என் மலர்

  செய்திகள்

  ஹாரி கேனை இறக்கியிருந்தால் அபத்தமானதாக இருந்திருக்கும்- இங்கிலாந்து பயிற்சியாளர்
  X

  ஹாரி கேனை இறக்கியிருந்தால் அபத்தமானதாக இருந்திருக்கும்- இங்கிலாந்து பயிற்சியாளர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெல்ஜியத்திற்கு எதிராக ஹாரி கேனை இறக்கியிருந்தால் அபத்தமானதாக இருந்திருக்கும் என இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #WorldCup2018
  உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கடைசி லீக்கில் ‘ஜி’ பிரிவில் இடம்பிடித்திருந்த பலம் வாய்ந்த அணிகளான இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் மோதின.

  இந்த போட்டியில் வெற்றி பெற்று ‘ஜி’ பிரிவில் முதல் இடம் பிடித்தால் காலிறுதி, அரையிறுதி மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து 8 வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது. இந்த போட்டியில் பெல்ஜியம் 1-0 என வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது.

  இங்கிலாந்து ரசிகர்கள் பெரும்பாலானோர் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதற்காக கடைசி 10 நிமிடத்தில் ஹாரி கேனை களம் இறக்கியிருக்க வேண்டும் என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்கள்.

  ஆனால், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான காரேத் சவுத்கேட், ஹாரி கேனை களம் இறக்காதது சரியான முடிவே என்று கூறியுள்ளார். இதுகுறித்து காரேத் சவுத்கேட் கூறுகையில் ‘‘10 நிமிடத்திற்காக ஹாரி கேனை நாங்கள் களம் இறக்கியிருந்தால், யாராவது ஒருவர் அவரது முழங்காலை தாக்குவதற்கான சம்பவம் நடைபெற்றிருக்கும். அப்படி நடந்திருந்தால் அது அபத்தமானதாக இருந்திருக்கும். நாக்அவுட் சுற்று மிகவும் முக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  லீக் சுற்றின் போது உடற்தகுதியில் சிறப்பான அளவில் இருக்க வேண்டும் என்று முயற்சி செய்தோம். அடுத்த வாரத்தில் என்ன நடந்தாலும் அது சரியான முடிவாக இருக்கும். நாம் வெற்றி பெற்றிருந்தால்தான் சரியான முடிவாக இருந்திருக்கும் என்று மக்கள் கூறலாம். ஆனால், வரும் போட்டிகளில் எக்ஸ்ட்ரா நேரம் வரை போட்டி போகலாம். அதனால் நாம் ரிஸ்க் எடுக்க வேண்டியதில்லை’’ என்றார்.
  Next Story
  ×