன. இதில் 1,283 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளில் 341 ஏரிகள் நிரம்பி உள்ளது. இதில் 38 ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் வரையும் நிரம்பி இருக்கிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 564 ஏரிகள் உள்ளன. இதில் 517 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி இருக்கிறது. 45 ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் நிரம்பி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 578 ஏரிகளில் 425 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 60 ஏரிகள் 76 முதல் 99 சதவீதமும், 36 ஏரிகள் 51 முதல் 75 சதவீதமும், 46 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும் நிரம்பி காணப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் மொத்தம் 14 ஆயிரத்து 138 ஏரிகள் உள்ளன. இதில் 7,123 ஏரிகள் நிரம்பி இருக்கிறது. 3,185 ஏரிகள் 76 முதல் 99 சதவீதமும், 1,578 ஏரிகள் 51 முதல் 75 சதவீதமும், 1,538 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 549 ஏரிகள் 25 சதவீதம் வரையும் நிரம்பி உள்ளது.

    இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்று ரூ.325 லட்சம் மதிப்பீட்டில் செங்கிப்பட்டி பகுதிகளில் 16 ஏரியில் மேற்கொண்டுவரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தனர்.
    பூதலூர்:

    காவிரி டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக கல்லணையில் இருந்து 22-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டி பகுதி முழுவதும் ஏரிகளில் தண்ணீர் நிரப்பி அதன் மூலம் பாசனம் பெற்று ஒரு போக சாகுபடி நடைபெறும்.

    செங்கிப்பட்டி பகுதி ஏரிகளுக்கு புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்குண்டான் நீடிப்பு கால்வாய்களின் வழியாக தண்ணீர் நிரப்பப்படும். இந்த இரண்டு கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெற்று 77 ஏரிகள் நிரப்புவதன் மூலம் 10ஆயிரம் ஏக்கரில் நெல்சாகுபடி நடைபெறும். கடந்த 7 ஆண்டுகளாக முறையாக தண்ணீர் கிடைக்காததால் இந்த பகுதியில் விவசாயம் நடைபெறவில்லை. இதனால் ஏரிகள் அனைத்தும் முட்புதர்கள் முளைத்து காணப்பட்டன.

    இந்த ஏரிகள் அனைத்தையும் தூர்வாரப்பட வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று திருச்சியை மையகமாக கொண்டு செயல்படும் பொதுப்பணித்துறை ஆற்று பாதுகாப்பு கோட்டத்தின் சார்பில் 16 ஏரிகள் ரூ.325 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி கரைகளை வலுப்படுத்தி மதகுகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பூதலூர் ஒன்றியத்தில் செய்யப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட உயர் அதிகாரி சுப்பையன் மற்றும் கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் பார்வையிட்டனர். ராயமுண்டான்பட்டியில் மருவத்தி ஏரி, நெப்பி ஏரி ஆகிய ஏரிகளை தூர் வாரி கரைகளை உயர்த்தி இருக்கும் பணிகளையும், உய்யகுண்டான் நீடிப்பு கால்வாயில் ரூ.5 லட்சம் மதிப்பில் 3 கிலோ மீட்டர் தூரம் சீரமைக்கும் பணிகள், புதிய கட்டளை மேட்டு கால்வாயில் ரூ.7 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள், மதகுகள் சீரமைப்பு, சிறிய அளவிலான குடிமராமத்து பணிகளை அதிகாரி சுப்பையன் ஆய்வு செய்தார். பணிகள் அனைத்தையும் விரைவில் தரமாக முடிக்க உத்தரவிட்டார். அதிகாரிகளுடன் திருச்சி ஆற்று பாசன கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன்இருந்தனர்.

    அப்போது ஏரிகளின் கரைகளை உயர்த்தும் பணிகளும், ஆழப்படுத்தும் பணிகளும் சரியாக நடைபெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
    ×