என் மலர்

  நீங்கள் தேடியது "chithirai thiruvizha"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழா விடையாற்றி உற்சவத்தையொட்டி புஷ்ப பல்லக்குகளில் 3 பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
  தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்த திருத்தலமாக போற்றப்படும் இக்கோவில், பெருமாள் வீற்றிருக்கும் பஞ்ச ரங்க கோவில்களில் ஒன்றாகும்.

  இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, இரவு என 2 வேளை பெருமாள் வீதி உலா நடைபெற்றது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான விடையாற்றி உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி ஆகிய 3 பெருமாள்களும் 3 புஷ்ப பல்லக்குகளில் தனித்தனியாக எழுந்தருளி வீதியுலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 3 பெருமாள்களையும் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இளையராஜா, நிர்வாக அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அகஸ்தீஸ்வரம் தேவி முத்தாரம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  அகஸ்தீஸ்வரம் தேவி முத்தாரம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை 7 மணிக்கு கொடியேற்றம், மாலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) பகல் 11 மணிக்கு அன்னதானம், இரவு கலை நிகழ்ச்சியும், நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.

  இதனை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம், இரவு கலைநிகழ்ச்சிகளும், அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி இரவு 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, தொடர்ந்து முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வருதல், 8-ந்தேதி காலை 8 மணிக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதல், பிற்பகல் முத்தாரம்மன் பூத வாகனத்தில் ஊர்வலம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 7 மணிக்கு கொடியிறக்கம், 8 மணிக்கு சமபந்தி விருந்து ஆகியவை நடைபெறுகிறது.

  இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் வக்கீல் மணி, பேராசிரியர் கருணாகரன், ராஜ சுந்தரபாண்டியன், ஸ்ரீனிவாசன், கோகுல கிருஷ்ணன், பொருளாளர் ராஜலிங்க பெருமாள், கணக்கர் ராஜசேகர் ஆகியோர் செய்துள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கார்களின் கண்ணாடிகளை உடைத்து செல்போன் மற்றும் நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
  மதுரை:

  மதுரை சித்திரை திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்தனர்.

  கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த சுனு (வயது 39) காரில் மதுரை வந்தார். அவர் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றிருந்த நேரத்தில் யாரோ காரின் கண்ணாடியை உடைத்துள்ளனர். அவர்கள் காருக்குள் இருந்த 4 பேக், 2 செல்போன்கள், 2 கிராம் மோதிரம் போன்றவற்றை திருடிச் சென்று விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

  திண்டுக்கல் குருநகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (48) நிறுத்தியிருந்த காரில் கண்ணாடியை உடைத்து 2 செல்போன்கள் மற்றும் ரூ.15 ஆயிரம், ஏ.டி.எம். கார்டுகள் திருடப்பட்டதாக விளக்குத்தூண் போலீசில் புகார் செய்யப்பட்டது.

  இதே போல் எல்லீஸ்நகர் வைகை தெருவைச் சேர்ந்தவர் கருத்ததுரை (34) காரிலும் கண்ணாடியை உடைத்து செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டதாக விளக்குத்தூண் போலீசில் புகார் செய்யப்பட்டது.

  கொடிக்குளம் ஆனந்த ராஜன் நகரைச் சேர்ந்த டேனியல் தங்கராஜ் (49). கடந்த 23-ந் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.

  அந்த நேரத்தில் யாரோ வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 2 சி.சி. டி.வி. காமிரா மற்றும் பொருட்களை திருடிச் சென்று விட்டனர்.

  இது குறித்த புகாரின் பேரில் கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் கள்ளழகர் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை ஆண்டாளுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து கொண்டு இறங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் மதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் போது ஆண்டாள் சூடிய மாலை அணிந்து கொண்டு இறங்கினார்.

  இதற்காக ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு பதிலாக மதுரையில் கள்ளழகர் அணிந்திருந்த பட்டு வஸ்திரம் மதுரை அழகர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அனுப்பப்பட்டது.

  இந்த பட்டு வஸ்திரத்தை ஆண்டாளுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. இதற்காக ஆண்டாள்-ரெங்கமன்னார் குறடு மண்டபத்தில் காட்சி அளித்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அழகர் அணிந்திருந்த பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.

  ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கள்ளழகர் அதிர்வேட்டுகள் முழங்க அழகர்கோவில் சேர்ந்தார். திருஷ்டி பூசணிக்காய் சுற்றி பக்தர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அழகர் திருக்கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார்.
  மதுரை சித்திரை பெருந்திருவிழாவையொட்டி கடந்த 17-ந்தேதி, அழகர்மலையில் இருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார். சிகர நிகழ்ச்சியாக தங்கக்குதிரை வாகனத்தில் கடந்த 19-ந்தேதி வைகை ஆற்றில் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 20-ந்தேதி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தலும், அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சியும், 21-ந்தேதி இரவு பூப்பல்லக்கு விழாவும் நடந்தது.

  இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பன்திருப்பதி உள்ளிட்ட மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளினார். பின்னர் அப்பன்திருப்பதியில் விடிய, விடிய திருவிழா நடைபெற்றது.

  தொடர்ந்து நேற்று பகல் 11 மணி அளவில் அழகர்கோவில் கோட்டைவாசல் பகுதிக்கு கள்ளழகர், தங்கப்பல்லக்கில் திரும்பினார். அங்கு 18-ம்படி கருப்பணசாமி கோவில் முன்பு அழகருக்கு சிறப்பு பூஜைகளுடன் வையாழி நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது.

  பின்னர் அதிர்வேட்டுகள், வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடனும் கோவில் யானை சுந்தரவள்ளி முன்னால் செல்ல கள்ளழகர் தங்கப்பல்லக்கில் வந்தார். அங்கு “கோவிந்தா... கோவிந்தா...” என கோஷத்துடன் பக்தர்கள் பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் 21 பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றி அழகரை சுற்றிவந்து திருஷ்டி கழித்தனர். தொடர்ந்து அழகர் திருக்கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார்.

  இந்த விழாவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  இந்த ஆண்டு 27 உண்டியல் பெட்டிகள் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக மதுரைக்கு சென்றுவந்தன. மொத்தம் 451 மண்டகபடிகளில் அழகர் எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த தானியங்களை பாரம்பரிய வழக்கப்படி நெற்களஞ்சியத்தில் செலுத்தினர்.

  இன்று (புதன்கிழமை) உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடலூர் கரையேறவிட்டகுப்பத்தில் கல்லை தெப்பமாக்கி அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
  1,300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவ மன்னர், சமண சமயவாதிகளின் தூண்டுதலால் திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி கடலில் வீசி எறிந்தார். அப்போது ‘சொற்றுணை வேதியன் சோதிவானவன்’ எனத்தொடங்கும் நமச்சிவாய பதிகம் பாடி, அந்த கல்லையே தெப்பமாக கொண்டு அப்பர் கரை சேர்ந்து, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்பாளை வழிபட்டார் என்று வரலாறு கூறுகிறது.

  அப்பர் கரையேறிய இடம் தான் இப்போது கரையேறவிட்டகுப்பம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அப்பர் கரையேறிய இடத்தில் அவருக்கு தனியாக கோவில் அமைக்கப்பட்டு உள்ளது.

  இந்த கோவிலில் நேற்று அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் இருந்து விநாயகர், அப்பர், பெரியநாயகி உடன் பாடலீஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தேரடி தெரு, வண்டிப்பாளையம் மெயின்ரோடு வழியாக கரையேறவிட்டகுப்பம் வந்தடைந்தார்.

  தொடர்ந்து பாடலீஸ்வரருக்கு பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு அங்குள்ள குளத்தில் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் தெப்பத்தில் அப்பர் வலம் வந்தார். பிறகு அப்பர் கரையேறி அங்குள்ள மண்டபத்தில் தீபாராதனை நடந்தது. அதையடுத்து புதுவண்டிப்பாளையம் வீதி, அப்பர் சாலை, பழைய வண்டிப்பாளையம் கற்பக விநாயகர் கோவில் வீதி வழியாக சென்று வாகீசர் மண்டகப்படியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்பிறகு பாடலீஸ்வரர், பெரியநாயகி, விநாயகர் சாமிகள், அப்பருடன் திருப்பாதிரிப்புலியூர் கோவிலை சென்றடைந்தனர். விழாவில் வண்டிப்பாளையம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொக்கநாதர், ஏழை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது.
  காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொக்கநாதர், ஏழை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. விழாவில் தினமும் ஏழைமாரியம்மன், சொக்கநாதர், காத்தவராயனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவையொட்டி 3 நாட்கள் சாமி வீதிஉலா சிறப்பாக கொண்டாடப்படும்.

  அதன்படி நேற்று முன்தினம் இரவு விசேஷ அலங்காரத்தில் ஏழைமாரியம்மன், சொக்கநாதர், காத்தவராயன் சாமி வீதிஉலா நடந்தது. குட்டைக்கரை தெரு, நித்தீஸ்வரம், எம்.எம்.ஜி நகர், வி.ஜி.நகர், முல்லைநகர் உள்ளிட்ட வீதிகள் வழியாக நேற்று அதிகாலை பி.கே சாலை வழியாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து நேற்று இரவு அன்னுசாமி வாய்க்கால் தெரு, புனிதவதியார் வீதி, அன்புநகர், வேட்டைக்காரன் வீதி, பாரதிதாசன் வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சாமி வீதிஉலா நடைபெற்றது.

  விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில்கள் தனி அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விக்ராந்த் ராஜா, நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அழகர்மலைக்கு புறப்பட்ட அவர், இன்று காலை அங்கு சென்றடைகிறார்.
  மதுரை சித்திரை திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து 17-ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதற்கிடையே அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கடந்த 17-ந் தேதி மதுரைக்கு புறப்பட்டார். அவரை புதூர் மூன்றுமாவடி, தல்லாகுளம் பகுதியில் பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நடந்தது.

  அதை தொடர்ந்து கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் கடந்த 19-ந் தேதி எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.

  அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் அழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது. அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்துடன் கிளம்பிய கள்ளழகர் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார்.

  அங்கிருந்து கருப்பணசாமி கோவிலில் இரவு 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து அழகர்மலை நோக்கி புறப்பட்டார். தல்லாகுளத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்ட அவர் அவுட்போஸ்ட், ரிசர்வ் லைன், புதூர், முன்றுமாவடி வழியாக இரவு அப்பன்திருப்பதியை சென்றடைந்தார். அங்கு விடிய, விடிய நடந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்து மலைக்கு வழியனுப்பினர்.

  பின்னர் கள்ளழகர் பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க அழகர்கோவில் மலையை அடைகிறார். அங்கு அவரை பக்தர்கள் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கள்ளழகர் மலைக்கு சென்றதும் மதுரை சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவையாறில் சப்தஸ்தான பெருவிழாவையொட்டி ஐயாறப்பருக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
  தஞ்சையை அடுத்த திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ம் நாள் நிகழ்ச்சியான 14-ந் தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சையை சுற்றியுள்ள 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு ஐயாறப்பர் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

  முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 18-ந் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து சப்தஸ்தான பெருவிழாவையொட்டி நேற்றுமுன்தினம் காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும்் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களுக்கு சென்று இரவில் தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் பல்லக்குகள் சங்கமித்தன. காவிரி ஆற்றில் வாண வேடிக்கை நடைபெற்றது.

  நேற்றுகாலை 7 ஊர் பல்லக்குகளும் காவிரி ஆற்றில் இருந்து புறப்பட்டு திருவையாறுக்கு நேற்றுமாலை வந்தன. அங்குள்ள வீதிகளில் 7 ஊர் பல்லக்குகளும் உலா வந்து திருவையாறு தேரடியை வந்தடைந்தன. பின்னர் அங்கு ஐயாறப்பர் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி மாலை 6.50 மணிக்கு தொடங்கியது. பல்லக்கு அருகில் பொம்மை வந்தபோது பக்தர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இரவு 7.10 மணிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைத்து பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனை முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகள் கோவிலில் இருந்து புறப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு சென்றன. இதற்கான ஏற்பாடுகளை தருமபுர ஆதீன இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவையாறில் சப்தஸ்தான திருவிழாவை முன்னிட்டு கண்ணாடி பல்லக்கில் ஐயாறப்பர் ஏழூர் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 10-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தன்னைத்தான பூஜித்தல், சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை, தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியான சப்தஸ்தான திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் கோவிலில் இருந்து ஏழூருக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடந்தது.

  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து ஐயாறப்பர் மற்றும் நந்திகேஸ்வரர் பல்லக்குகள் திருவையாறு, திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம் ஆகிய 7 ஊர்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் 7 ஊர்களில் இருந்து வந்த சாமி பல்லக்குகள் சங்கமிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

  அதேபோல திருச்சோற்றுத்துறையில் உள்ள அன்னபூரணி உடனாகிய ஓதனவனேஸ்வரர் கோவிலிலும் சப்தஸ்தான திருவிழாவையொட்டி சாமி புறப்பாடு நேற்று நடந்தது. இந்த கோவில் மூவரால் பாடல் பெற்ற தலம் ஆகும். இங்கு ஆறுமுகம், 12 கைகளுடன், 8 அடி உயரத்துடன் முருகப்பெருமான் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.

  இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவில் சப்தஸ்தான திருவிழாவுடன் தொடர்புடைய கோவில்களுள் 3-வது கோவிலாகும். சப்தஸ்தான திருவிழாவையொட்டி இந்த கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் நேற்று சாமி புறப்பாடானது. இதனை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு நடந்த அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.

  இதில் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், நாகை நீதிபதி மணிகண்டராஜா, மன்னார்குடி நீதிபதி சோமசுந்தரம், திருவையாறு ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் இளங்கோவன், பரம்பரை டிரஸ்டி கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

  சப்தஸ்தான திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் ஏழூர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் சங்கமித்து, சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் சாமி பல்லக்குகள் 6 ஊர் திரும்பும் உற்சவம் நடக்க உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் செய்து வருகிறார்கள். விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்குவதற்கு இரு விதமான புராணக்கதைகள் கூறப்படுகின்றன. அந்த வரலாறு என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
  கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்குவதற்கு இரு விதமான புராணக்கதைகள் கூறப்படுகின்றன. அவை வருமாறு:-

  மதுரை மாநகரில் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருமாலின் அவதாரமாக விளங்கும் சுந்தரராஜப்பெருமாள் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தை காணவும், சீதனம் கொடுப்பதற்காகவும் அழகர்மலையில் இருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்படுகிறார். ஆனால் அவர் வந்து சேரும்முன்பே திருக்கல்யாணம் நடந்து முடிந்து விடுகிறது. கள்ளழகர் வைகை ஆற்றின் வடகரைக்கு வரும்போது, மீனாட்சி அம்மனுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் கிடைக்கிறது. இதனால் கோபம் கொள்ளும் கள்ளழகர் மதுரை மாநகருக்குள் வராமல் வண்டியூர் வழியே மீண்டும் அழகர்மலைக்கு திரும்பிச் சென்று விடுகிறார். இது ஒரு புராணக்கதை.

  மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மாவிலி மன்னனிடம் மூன்றடி மண் கேட்டார். அதற்கு மன்னனும் சம்மதித்தார். உடனே மகாவிஷ்ணு, விசுவ ரூபம் எடுத்து ஒரு அடியை பூமியிலும், இன்னொரு அடியை விண்ணிலும், மூன்றாவது அடியை மன்னனின் தலையிலும் வைத்தார். இதில் 2-வது அடியை விண்ணுக்கு கொண்டு செல்லும்போது அங்கிருந்த பிரம்மா அது தன் தந்தையின் கால் என்பதை அறிந்து அதற்கு பாதபூஜை செய்கிறார். பாத பூஜை செய்யும் தண்ணீரில் ஒரு துளி மகாவிஷ்ணுவின் சிலம்பில் பட்டு அழகர்மலையில் விழுகிறது.

  அதுவே சிலம்பாறு (நூபுரகங்கை) என வர்ணிக்கப்படுகிறது. அழகர்மலை உச்சியில் தண்ணீர் வற்றாத நூபுர கங்கை உள்ளது. நூபுர கங்கை தீர்த்தம் தனிச்சுவையும், வினைதீர்க்கும் மருந்துமாக சிறந்து விளங்குகிறது என்று புராதனப்பாடல்கள் கூறுகின்றன. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். இத்தகைய புகழ்மிகு நூபுர கங்கையில் ஒரு நாள் சுதபஸ் என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கி நீராடியபடி மந்திரங்களை சொல்லிக்கொண்டு இருந்தார்.

  அந்த சமயத்தில் துர்வாச முனிவர் தன் சீடர்களுடன் நூபுர கங்கைக்கு வந்தார். அங்கே நீராடிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவர் அவரை கவனிக்கவில்லை. அவர் குளித்து முடித்து பூஜை செய்துவிட்டு சற்று நேரம் கடந்து வந்து துர்வாச முனிவரை வரவேற்றார். அதனால் துர்வாச முனிவர் கோபம் அடைந்து சுதபஸ் முனிவரை மண்டூகம்(தவளை) ஆகும்படி சாபமிட்டார்.

  உடனே சுதபஸ் முனிவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். அதற்கு துர்வாச முனிவர், சித்திரை மாதம் பவுர்ணமி (சித்ரா பவுர்ணமி) தினத்திற்கு மறுநாள் வரும் கிருஷ்ணபட்ச பிரதமை திதியில் சுந்தரராஜப்பெருமாள் உமக்கு சாபவிமோசனம் அளிப்பார் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். சாபத்தால் தவளையாக மாறிய சுதபஸ்முனிவர், சுந்தரராஜப்பெருமாளை நினைத்து வைகை கரையில் தவம் இருந்தார். தவத்தினால் மனம் இறங்கிய சுந்தரராஜப்பெருமாள் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு (சுதபஸ்முனிவர்) சாபவிமோசனம் அளித்தார் என்பது மற்றொரு புராணக்கதை.

  பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில் சார்பாக தனித்தனியாக சித்திரைத்திருவிழா கொண்டாடப்பட்டு வந்துள்ளது. பின்னர் சித்திரை திருவிழாவை சைவ-வைணவ சமயங்களின் ஒற்றுமையை காத்திடும் வகையில் மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலைநாயக்கர் ஒரே விழாவாக இணைத்து நடத்தினார். அதைத்தொடர்ந்து மன்னர் திருமலை நாயக்கர் காலம் முதல் தொன்று தொட்டு, சித்திரைத் திருவிழா ஒரே விழாவாக வரலாற்று பெருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print