search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harry Kane"

    • ஹரி கேன் கடந்த 19 ஆண்டுகளாக வடக்கு லண்டன் அணிக்காக விளையாடி வந்தார்.
    • 100 மில்லியன் பவுண்டுகளுக்கு குறைவான எந்த ஒப்பந்தமும் ஏற்க முடியாது என டோட்டன்ஹாம் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.

    30 வயதான ஹரி கேன் கடந்த 19 ஆண்டுகளாக வடக்கு லண்டன் அணிக்காக விளையாடி வந்தார். 100 மில்லியன் பவுண்டுகளுக்கு குறைவான எந்த ஒப்பந்தமும் ஏற்க முடியாது என டோட்டன்ஹாம் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில், ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிக்காக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மொத்தம் 103 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கு ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.

    ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிக்காக களமிறங்க இருப்பதால், மருத்துவ பரிசோதனைகளை முடித்துக்கொள்ள ஹரி கேன் ஜெர்மனிக்கு செல்ல இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

    பார்சிலோனா அணிக்காக கடந்த சீசனில் 68 போட்டியில் 34 கோல்கள் அடித்த மெஸ்சி, ஐந்தாவது முறையாக தங்க ஷூவை தட்டிச் சென்றார். #Messi
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளில் விளையாடும் வீரர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக கோல்கள் அடிக்கும் வீரர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் தங்க ஷூ வழங்கப்படும். 2017-18 சீசனில் பார்சிலோனாவின் மெஸ்சி, லிவர்பூல் அணியின் முகமது சாலா, டோட்டன்ஹாம் அணியின் ஹாரி கேன் ஆகியோருக்கிடையே தங்க ஷூவை பெற கடும் போட்டி நிலவியது.

    இறுதியில் 68 போட்டிகளில் 34 கோல்கள் அடித்த மெஸ்சி தங்க ஷூவை தட்டிச் சென்றார். மெஸ்சி இந்த விருதை ஐந்தாவது முறையாக வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்கு முறை வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 52 போட்டிகளில் 26 கோல்கள் அடித்திருந்தார்.

    தங்க ஷூவை வென்ற மெஸ்சி இதுபற்றி கூறுகையில் ‘‘உண்மையிலேயே நான் கால்பந்து போட்டியை தொடங்கும்போது இது நடக்கும் என்று நினைக்கவே இல்லை. நான் இந்த போட்டியை மிகவும் விரும்புகிறேன். இந்த விருதை மீண்டும் பெறுவேன் என்று நினைத்தது கிடையாது’’ என்றார்.
    உலகக்கோப்பையை இங்கிலாந்து வென்றால், வெற்றியை கொண்டாட திங்கட்கிழமை வங்கி விடுமுறை அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் 1-0 என பிரான்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இங்கிலாந்து அணி 1990-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும் என்று இங்கிலாந்து மக்கள் நம்புகிறார்கள். இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெறுகிறது. ஒருவேளை இங்கிலாந்து வெற்றி பெற்றால் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாட பொது வங்கி விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



    இதுகுறித்து இங்கிலாந்து அரசு இணையத்தளத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்து நாடாளுமன்றம் இதுகுறித்து விவாதம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #HarryKane  #RussiaWorldCup2018 #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்னும் மிகப்பெரிய போட்டி காத்திருக்கிறது என்று இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் தெரிவித்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை காலிறுதி ஆட்டத்தில் சுவீடனை 2-0 என வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் குரோசியாவை எதிர்கொள்கிறது. குரோசியாவை வீழ்த்தினால் இறுதிப் போட்டியில் பெல்ஜியம் அல்லது பிரான்ஸ் அணியை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். அரையிறுதிக்கு முன்னேறிய பிறகு நாங்கள் வெற்றியின் விளிம்பில் உள்ளோம் என்று இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஹாரி கேன் கூறுகையில் ‘‘அரையிறுதிக்கு முன்னேறிய பிறகு, நாங்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறோம். இது அனேகமாக மூழ்காது. இன்னும் பெரிய போட்டி காத்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்’’ என்றார்.
    கொலம்பியாவிற்கு எதிரான ஆட்டத்தின்போது காயம் அடைந்த ஹாரி கேன் சுவீடனுக்கு எதிராக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினத்துடன் நாக்அவுட் போட்டிகள் முடிவடைந்தது. நாளை காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. நாக்அவுட் சுற்றில் இங்கிலாந்து கொலம்பியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 4-3 என வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின்போது கொலம்பியா வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இங்கிலாந்து வீரர்களும் அதிக அளவில் மோதல் போக்கில் ஈடுபட்டனர். இங்கிலாந்து அணி 2 மஞ்சள் அட்டை பெற்றது. ஆனால் கொலம்பியா 6 மஞ்சள் அட்டை பெற்றது.



