search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Soil theft"

    • கரம்பை மண் ஏற்றி வந்த 3 டிராக்டர்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
    • 3 டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை ஓட்டி வந்த டிரைவர்களையும் கைது செய்தனர்.

    நெல்லை:

    கடையத்தில் குளங்களில் இருந்து கரம்பை மண் எடுத்து செல்வதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சிலர் சட்டவிரோதமாக செங்கல் சூளைகளுக்கு அவற்றை எடுத்து சென்று விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது.

    இதையடுத்து கடையம் சப்-இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில ரோந்து சென்றனர். அப்போது கரம்பை மண் ஏற்றி வந்த 3 டிராக்டர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அவர்கள் உரிய அனுமதி சீட்டு இல்லாமலும், விவசாயத்தி ற்காக அல்லாமல் விற்பனைக்கு செங்கல் சூளைக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து 3 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை ஓட்டி வந்த டிரைவர்களான கடையம் திரவியம் நகரை சேர்ந்த மாரியப்பன்(வயது 45), அழகப்பபுரம் ராஜா(20), மீனாட்சிபுரம் ரவி(37) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் தப்பியோடிய கடையம் திரவியம் நகரை சேர்ந்த ராஜன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • குளத்தில் சிலர் ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தனர்.
    • தப்பி ஓடியவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    களக்காடு:

    களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் கோவிலம்மாள்புரம் வடமநேரி குளத்தில் ரோந்து சென்றனர்.

    அப்போது குளத்தில் சிலர் ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். இதைப்பார்த்த போலீசார் தப்பி ஓடியவர்களை மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் சிதம்பர புரத்தை சேர்ந்த பாலையா மகன் செல்வ குமார் (வயது 20), வீராங்குளத்தை சேர்ந்த சண்முக வேல் மகன் ஸ்ரீரெங்கமூர்த்தி (26), சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த விவேகநாதன் மகன் பாலதுளசிமணி (34), செங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாரிசெல்வம் (50), நடுச்சாலைப்புதூரை சேர்ந்த கணேசன் மகன் அஜிஸ் (26) என்பதும், அவர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் மண் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் 2 ஜே.சி.பி எந்திரங்களையும், 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

    • கடம்போடு வாழ்வு குளம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
    • தப்பி ஓடியவர்களை துரத்தி பிடித்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    களக்காடு:

    களக்காடு சப்-இன்ஸ் பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் கடம்போடு வாழ்வு குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது களக்காடு கீழத்தெருவை சேர்ந்த சதீஸ் (வயது25), சுப்பிரமணியபுரம் வடக்குத் தெருவை சேர்ந்த பாலதுளசி (34) ஆகியோர் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் எந்தவித அனுமதியும் இன்றி மண்ணை திருடி வயல் வரப்பில் வைத்து கொண்டிருந்தனர்.

    போலீசாரை பார்த்ததும் இருவரும் தப்பி ஓடினர். அவர்களை துரத்தி பிடித்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மண்திருட்டுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது.
    • சத்தம் அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு கேட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள நீரால் பங்காரம் பகுதியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீர் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில் இந்த ஏரியில் சில நாட்களாக இரவு நேரங்களில் வாகனம் செல்லும் சத்தம் அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு கேட்டுள்ளது. மறுநாள் காலையில் சென்று பார்த்ததில் ஏரியில் பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதும் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்களால் மண் திருடப்படுவதையும் அறிந்த அப்பகுதி மக்கள் மண் திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க ஏரிக்கு சென்றுள்ளனர்.

    பொதுமக்கள் வருவதை தெரிந்து கொண்ட மணல் திருடர்கள் மண் திருட பயன்படுத்திய2 கிட்டாச்சி வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றனர்.பின்னர் இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கும் வருவாய் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இது போன்ற சட்டத்திற்கு எதிராகவும் நிலத்தடி நீர் பாதிக்கும் வகையில் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விதிமுறை மீறி 10 மீட்டருக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு மண்ணை அள்ளி செல்வதாகவும் கூறி கெச்சம்பட்டி, வெண்ணாம்பட்டி, செலவடை மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டுவந்து லாரிகள் மற்றும் எந்திரங்களை சிறை பிடித்தனர்.
    • இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் செலவடை கிராமம் தோணிகத்தான் பள்ளம் என்ற இடத்தில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு அமிர்த குளம் அமைத்து அங்கு கொடியேற்று விழா நடத்தப்பட்டது. அதன்பிறகு அரசு விதிமுறைப்படி கல்வெட்டு வைக்கப்பட்டது.

