search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JNU"

    • டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்லைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் தேர்தல் நடைபெற்றது
    • தமிழ் நாட்டில் NOTA வுக்கு கிடைக்கும் வாக்குதான் BJP க்கு கிடைக்க போகிறது

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர் அமைப்புகளை சேர்ந்த இளைஞர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலுக்கு முன்பு அத்தனை வட இந்திய ஊடகங்களும் சங்க பரிவாரின் மாணவர் அமைப்பான ABVP பெரும் வெற்றியை ஈட்டும் என திட்டவட்டமாக கூறினர். வாக்கு எண்ணிக்கையின் போதும் அப்படியே ஒரு பிம்பத்தை உருவாக்கினர். கடைசியில் ABVP இருந்த இடமே தெரியாமல் சென்றுள்ளது.

    இதுதான் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கான டிரெய்லர். ஊடகங்கள் "பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும், தமிழ்நாட்டில் 25% வாக்குகளை பெறும்" என நிர்பந்தத்தால் மிகை படுத்தி பேசுகின்றன. ஆனால் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையத்தான் போகிறது. அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் NOTA வுக்கு கிடைக்கும் வாக்குதான் BJP க்கு கிடைக்க போகிறது என்று பதிவிட்டுள்ளார்.

    டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்லைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் தேர்தல் நடைபெற்றது. அதில், ஏ.பி.வி.பி வேட்பாளரான உமேஷ் சி அஜ்மீராவை வீழ்த்தி, ஆல் இந்தியா மாணவர்கள் சங்க வேட்பாளர் தனஞ்ஜெயா வெற்றி பெற்றார். 

    • ஆல் இந்தியா மாணவர்கள் சங்கம் சார்பில் போட்டியிட்ட தனஞ்ஜெய் 2598 வாக்குகள் பெற்றார்.
    • ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட உமேஷ் சி அஜ்மீரா 1676 வாக்குகள் பெற்றார்.

    டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்லைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த இடதுசாரி குழு, அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷாத் (ABVP) ஆகிய இரண்டு அணிகள் போட்டியிட்ட ஒருங்கிணைந்த இடதுசாரி குழு ஆல் இந்தியா மாணவர்கள் சங்கம் (AISA) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த அணி சார்பில் தனஞ்ஜெய் போட்டியிட்டார். ஏபிவிபி சார்பில் உமேஷ் சி அஜ்மீரா போட்டியிட்டார்.

    இதில் தனஞ்ஜெயா 2598 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். உமேஷ் சி அஜ்மீரா 1676 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

    தனஞ்ஜெயா பீகார் மாநிலம் கயாவைச் சேர்ந்தவர். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 1996-97-ல் பட்டி லால் பைர்வா என்பவர் மாணவர்கள் சங்கம் தேர்தல் வெற்றி பெற்றிருந்தார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தார். அதன்பின் சுமார் 27 வருடங்கள் கழித்து தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஜேஎன்யு மாணவர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

    வெற்றி பெற்ற தனஞ்ஜெய் கூறுகையில் "இந்த வெற்றியின் மூலம் மாணவர்கள் வெறுப்பு அரசியல், வன்முறையை நிராகரித்துள்ளனர். மாணவர்கள் மீண்டும் ஒருமுறை எங்கள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். நாங்கள் மாணவர்களுடைய உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்" என்றார்.

    உயிரிழந்தவர் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் இல்லை என்பதும் தெரியவந்தது.
    புது டெல்லி:

    டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் யமுனா விடுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் நேற்று மாணவர்கள் நடந்து சென்றபோது துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தனர். இதையடுத்து அருகில் சென்று பார்த்தபோது அங்கு மரத்தில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் இறந்தவர் 40 வயதுடைய ஆண் என்பது மட்டும் தெரியவந்தது. ஆனால் அவரது அடையாளம் தெரியப்படவில்லை.

    மேலும் உயிரிழந்தவர் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து யாராவது அவரை கொலை செய்து தூங்கில் தொங்கவிட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித்தை உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள டெல்லி அரசியல் சாசன சபையில் வைத்து மர்ம நபர் ஒருவர் சுட முயற்சி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #UmarKhalid #JNU
    புதுடெல்லி:

    டெல்லி அரசியல் சாசன சபையில் ‘வெறுப்புணர்வுகளுக்கு எதிரான ஒன்றினைவோம்’ என்ற நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், 
    சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், கோரக்பூர் முன்னாள் டாக்டர் கபீல் கான், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவரான உமர் காலித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், உமர் காலித்தை குறிவைத்து மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள இந்த பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சமீபத்தில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உமர் காலித் போலீசில் புகார் அளித்திருந்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தில் இருக்கும் உமர் காலித், மதவாத அரசியல்களை பலமுறை விமர்சித்து பேசியிருந்தார். இதனால், அவர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ×