search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electric board"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மின் வாரியத்திற்கு மட்டும் ரூ.1,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #GajaCyclone #TNMinister #Thangamani
    புதுக்கோட்டை:

    ‘கஜா’ புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. அவற்றை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதற்காக அமைச்சர் தங்கமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை பார்வையிட்ட அமைச்சர் தங்கமணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மின்கம்பங்கள், உயர் மின் அழுத்த கோபரங்கள், துணை மின் நிலையங்கள், மின் மாற்றிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் துரிதமாக மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 84 ஆயிரத்து 736 மின் கம்பங்கள், 4 ஆயிரத்து 320 கி.மீ. தொலைவு வரையிலான மின் கம்பிகள், 841 மின் மாற்றிகள், 201 துணை மின் நிலையங்கள் முற்றிலும் செயல் இழந்துள்ளன.

    இதனை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான மின் கம்பங்கள், உபகரணங்கள் இருப்பில் உள்ளன. நகர பகுதிகளில் 2 நாட்களிலும், கிராம பகுதிகளில் 4 நாட்களிலும் மின்சாரம் வழங்கப்படும்.


    மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியில் 4 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரம் பேர் வந்துள்ளனர். வயல்களில் சாய்ந்துள்ள மின் கோபுரங்கள் மற்றும் மின் கம்பிகள் உடனடியாக அகற்றப்பட்டு புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    பணிகள் முடிவடைந்த பகுதிகளுக்கு தற்போது மின்சாரம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மின் வாரியத்திற்கு மட்டும் ரூ.1,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. முழுமையான கணக்கீட்டுக்கு பின்னரே மொத்த மதிப்பீடு தெரியவரும்.

    மாவட்டத்தில் ஏதாவது ஒரு விதத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அது குறித்து கணக்கீடு பட்டியலில் அவர் சேர்க்கப்படுவார். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TNMinister #Thangamani
    கே.கே. நகரில் நாளை மறுநாள் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
    திருச்சி:

    திருச்சி கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, எஸ்.எம்.இ.எஸ்.சி. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், அய்யப்ப நகர், எல்.ஐ.சி. காலனி, பழனிநகர், முல்லைநகர், ஆர்.வி.எஸ். நகர், வயர்லெஸ் சாலை, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜர் நகர், ஜே.கே.நகர், சந்தோஷ் நகர், ஆனந்த நகர், கே.சாத்தனூர், ஓலைïர், வடுகப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, காஜாநகர், சிம்கோ காலனி ஆகிய பகுதிகளில் 7-ந்தேதி காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. 

    மேற்கண்ட தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் மின்வாரியத்தில் பணி புரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக்கூலியாக வழங்கக்கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் மின்வாரியத்தில் பணி புரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக்கூலியாக வழங்கக்கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக்கூலியாக வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச் சர் எழுத்துப்பூர்மாக வாக்குறுதி அளித்துள்ளார். 

    அமைச்சர் அளித்துள்ள வாக்குறுதிக்கு மாறாக ரூ.240 மட்டுமே தினக்கூலியாக வழங்கப்படுகிறது. எனவே, அமைச்சர் அளித்துள்ள வாக்குறுதியை மின்சாரவாரியம் நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு  மின்ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு)  புதுக் கோட்டை வட்டத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் முகமது  லிஜின்னா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி  வைத்தார். வட்டச் செயலாளர் கலிய பெருமாள் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் அன்பு மணவாளன், சலோமி, துரை.நாராயணன் உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் மாநிலச் செய லாளர் எம்.பன்னீர்செல்வம் நிறைவுரையாற்றினார்.
    ×