search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electricity workers"

    • தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
    • பல்வேறு சலுகைகள் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டி உள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் , கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசாணையால் மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு, சம்பள உயர்வு, பஞ்சபடி ,புதிய பதவிகள் பெறுவது உட்பட பல்வேறு சலுகைகள் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டி உள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பஞ்சப்படி உயர்வு காலம் தாழ்த்தி தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு பறிக்கும் விதமாக அரசாணை உள்ளதால் அரசாணைைய உடனே ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு தொழிலாளர் சங்கம் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் மாரிமுத்து ,கணக்காளர் தொழிலாளர் பொன்ராஜ், சிஐடியு. கோவிந்தன், ஏடிபி. சக்திவேல் ,ஐக்கிய சங்கம் செல்வராஜ், என்ஜினீயர் சங்கம் ஜெயக்குமார், என்ஜினீயர் கழகம் செல்வகுமார், மோகன் உட்பட 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் ,பெண்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை அருகே மின்வாரிய பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • மோட்டார் சைக்கிள் மோதி விபத்து நடந்தது.

    மதுரை

    மதுரை கடச்சனேந்தலை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் தமிழக மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் சரவணகுமாரும், மற்றொரு ஊழியர் வடிவேல் என்பவரும் சம்பவத்தன்று மதியம் மின்வாரிய பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அது சரவணகுமார், வடிவேல் மீது மோதியது. இதில் சரவணகுமாருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. ஆனால் தூக்கி வீசப்பட்ட வடிவேலுக்கு உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டது.

    இதில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சரவணகுமார் அப்பன் திருப்பதி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை படுவேகமாக ஓட்டி வந்ததாக ஆனையூர் முகமது ரியாஸ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணி நிரந்தரம் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 329 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விழுப்புரம்:

    மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், 5.1.98 முதல் 2008 வரை பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு.) விழுப்புரம் கிளை சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார்.

    இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முத்துக்குமார், திட்ட தலைவர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சிவசங்கரன், இணை செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். உடனே விழுப்புரம் நகர போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 142 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதேபோல் கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வட்ட தலைவர் சலீம் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 187 பேரை கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதான 329 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 
    புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் மின்வாரியத்தில் பணி புரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக்கூலியாக வழங்கக்கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் மின்வாரியத்தில் பணி புரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக்கூலியாக வழங்கக்கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக்கூலியாக வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச் சர் எழுத்துப்பூர்மாக வாக்குறுதி அளித்துள்ளார். 

    அமைச்சர் அளித்துள்ள வாக்குறுதிக்கு மாறாக ரூ.240 மட்டுமே தினக்கூலியாக வழங்கப்படுகிறது. எனவே, அமைச்சர் அளித்துள்ள வாக்குறுதியை மின்சாரவாரியம் நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு  மின்ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு)  புதுக் கோட்டை வட்டத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் முகமது  லிஜின்னா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி  வைத்தார். வட்டச் செயலாளர் கலிய பெருமாள் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் அன்பு மணவாளன், சலோமி, துரை.நாராயணன் உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் மாநிலச் செய லாளர் எம்.பன்னீர்செல்வம் நிறைவுரையாற்றினார்.
    தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் சிவகங்கையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றுவோருக்கு தினக்கூலியாக ரூ.380 தரப்படும் என்ற அரசின் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் சிவகங்கையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    உண்ணாவிரதத்திற்கு மாவட்ட செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுப்புராம் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் வீரய்யா உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில செயலாளர் உமாநாத், ஓய்வுபெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, மாநில செயலாளர் கோகுலவர்மன், சி.ஐ.டி.யூ மாவட்டக்குழு உறுப்பினர் அய்யம்பாண்டி, கணேசன், மோகனசுந்தரம், ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×