search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayyappa"

    • கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது.
    • ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.

    1. கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

    2. விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது.

    எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.

    3. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.

    4. விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.

    5. கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும்

    ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.

    6. கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.

    7. கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள்.

    கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.

    8. முருகப் பெருமானுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும்.

    ஒன்று விசாக நட்சத்திரமும், மற்றொன்று கார்த்திகை நட்சத்திரமும்தான்.

    வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில்

    குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.

    9. கார்த்திகை திங்களில் பவுர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும்.

    கார்த்திகைத் தீபத் திருநாளன்று திபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது.

    10. கார்த்திகை பவுர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.

    11. கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்றுஇந்து மதம் கூறுகிறது.

    12. கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் திபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

    13. கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

    14. கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும், முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமானால் இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

    15. கார்த்திகைகளில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    16. வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு,தீப ஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.

    17. கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினார், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.

    18. கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.

    19. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.

    20. திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள்.

    இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள்.

    மகா விஷ்ணு மகா லட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    21. கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது.

    மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும்.

    நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    22. கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமவாதனை யமபயம் நீங்கும்.

    23. கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது.

    அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட சகல பாக்கியங்களையும் பெறலாம்.

    24. கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றாலநாதரையும், அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும்.

    25. ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சக்கரத்தாழ்வார் சந்தியில் எழுந்தருளி, கார்த்திகைக் கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார்.

    • கோவில் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் போது இந்தக் கொடி மரத்தில் கொடி ஏற்றுகிறார்கள்.
    • இங்கு கொடிமரம் சூட்சுமலிங்கமாகக் கருதப்படுகிறது.

    சபரிமலையில் 18ஆம் படி ஏறியவுடன் நம் கண்ணில் படுவது கொடிமரம் தான்.

    கோவில் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் போது இந்தக் கொடி மரத்தில் கொடி ஏற்றுகிறார்கள்.

    கொடி மரத்தின் உச்சியில் அய்யப்பனின் வாகனமான குதிரை சிறிய அளவில் உள்ளது.

    கொடிமரத்தின் வலதுபுறம் கற்பூர ஆழி உள்ளது.

    சபரிமலையில் கொடிமரத்தின் முன் வீழ்ந்து பக்தர்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    இங்கு கொடிமரம் சூட்சுமலிங்கமாகக் கருதப்படுகிறது.

    இக்கொடி மரத்தின் அடிப்பாகம் பிரம்மபாகம், அதன் நீண்ட பாகம் விஷ்ணுவைக் குறிக்கும்.

    எனவே சபரிமலை ஆலய கொடிமரம் மும் மூர்த்திகளை குறிக்கிறது.

    • மஞ்ச மாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அருள் பெறுகின்றனர்.
    • சிலர் ரவிக்கைத்துண்டு வைத்தும் வெடி வழிபாடு செய்தும் வணங்குவதுண்டு.

    மகிஷி என்ற அரக்கியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலில் இருந்து லீலா என்ற

    தேவதை போன்ற அழகிய பெண் வெளிவந்து அய்யப்பனை வணங்கி

    "நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன்.

    என் சாபம் நீங்குவதற்குக் காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வேண்டும்.

    என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்" என வேண்டினாள்.

    மணிகண்டனாகிய அய்யப்பன் அவளிடம் "நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளேன்.

    எனவே உன்னை ஏற்க இயலாது" என்று கூறி அவளது வேண்டுகோளை நிராகரித்தார்.

    அதோடு அந்தப் பெண்மணியை சபரிமலையில் பிரதிஷ்டை செய்யப்படும் கோவிலில்

    மாளிகைப்புறத்தம்மா என்ற பெயரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதன்படி பக்தர்கள் மாளிகைப் புறத்தம்மன் எனக் கூறப்படும் மஞ்ச மாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும்,

    தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அருள் பெறுகின்றனர்.

    சிலர் ரவிக்கைத்துண்டு வைத்தும் வெடி வழிபாடு செய்தும் வணங்குவதுண்டு.

