search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "England vs sweden"

    உலகக்கோப்பை கால்பந்து காலிறுதியில் சுவீடனை 2-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து #WorldCup2018 #SWEENG
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய 3-வது காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. போட்டி தொடங்கிய நேரத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் ஆர்வம் இல்லாமல் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

    ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் இங்கிலாந்திற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அஷ்லே யங் பந்தை உதைக்க மேகுய்ர் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் முதல் பாதி நேரத்தில் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் சுவீடன் வீரர்கள் அட்டக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் இங்கிலாந்து கோல்கீப்பர் அதை திறமையாக தடுத்தார்.



    அதேவேளையில் இங்கிலாந்து வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் விளையாடினார்கள். ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் வலது கார்னர் பக்கத்தில் இருந்து அடித்த பந்தை லிங்கார்டு தலையால் முட்டி கோல் அடிக்கும் வகையில் தூக்கி அடித்தார். அதை டேல் அலி தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் இங்கிலாந்து 2-0 என முன்னிலைப் பெற்றது.

    இரண்டு கோல் அடித்தாலும் இங்கிலாந்து டிபென்ஸ் ஆட விரும்பவில்லை. தொடர்ந்த அட்டக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டனர். 77-வது நிமிடத்தில் டேல் அலி மாற்றப்பட்டார். 90-வது நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. காயம் மற்றும் ஆட்டம் நிறுத்தத்தை கணக்கிட்டு கூடுதலா 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. இந்த நேரத்திலும் கோல் அடிக்காததால் இங்கிலாந்து 2-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
    கொலம்பியாவிற்கு எதிரான ஆட்டத்தின்போது காயம் அடைந்த ஹாரி கேன் சுவீடனுக்கு எதிராக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினத்துடன் நாக்அவுட் போட்டிகள் முடிவடைந்தது. நாளை காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. நாக்அவுட் சுற்றில் இங்கிலாந்து கொலம்பியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 4-3 என வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின்போது கொலம்பியா வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இங்கிலாந்து வீரர்களும் அதிக அளவில் மோதல் போக்கில் ஈடுபட்டனர். இங்கிலாந்து அணி 2 மஞ்சள் அட்டை பெற்றது. ஆனால் கொலம்பியா 6 மஞ்சள் அட்டை பெற்றது.



    இந்த போட்டியின்போது இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி கேன், யங், வார்டி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் நாளைமறுநாள் நடைபெறும் சுவீடனுக்கு எதிரான காலிறுதியில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்தது.



    இந்நிலையில் ஹாரி கேன் உடற்தகுதி பெற்று விட்டார் என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது. அவருடன் மார்கஸ் ரஷ்போர்டு, வால்கர் ஆகியோரும் உடற்தகுதி பெற்றுள்ளனர். ஆனால், யங் மற்றும் வார்டி உடற்தகுதி பெறாததால் சுவீடனுக்கு எதிராக விளையாடுவது சந்தேகம் எனக்கூறப்படுகிறது.
    ×