

களக்காடு:
களக்காடு சப்-இன்ஸ் பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் கடம்போடு வாழ்வு குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது களக்காடு கீழத்தெருவை சேர்ந்த சதீஸ் (வயது25), சுப்பிரமணியபுரம் வடக்குத் தெருவை சேர்ந்த பாலதுளசி (34) ஆகியோர் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் எந்தவித அனுமதியும் இன்றி மண்ணை திருடி வயல் வரப்பில் வைத்து கொண்டிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் இருவரும் தப்பி ஓடினர். அவர்களை துரத்தி பிடித்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மண்திருட்டுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.