search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelery Flush"

    ஈரோடு மாவட்டத்தில் முகவரி கேட்பது போல் மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி கொல்லம்பாளையம் சோலையப்பன் வீதியில் வசித்து வரும் லிங்கப்பன் மனைவி கண்ணம்மாள் (வயது 78) வீட்டு வாசலில் நின்றிருந்த போது முகவரி கேட்பது போல் வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். அப்போது இது பற்றி அவர் புகார் கொடுக்கவில்லை.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதியோர்களுக்கு உதவும் வகையில் சீனியர் சிட்டிசன் மொபைல் செயலியை ஈரோடு மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் அறிவித்திருந்தார்.

    இது குறித்து அறிந்த கண்ணம்மாள் சீனியர் சிட்டிசன் மொபைல் செயலி மூலம் தன்னுடைய நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றதாக தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    அரக்கோணம் அருகே தலைமை ஆசிரியையை தாக்கி நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் தக்கோலம், கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அரக்கோணம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 29), மேலாந்தூரை கிராமத்தை சேர்ந்த தினேஷ் (24) என்பதும், அரக்கோணம், ஏ.என்.கண்டிகை பகுதியை சேர்ந்த தலைமை ஆசிரியை கோமளாவை தாக்கி நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 பவுன் நகையையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
    போரூர் அருகே வீட்டுக்குள் புகுந்த பக்கத்து வீட்டு பெண் மிளகாய் பொடி தூவி மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் குறித்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    போரூரை அடுத்த காரம்பாக்கம் சமயபுரம், 5-வது தெருவை சேர்ந்தவர் பொம்மியம்மாள் நேற்று முன்தினம் இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பொம்மியம்மாள் மீது மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டார்.

    விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டது பக்கத்து வீட்டில் வசிக்கும் தனலட்சுமி என்பது தெரிந்தது. வீட்டு வேலைகள் செய்து வரும் அவர் குடும்ப வறுமையில் நகை பறிப்பில் ஈடுபட்டதாக கூறி உள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    அரியலூர் அருகே வீட்டிற்குள் புகுந்து தாய்-மகளிடம் 10¾ பவுன் தாலி சங்கிலியையும் பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், வாரணவாசி கீழத் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது மனைவி மகாலட்சுமி(வயது 47). இவர்களுக்கு சிலம்பரசன் என்கிற மகனும், இலக்கியா(28) என்ற மகளும் உள்ளனர்.

    சிலம்பரசன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இலக்கியாவை அரியலூர் மாவட்டம் இலந்தைக்கூடம் கிராமத்தை சேர்ந்த கனகராஜ்(38) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். கனகராஜ் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், கடந்த சில ஆண்டுகளாகவே இலக்கியா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் நள்ளிரவு ராமசாமி வயலுக்கு புறப்பட்டார். அப்போது அவர் கதவை பூட்டாமல் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் 2 பேர் ராமசாமி வீட்டிற்குள் புகுந்தனர். அப்போது வீட்டிற்குள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த இலக்கியா கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த இலக்கியா கையால் சங்கிலியை பிடித்துக் கொண்டு மர்ம நபர்களுடன் போராடினார். அப்போது மர்ம நபர்கள் அதே சங்கிலியை வைத்து அவரது கழுத்தை நெரித்தனர். இதனால் வலியால் அலறி துடித்த சங்கிலியில் இருந்து கையை எடுத்து விட்டார். இதில் சங்கிலியை மர்ம நபர்கள் வேகமாக பிடித்து இழுத்ததில், அவர்களின் கையில் சங்கிலி சிக்கியது.

    மகளின் அலறல் சத்தத்தை கேட்டு எழுந்த மகாலட்சுமி திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். ஆனாலும் மர்ம நபர்கள் மகாலட்சுமியின் கழுத்தில் கிடந்த 2¾ பவுன் சங்கிலியையும் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் வீட்டின் முள் வேலியை தாண்டி குதித்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசில் ராமசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ஈரோடு ஜவுளிக்கடை அதிபரை கடத்தி நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் சித்தையன் (வயது 48). இவர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சாஸ்திரி நகர் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் சித்தையனை கடத்தி சென்றது.

    சித்தையன் வைத்திருந்த ரூ. 2 லட்சம் பணத்தையும் 5 பவுன் நகையையும் அந்த கும்பல் பறித்துக் கொண்டது. அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்த சித்தையன் இது குறித்து சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பெத்த நாயக்கன்பட்டியை சேர்ந்த மதன்குமார் (42) என் பவரை கைது செய்தனர். பின்னர் மதன்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    மதன்குமார் மீது ஏற்க னவே தாராபுரம், பழனி, திண்டுக்கல் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    மதன்குமார் தொடர்ந்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பரிந்துரை செய்தார்.

    கலெக்டர் உத்தரவுப்படி மதன்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதற்கான உத்தரவை கோவை மத்திய சிறையில் உள்ள அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர். #tamilnews
    பஸ்சுக்காக காத்திருந்த அரசு ஆஸ்பத்திரி நர்சிடம் 5 பவுன் நகையை மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை எஸ்.ஆலங்குளம் டெலிபோன் காலனியைச் சேர்ந்தவர் சலீம். இவரது மனைவி மகபூப்ஜான் (வயது 53). இவர் கருங்காலக்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று காலையில் மகபூப்ஜான் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக வீட்டின் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று மகபூப்ஜான் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை நகரில் நாள் தோறும் வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். #tamilnews
    தேவதானப்பட்டியில் அரசு அதிகாரி மனைவியிடம் நகை பறித்தது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மேல்மந்தை தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தேனி அரசு சார்நிலை கருவூலத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று தனது மனைவி சுசீலாவுடன் மோட்டார் சைக்கிளில் தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க சென்றார்.

    பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் அவர்கள் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். காட்ரோடு பிரிவில் இவர்களை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென அவர்கள் மீது மோதுவது போல் இடித்தனர்.

    இதில் நிலை தடுமாறி செல்வமும், அவரது மனைவியும் கீழே விழுந்தனர். அந்த சமயத்தில் சுசிலாவின் கழுத்தில் இருந்த 7½ பவுன் தங்க சங்கிலியை அவர்கள் பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

    இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். #tamilnews
    சூலூரில் நீதிபதி மனைவியிடம் 9 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் குறித்து கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி.

    இவர் சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு செல்வபாண்டி தனது மனைவி மகேஷ்வரியுடன்( 40) கடைக்கு சென்றுவிட்டு தங்களது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    சூலூர் பெரிய குளத்தின் அருகே வரும் போது திடீரென்று பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மகேஸ்வரி அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதுபற்றி சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. எனினும் சந்தேகத்திற்கிடமாக யாரும் சிக்கவில்லை.

    சம்பவ இடத்தின் அருகே உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நகை பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    சூலூர் பகுதியில் தொடர் திருட்டு, நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளை சம்பவங்களை தடுக்கக்கோரி சமீபத்தில் பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர். பின்னர் அனைத்துகட்சி சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    ×