மண் கடத்திய பொக்லைன் எந்திரம், லாரி பறிமுதல்

அதிகாரிகள் கண்டதும் கும்பல் ஓட்டம் ஏரியில் மண் அள்ளுவதாக புகார்
மணல் திருட்டை தடுக்க திருப்பத்தூர் மாவட்ட அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மணல் திருட்டை தடுக்க திருப்பத்தூர் மாவட்ட அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமம் கொட்டாறு ஏரி புறம்போக்கு இடத்தில் அனுமதியின்றி மண் அள்ளிக்கொண்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் கவுரி கிராம நிர்வாக அலுவலர் தீர்த்தக்கிரி மற்றும் சின்னமோட்டூர் கிராம நிர்வாக அலுவலர் மல்லப்ள்ளி, மல்லகுண்டா கிராம உதவியாளர்கள் மற்றும் வருவாய் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அதிகாரிகளை கண்டு அங்கிருந்தவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடி விட்டனர் இதனால் வருவாய் துறையினர் மண் அள்ளிக்கொண்டு இருந்த பொக்லைன் எந்திரம் டிப்பர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com