    இந்த போட்டியின்போது இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி கேன், யங், வார்டி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் நாளைமறுநாள் நடைபெறும் சுவீடனுக்கு எதிரான காலிறுதியில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்தது.



    இந்நிலையில் ஹாரி கேன் உடற்தகுதி பெற்று விட்டார் என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது. அவருடன் மார்கஸ் ரஷ்போர்டு, வால்கர் ஆகியோரும் உடற்தகுதி பெற்றுள்ளனர். ஆனால், யங் மற்றும் வார்டி உடற்தகுதி பெறாததால் சுவீடனுக்கு எதிராக விளையாடுவது சந்தேகம் எனக்கூறப்படுகிறது.
    டி20 போட்டியில் கண்ட தோல்வியை மறந்து, கால்பந்து அணியின் பெனால்டி ஷூட்அவுட்டை சந்தோசமாக கண்டுகளித்தனர் இங்கிலாந்து வீரர்கள். #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடியவும், இங்கிலாந்து - கொலம்பியா மோதிய உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்று ஆட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியது.

    நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால், கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் கடைபிடிக்கப்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் இங்கிலாந்து 4-3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.



    இந்தியாவிற்கு எதிரான தோல்வியை பொறுட்படுத்தாமல் கால்பந்து போட்டியின் பெனால்டி ஷூட்டை சந்தோசமாக கண்டுகளித்தனர் இங்கிலாந்து வீரர்கள்.
    பெல்ஜியத்திற்கு எதிராக ஹாரி கேனை இறக்கியிருந்தால் அபத்தமானதாக இருந்திருக்கும் என இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கடைசி லீக்கில் ‘ஜி’ பிரிவில் இடம்பிடித்திருந்த பலம் வாய்ந்த அணிகளான இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் வெற்றி பெற்று ‘ஜி’ பிரிவில் முதல் இடம் பிடித்தால் காலிறுதி, அரையிறுதி மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து 8 வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது. இந்த போட்டியில் பெல்ஜியம் 1-0 என வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது.

    இங்கிலாந்து ரசிகர்கள் பெரும்பாலானோர் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதற்காக கடைசி 10 நிமிடத்தில் ஹாரி கேனை களம் இறக்கியிருக்க வேண்டும் என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்கள்.

    ஆனால், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான காரேத் சவுத்கேட், ஹாரி கேனை களம் இறக்காதது சரியான முடிவே என்று கூறியுள்ளார். இதுகுறித்து காரேத் சவுத்கேட் கூறுகையில் ‘‘10 நிமிடத்திற்காக ஹாரி கேனை நாங்கள் களம் இறக்கியிருந்தால், யாராவது ஒருவர் அவரது முழங்காலை தாக்குவதற்கான சம்பவம் நடைபெற்றிருக்கும். அப்படி நடந்திருந்தால் அது அபத்தமானதாக இருந்திருக்கும். நாக்அவுட் சுற்று மிகவும் முக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.



    லீக் சுற்றின் போது உடற்தகுதியில் சிறப்பான அளவில் இருக்க வேண்டும் என்று முயற்சி செய்தோம். அடுத்த வாரத்தில் என்ன நடந்தாலும் அது சரியான முடிவாக இருக்கும். நாம் வெற்றி பெற்றிருந்தால்தான் சரியான முடிவாக இருந்திருக்கும் என்று மக்கள் கூறலாம். ஆனால், வரும் போட்டிகளில் எக்ஸ்ட்ரா நேரம் வரை போட்டி போகலாம். அதனால் நாம் ரிஸ்க் எடுக்க வேண்டியதில்லை’’ என்றார்.
    2-வது இடம் பிடித்தால் அரையிறுதி வரை எளிதாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து, பெல்ஜியம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இன்று ‘ஜி’ மற்றும் ‘எச்’ பிரிவில் இடம்பிடித்துள்ள 8 அணிகள் தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் மோதுகின்றன.

    ‘ஜி’ பிரிவில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் மூலம் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இங்கிலாந்து 8 கோல்கள் அடித்துள்ளது. 2 கோல்கள் வாங்கியுள்ளது. பெல்ஜியமும் அதேபோன்றுதான். இரு அணிகளுக்கு இடையிலான மஞ்சள் அட்டை வாங்கிய வித்தியாசம் அடிப்படையில் இங்கிலாந்து முதல் இடம் பிடித்துள்ளன.



