search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Players"

    ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இடம்பெற போவது டோனியா, ரெய்னாவா அல்லது ரோகித் சர்மாவா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. #IPL2019 #200sixes #MSDhoni #SureshRaina #RohitSharma
    ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் வருகிற 23-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருப்பதால் ரசிகர்களிடம் ஐபிஎல் ஜுரம் தொற்றிக் கொண்டது. இதனால் ஐபிஎல் தொடர் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை நெருங்குவது யார் என்ற போட்டியில் எம்.எஸ். டோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் உள்ளனர்.

    இதுவரை நடந்துள்ள ஐபிஎல் போட்டிகளில் டோனி 186 சிக்சர்களும், சுரேஷ் ரெய்னா 185 சிக்சர்களும், ரோகித் சர்மா 184 சிக்சர்களும் அடித்துள்ளனர்.



    இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சிக்சர்கள் அடித்து 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.

    ஐபிஎல் தொடரில் சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் 292 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2019 #200sixes #MSDhoni #SureshRaina #RohitSharma
    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் இன்று புத்தாண்டு விருந்து அளித்தார். #ScottMorrison #NewYearHost #IndianPlayers #AustralianPlayers
    சிட்னி:

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற டி 20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், 3 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகிக்கிறது.



    இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு தனது இல்லத்தில் இன்று புத்தாண்டு விருந்தளித்து அசத்தினார்.

    இந்த விருந்தில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி உள்பட அனைத்து வீரர்களும், அணி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    மேலும், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களது பாரம்பரிய நீல நிற உடையுடன் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. #ScottMorrison #NewYearHost #IndianPlayers #AustralianPlayers
    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ராகுல் எகிப்து வீரர் மோன்டாசரிடம் தோல்வியை தழுவினர்.
    சென்னை:

    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ராகுல் பாய்தா 4-11, 9-11, 9-11 என்ற நேர் செட் கணக்கில் மோன்டாசரிடம் (எகிப்து) வீழ்ந்தார். யாசிர் பாத்டே, வீர் சோட்ரானி ஆகிய இந்திய வீரர்களும் தோல்வியை தழுவினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து வீராங்கனை அலிஸ் கிரீன் 11-13, 11-4, 11-8, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் செங் நகா சிங்கை (ஹாங்காங்) தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் ரோவன் எலராபி (எகிப்து) 11-4, 11-8, 11-2 என்ற நேர் செட்டில் இந்திய வீராங்கனை ஆஷிதாவை பந்தாடினார். இதே போல் ஐஸ்வர்யா, சன்யா வட்ஸ் ஆகியோரும் 2-வது சுற்றை தாண்டவில்லை. இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. 
    இந்தோனேசியாவில் நடக்க இருக்கும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் 620 வீரர்-வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. #AsianGames2018
    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டுப் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு தென் கொரியாவில் உள்ள இன்ஜியான் நகரில் நடந்தது.

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 18-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா - பலேம்பங்க் நகரங்களில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் 620 வீரர்-வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. 273 அதிகாரிகள் உள்பட 900 பேர் அடங்கிய அணி பங்கேற்க இருப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிநகர் பத்ரா தெரிவித்துள்ளார். 2370 பேர் கொண்ட உத்தேச பட்டியலில் இருந்து 900 பேர் குறைக்கப்பட்டு அணி இறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    2014-ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 541 பேர் கொண்ட அணி கலந்து கொண்டு 28 பிரிவுகளில் பங்கேற்று 57 பதக்கங்களை வென்றது. #AsianGames2018
    ×