    திருமணம் கை கூடுவதற்காக சிலர் இரண்டு ஜாக்கெட் துண்டு கொடுத்து ஒன்றைத்திரும்ப வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர்.

    • கடுத்த சுவாமிக்கு மாளிகைப் புறத்தம்மை கோவிலில் பிரதிஷ்டை உண்டு.
    • கருப்ப சுவாமிக்கு முந்திரி, திராட்சை ஆகியவை படைத்து கற்பூரம் காட்டி வழிபாடு செய்யலாம்.

    அய்யப்பனுடைய படையில் சிறந்த சேனாதிபதியாகவும், பிரதான வீரராகவும் கடுத்த சுவாமி திகழ்ந்தார் என்று சொல்வார்கள்.

    மேலும் பந்தள ராஜாவிற்காக யுத்தங்களில் வென்று வாகை சூடியதாக கடுத்தசுவாமி பற்றி கூறப்படுகிறது.

    கடுத்த சுவாமிக்கு மாளிகைப் புறத்தம்மை கோவிலில் பிரதிஷ்டை உண்டு.

    இவருக்குப் பொரி, அவல், மிளகு,பழம் நைவேத்தியமாக படைக்கிறார்கள்.

    பதினெட்டுப் படிக்குக் கீழேயும் இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

    கடுத்த சுவாமிக்கு சிலர் சுருட்டும் காணிக்கையாக வைக்கின்றனர்.

    பதினெட்டாம் படிக்குத் தொட்டது போல் வடக்கு பக்கத்தில் கருப்பசாமி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

    கருப்ப சுவாமிக்கு முந்திரி, திராட்சை ஆகியவை படைத்து கற்பூரம் காட்டி வழிபாடு செய்யலாம்.

    • மதிய பூஜைக்கு பொதுவாக இடித்து பிழிந்த பாயாசமே நைவேத்தியம்.
    • உதயாஸ்தமன பூஜை வேளையில் நண்பகலுக்கு முன்பு 15 பூஜைகள் நடைபெறும்.

    அதிகாலை பூஜைக்கு அஷ்டாபிஷேகம், விபூதி, பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர்,தூய நீர்

    போன்ற எட்டு பொருட்களால் அபிஷேகம் செய்து திருமதுரம்

    (பழம் மற்றும் தேன், சர்க்கரை சேர்த்த கலவை) நைவேத்தியம் செய்வர்.

    பிற்பாடு நெய் அபிஷேகம்.

    மதிய பூஜைக்கு பொதுவாக இடித்து பிழிந்த பாயாசமே நைவேத்தியம்.

    (இடித்துப் பிழிந்தெடுத்த தேங்காய்ப்பாலுடன் கதலிப்பழம், சர்க்கரை, சம்பா பச்சரிசி, சுக்கு, நெய் போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படுவது. மகா நைவேத்தியம் எனப்படும்.)

    உதயாஸ்தமன பூஜை வேளையில் நண்பகலுக்கு முன்பு 15 பூஜைகள் நடைபெறும்.

    அவை அனைத்திலுமே இடித்துப் பிழிந்த பாயாசமே நைவேத்தியமாகப் படைக்கப்படும்.

    இருபத்தியைந்து கலசங்களுடன் மதிய பூஜை நடைபெறும்.

    • நெற்றியில் பொட்டு வைக்குமிடத்தில் பிட்யூட்டரி எனும் சுரப்பி உள்ளது.
    • இது ஆன்மா இருக்குமிடம் என்று கருதுவதால் இதை மனோன்மணி என்று அழைக்கிறார்கள்.

    அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்தவுடன் புருவமத்தியில் சந்தனத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

    சந்தனத்தை நெற்றியில் பார்த்ததுமே இவர் மாலை அணிந்த சாமி என்று மற்ற அய்யப்ப சாமிகள் தெரிந்து கொள்வார்கள்.

    நெற்றியில் பொட்டு வைக்குமிடத்தில் பிட்யூட்டரி எனும் சுரப்பி உள்ளது.

    பீனியல் சுரப்பி நெற்றிக் கண்ணைப் போலவே செயல்படுகிறது.

    அதன் அமைப்பும் ஒரு கண்ணைப் போன்றே இருக்கும்.

    இது உடலையும், உள்ளத்தையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது.

    வெளிப்புறம் நடக்கும் அனைத்தையும் அறிந்து கொள்ளக்கூடியது இச்சுரப்பி.

    இது ஆன்மா இருக்குமிடம் என்று கருதுவதால் இதை மனோன்மணி என்று அழைக்கிறார்கள்.

    இது சிறப்பாக இயங்கினால் ஞானதிருஷ்டி சித்திக்கும். இதை குண்டலினி யோகம் மூலம் தான் தூண்ட முடியும்.

    • கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது.
    • வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் சாமந்தி, சம்பங்கி, குண்டு மல்லி, முல்லை பூ, அரளி, துளசி உள்பட பூக்களின் விற்பனை களை கட்டியது. இதனால் பூக்களில் விலையும் அதிகரித்தது.

    சேலம்:

    கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மண்டல பூஜையையொட்டி ஏராளமான அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக சென்றும் அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

    இதையொட்டி கார்த்திகை மாதம் 1-ந் தேதியான இன்று அதிகாலை முதலே ஏராள மான அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கினர். குறிப்பாக சேலத்தில் சாஸ்தா நகர் அய்யப்பன் கோவிலில் 500-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் இன்று அதிகாலை யிலேயே குவிந்தனர். அவர்கள் அய்யப்பனைமணமுருக வணங்கி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இதே போல சேலம் சுகவனேஸ்வரர் கோவில், ராஜகணபதி கோவில், பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில், அம்மாப்பேட்டை குமரகிரி சுப்பிரமணியசாமி கோவில், டவுன் ரெயில் நிலையம் அய்யப்பன் கோவில், ஊத்து மலை முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவன், முருகன், அய்யப்பன் கோவில்களிலும் அய்யப்ப பக்தர்கள் இரு முடி கட்ட ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த கோவில்களில் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    இதனால் சேலத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சரணம், சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் ஒலித்தது. இதையொட்டி கோவில்க ளில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கார்த்திகை மாத பிறப்பையொட்டி சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்ய இன்றே நடை பாதை யாகவும், வாகனங்களிலும் ஏராளமா னோர் புறப்பட்டு சென்றனர்.

    இதையொட்டி சேலம் சின்ன கடை வீதியில் கார்த்திகை விரதம் தொடங்கிட தேவையான துளசி மணி மாலை, வேட்டி துண்டுகள், அய்யப்பன் டாலர், இரு முடி பை, சந்தனம், ஜவ்வாது, விபூதி, குங்குமம், இருமுடிக்கு தேவையான தேங்காய், பொரி, முந்திரி, திராட்சை , ஏலக்காய், அச்சுவெல்லம், பச்சரிசி ஊதுவத்தி , நெய் உள்பட பூஜை பொருட்கள் வாங்க கடைவீ தியில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் சாமந்தி, சம்பங்கி, குண்டு மல்லி, முல்லை பூ, அரளி, துளசி உள்பட பூக்களின் விற்பனை களை கட்டியது. இதனால் பூக்களில் விலையும் அதிகரித்தது. 

    • 18 படிகள் ஏறி வந்ததும், முதலில் நாம் தரிசிக்க வேண்டியது இந்தக் கொடி மரத்தைதான்.
    • ஐயப்பனுக்காக நாம் விரதம் இருக்கிறோம் என்று நாம் நினைப்பதே தவறான அபிப்ராயம்.

    கொடி மரம்

    18 படிகளையும் கடந்தால், நம் எதிரே தென்படுவது கொடி மரம். பரசுராமர் காலத்தில் இங்கே கொடி மரம் கிடையாது.

    பிற்காலத்தில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, பரசுராமரால்

    ஐயப்பன் அருகில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு இருந்த குதுரை, கொடி மரத்தின் மேல் வைக்கப்பட்டது.

    18 படிகள் ஏறி வந்ததும், முதலில் நாம் தரிசிக்க வேண்டியது இந்தக் கொடி மரத்தைதான்.

    மூலஸ்தானமும் தவக்கோல தரிசனமும்

    ஐயப்பனுக்காக நாம் விரதம் இருக்கிறோம் என்று நாம் நினைப்பதே தவறான அபிப்ராயம்.

    மாறாக, ஐயப்பன்தான் நமக்காக சபரிமலையில் தவம் இருக்கிறார்.

    தனது மூன்று விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டு 'சின்முத்திரை' காட்டுகிறார்.

    'சித்' என்றால் 'அறிவு' எனப்பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி 'சின்' என மாறியது.

    எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான், இந்த 'சின்' முத்திரையாகும்.

    'சின்' முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிப்பது என்பது, பிறவிப் பயனை அடைந்த சந்தோஷத்தைத் தருகிறது.

    ஒவ்வொரு மாதமும் நடை சாத்தும்போது, ஹரிவராசனம் பாடிவிட்டு, கிலோ கணக்கில் பசுமையான திருநீற்றை ஐயப்பன் மேல் சாத்துவார்கள்.

    அத்துடன், ஐயப்பனின் சின் முத்திரையின் மேல் ஒரு ருத்திராட்ச மாலையைப் போடுவார்கள்.

    இதற்கு தவக்கோலம் என்று பெயர்.

    அப்போது, ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள்.

    அந்த விளக்கானது, மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்கும் இந்த அதிசயம், தவறாமல் அரங்கேறுகிறது.

    கோவில் கதவு திறந்து, உலகத்தின் பார்வை அந்தக் கோவிலுக்குள் நுழைந்ததும், ஐயப்பனின் தவக்கோலம் கலைந்து விடுகிறது.

    அடுத்த நிமிடமே, அந்த விளக்கும் அணைந்து விடுகிறது.

    சின் முத்திரையின் மேல் போடப்பட்ட ருத்திராட்ச மாலையும் கை மாறி இருக்கும்.

    இந்த அதிசயத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.

    • ‘மலைக்கு செல்ல மாலை போடுவது என்பது சாதாரணமானது அல்ல.
    • நாம் எதை சாப்பிடுகிறோமோ அதைத்தான் ஐயப்பனும் சாப்பிடுகிறார்.

    ஐயப்ப மாலையின் முக்கியத்துவம் பற்றி நடிகர் நம்பியார் சுவாமிகள் ஒரு தடவை கூறியதாவது:-

    'மலைக்கு செல்ல மாலை போடுவது என்பது சாதாரணமானது அல்ல.

    ஓர் அரசருக்கு கிரீடம், முத்திரை மோதிரம் என்பவை எல்லாம் எப்படி தனி அடையாளமோ.,

    அதுபோல சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் அடையாளமே அவர்கள் அணியும் மாலைதான்.

    நாம் எப்போது மாலை போட்டுக் கொள்கிறோமோ, அப்போதே மாலையுடன் சேர்ந்து ஐயப்பனும் நம்மோட வந்து விடுகிறார்.

    'மாலை' என்ற வடிவில் நம்மோடு இருப்பவர் சாட்சாத அந்த ஐயப்பன்தான்.

    நாம் எதை சாப்பிடுகிறோமோ அதைத்தான் ஐயப்பனும் சாப்பிடுகிறார்.

    நம்மோடு நினைவில் நிறுத்திக் கொண்டால், நமக்கு எந்தக் கெட்ட எண்ணமும் வராது.

    தீய பழக்கங்கள் அடியோடு ஒழிந்து விடும்.

    அதேபோல முதல் முறை உபயோகித்த மாலையைத்தான் இறுதி வரை பயன்படுத்த வேண்டும்' என்பார் நம்பியார் சாமி.

    பழைய மாலை அறுந்துவிட்டால் கூட அதையே சரி செயது வைத்துக் கொள்ள வேண்டும் என்றார் நம்பியார்சாமி.

    • ஐயப்பனை வழிபடுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் மூன்றாகும்.
    • தண்ணீர் மட்டுமே பருகி முழு விரதம் இருத்தல் உத்தமானது.

    ஐயப்பனை வழிபடுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் மூன்றாகும்.

    அவை- புத வார விரதம், சனி வார விரதம், உத்திர நட்சத்திர விரதம்.

    இந்த விரதங்களை மேற்கொள்பவர்கள், ஏதேனும் ஒரு புதன்கிழமையன்றோ, சனிக்கிழமையன்றோ

    அல்லது ஒவ்வொரு மாதத்திலும் வரும் உத்திர நட்சத்திரத்தன்றோ விரதம் மேற்கொள்ள வேண்டும்.

    முதல் நாள் பகல் உணவோடு விரதத்தைத் தொடங்கி இரவு உணவை உண்ணாதிருக்க வேண்டும்.

    விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராடி, நித்ய கர்மாக்களை முடித்து,

    விதிமுறைப்படி ஸ்ரீமஹா சாஸ்தாவை வழிபாடு செய்தல் வேண்டும்.

    தண்ணீர் மட்டுமே பருகி முழு விரதம் இருத்தல் உத்தமானது.

    நாள் முழுவதும், பாராயணம், ஜபம், தியானம் ஆகியவற்றை மேற்கொண்டு,

    ஐயப்பனின் ஆலயத்துக்கும், சென்று வழிபட வேண்டும்.

    அதேபோல இரவு முழுவதும் கண்ணயராது ஐயனை தியானித்து, மறுநாள் அதிகாலையில் நீராடி,

    சாஸ்தாவை வழிபட்டு அவரின் அடியவருடன் கூடி உண்ண வேண்டும்.

    அன்றும் பகலில் உறங்காமல் இரவிலே உறங்குதல் வேண்டும்.

    • சபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாக சொல்வது வழக்கம்.
    • ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் காத்து வருகின்றன.

    சபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாக சொல்வது வழக்கம்.

    ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் காத்து வருகின்றன.

    முதல் கோட்டை -எருமேலி -வாபுரன்

    இரண்டாம் கோட்டை -காளைகெட்டி -நந்திகேஸ்வரன்

    மூன்றாம் கோட்டை -உடும்பாறை -ஸ்ரீபூதநாதன்

    நான்காம் கோட்டை - கரிமலை-பகவதி

    ஐந்தாம் கோட்டை -சபரி பீடம்-சபரி துர்கை

    ஆறாம் கோட்டை -சரங்குத்தி-அஸ்த்ர பைரவர்

    ஏழாம் கோட்டை -பதினெட்டாம்படி-கருப்பசுவாமி.

    • பதினெட்டாம் படி ஏறியதும் இரண்டு விசேஷங்களை நாம் தரசிக்க வேண்டும்.
    • அதன் பினனர் அந்த சிலையை உருக்கி, மணியாக வடிவமைத்தனர்.

    பதினெட்டாம் படி ஏறியதும் இரண்டு விசேஷங்களை நாம் தரசிக்க வேண்டும்.

    ஒன்று கொடி மரத்தில் அமைந்திருக்கும் குதிரை.

    மற்றொன்று 18ம் படிக்கும் இடைபுறம் உள்ள ஆலய மணி.

    ஆதியில் சபரிமலையில் பரசுராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் சிலை (பஞ்சலோக விக்கிரகம்), காலப் போக்கில் இயற்கைச் சீற்றத்தால் சற்று சேதமானது.

    1950ம் ஆண்டு அந்தச் சிலை மேலும் சேதமடைந்ததாக சொல்லப்படுகிறது.

    அதன் பினனர் அந்த சிலையை உருக்கி, மணியாக வடிவமைத்தனர்.

    18ம் படி இருக்கும் இடத்தில், வலம் இடம் என இருபுறமும் அங்கு மணிகள் இருக்கும்.

    அதில், இடப் பக்கமாக உள்ள மணிதான், ஆதிகாலத்தில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பனின் திருஉருவச்சிலை.

    ×