    இன்றைய போட்டி டிராவில் முடிந்தால் இங்கிலாந்து முதல் இடத்தில் நீடிக்க வாய்ப்புள்ளது. பெல்ஜியம் 2-வது இடம்பிடிக்கும். ஆனால் ‘ஜி’ பிரிவில் முதல் இடம் பிடித்தால் அடுத்த சுற்றுகள் கடினமாக இருக்கும். அதேவேளையில் 2-வது இடம் பிடித்தால் எளிதாக இருக்கும் வகையில் அட்டவணை உள்ளது.

    இங்கிலாந்து, பெல்ஜியத்தில் 2-வது இடம் பிடிக்கும் அணி நாக்அவுட் சுற்றில் கொலம்பியா, ஜப்பான் அல்லது செனகல் அணியை எதிர்கொள்ள வேண்டும். காலிறுதியில் சுவிட்சர்லாந்து அல்லது ஸ்வீடனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அரையிறுதியில் ஸ்பெயின், ரஷியா, குரோசியா அல்லது டென்மார்க் ஆகியவற்றில் ஒரு அணியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.



    விளையாட்டில் விட்டுக்கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும். அதுவேளையில் எளிதாக இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற விருப்பமும் இருக்கும். இதனால் இரண்டு அணிகளுக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
    ஹாரி கேன் ஹாட்ரிக்கால் கோல் மழை பொழிந்த இங்கிலாந்து 6-1 என பனமாவை துவம்சம் செய்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ‘ஜி’ பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து அறிமுக அணியான பனாமை எதிர்கொண்டது.

    பலம் வாய்ந்த இங்கிலாந்து தொடக்கம் முதலே கோல் மழை பொழிந்தது. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் முதல் கோலை பதிவு செய்தார். 22-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கேப்டன் ஹாரி கேன் கோல் அடித்தார். 36-வது நிமிடத்தில் லிங்கார்டு கோல் அடித்தார். 40-வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் மேலும் ஒரு கோல் அடித்தார். 45-வது நிமிடம் முடிந்து காயத்திற்கான நேரத்தின் முதல் நிமிடத்தில் மற்றொரு பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஹாரி கேன் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து முதல் பாதி நேரத்தில் 5-0 என முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேரத்திலும் இங்கிலாந்து கையே ஓங்கியது. 62-வது நிமிடத்தில் ஹாரி கேன் மேலும் ஒரு கோல் அடித்தார். ஹாரி கேனின் ஹாட்ரிக் கோலால் 62-வது நிமிடத்தில் இங்கிலாந்து 6-0 என முன்னிலைப் பெற்றது. 62-வது நிமிடத்தில் கோல் அடித்ததும் ஹாரி கேன், லிங்கார்டு உள்பட முன்னணி வீரர்கள் வெளியேறினார்கள்.



    அதன்பின் இங்கிலாந்து ஆட்டத்தில் சற்று வேகம் குறைந்தது. இதை பயன்படுத்தி பனாமா 78-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. ப்ரீ ஹிக்கை பயன்படுத்தி அடித்த பந்தை, கோல் எல்லைக்குள் வைத்து பலோய் காலால் உதைத்து கோலாக்கினார்.

    அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இங்கிலாந்து 6-1 என வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் 2-0 என வெற்றி பெற்றிருந்ததால், இரண்டு வெற்றியுடன் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி கேன் நியமிக்கப்பட்டுள்ளார். #HarryKane #Englandcaptain #FIFAWorldCup

    லண்டன்:

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி கேன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் அற்புதமான கேப்டன்ஷிப் திறமை இருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் சவுத் கேட் கூறியுள்ளார்.

    ஏற்கனவே உலக கோப்பை தகுதி சுற்றில் அணியை வழிநடத்திய அனுபவம் பெற்றுள்ள 24 வயதான ஹாரி கூறுகையில், ‘உலக கோப்பை அணிக்கு கேப்டனாக இருப்பது மிகப்பெரிய கவுரவமாகும். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்’ என்றார். ஹாரி கேன் இதுவரை 23 ஆட்டங்களில் விளையாடி 12 கோல்கள் அடித்துள்ளார். #HarryKane #Englandcaptain #FIFAWorldCup
    ரஷியாவில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இங்கிலாந்து அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #WorlCup2018
    ரஷியாவில் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற இருக்கிறது. இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு நாடும் தங்களது அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.



    இந்நிலையில் இங்கிலாந்து அணி ஹேர் கேன்-ஐ கேப்டனாக நியமித்துள்ளது. ஹரி கேன் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறது. இந்த சீசனில் 30 கோல் அடித்து அசத்தியுள்ளார். இவரது ஆட்டத்தால் டோட்டன்ன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
    ×