    தொடர்ந்து கடந்த 10 நாட்களாக சிலர் 10-க்கும் மேற்பட்ட லாரிகளை கொண்டு இரவு பகலாக மண் அள்ளி சென்றனர்.இந்நிலையில் நேற்று மாலை விதிமுறை மீறி 10 மீட்டருக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு மண்ணை அள்ளி செல்வதாகவும் கூறி கெச்சம்பட்டி .வெண்ணாம்பட்டி .செலவடை மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டுவந்து லாரிகள் மற்றும் எந்திரங்களை சிறை பிடித்தனர் .

    இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதுபற்றி காவல்துறை மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜலகண்டபுரம் காவல் ஆய்வாளர் ஆனந்த்ராஜ், தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன்.கிராம நிர்வாக அலுவலர் நாகலட்சுமி ஆகியோர் பொது–மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் .

    அரசு விதிமுறைப்படி அமைக்கப்பட்ட அமிர்த குளத்தில் அளவுக்கு அதிகமாக மண்ணை வெட்டி கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நிலக்கோட்டையில் அனுமதிபெற்று நத்தத்தில் மண் எடுத்து முறைகேடு நடைபெறுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
    • இதனையடுத்து மண் அள்ளிச் சென்ற வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல்:

    மதுரையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்காக மதுரை-நத்தம் இடையிலான 4 வழிச்சாலைக்கு தேவையான மண் லிங்கவாடி பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது. தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அருகில் உள்ள சிறிய குன்றின் அடிவாரத்தில் இருந்து ெதாடர்ந்து மண் எடுக்கப்பட்டதால் அப்பகுதி விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது.

    இது தொடர்பாக வருவாய்துறை மற்றும் போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. தொடர்ந்து மண் அள்ளப்பட்டதால் மலையின் மேற்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இதனையடுத்து மண் அள்ளிச் சென்ற வாகனத்ைத சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும் வாகன ஓட்டுனர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன் மற்றும் நத்தம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்கள் புகார் அளித்த இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள மாலையக வுண்டன்பட்டியில் மண் எடுப்பதற்காக அனுமதி சீட்டை வைத்துக் கொண்டு முறைகேடாக லிங்கவாடியில் மண் எடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மண் எடுக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்வதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • பல்வேறு ஏரிகளில், உரிய அனுமதியுடன் அதிக அளவில் வண்டல் மண் எடுக்கப்படுகிறது.
    • பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுப்ப ணித்துறை, உள்ளாட்சி த்துறை கட்டுப்பாட்டில் ஏரிகள் உள்ளன. பல்வேறு ஏரிகளில், உரிய அனுமதியுடன் அதிக அளவில் வண்டல் மண் எடுக்கப்படுகிறது.ஆனால் திண்டிவனம் அய்யன் தோப்பு அருகே உள்ள தாங்கல் ஏரியில் வண்டல் மணல் அள்ளுவது தொடர்கதையாக உள்ளது. பொக்லைன் மூலம், இரவில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு உத்தரவை மீறி, நாளுக்கு நாள் மண் திருட்டு, அதிகரித்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து திண்டிவனம் தாசில்தார் வசந்த கிருஷ்ணனிடம் கூறுகையில் தாங்கல் ஏரியில் மணல் அல்லுவது பற்றி புகார் வந்துள்ளது. உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் .மேலும் அனுமதி இன்றி மணல் அள்ளுவதைப் பற்றி புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

    • அதிகாரிகள் கண்டதும் கும்பல் ஓட்டம்
    • ஏரியில் மண் அள்ளுவதாக புகார்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமம் கொட்டாறு ஏரி புறம்போக்கு இடத்தில் அனுமதியின்றி மண் அள்ளிக்கொண்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் கவுரி கிராம நிர்வாக அலுவலர் தீர்த்தக்கிரி மற்றும் சின்னமோட்டூர் கிராம நிர்வாக அலுவலர் மல்லப்ள்ளி, மல்லகுண்டா கிராம உதவியாளர்கள் மற்றும் வருவாய் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அதிகாரிகளை கண்டு அங்கிருந்தவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடி விட்டனர் இதனால் வருவாய் துறையினர் மண் அள்ளிக்கொண்டு இருந்த பொக்லைன் எந்திரம் டிப்பர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ×