search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "garlands"

    • கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது.
    • வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் சாமந்தி, சம்பங்கி, குண்டு மல்லி, முல்லை பூ, அரளி, துளசி உள்பட பூக்களின் விற்பனை களை கட்டியது. இதனால் பூக்களில் விலையும் அதிகரித்தது.

    சேலம்:

    கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மண்டல பூஜையையொட்டி ஏராளமான அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக சென்றும் அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

    இதையொட்டி கார்த்திகை மாதம் 1-ந் தேதியான இன்று அதிகாலை முதலே ஏராள மான அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கினர். குறிப்பாக சேலத்தில் சாஸ்தா நகர் அய்யப்பன் கோவிலில் 500-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் இன்று அதிகாலை யிலேயே குவிந்தனர். அவர்கள் அய்யப்பனைமணமுருக வணங்கி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இதே போல சேலம் சுகவனேஸ்வரர் கோவில், ராஜகணபதி கோவில், பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில், அம்மாப்பேட்டை குமரகிரி சுப்பிரமணியசாமி கோவில், டவுன் ரெயில் நிலையம் அய்யப்பன் கோவில், ஊத்து மலை முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவன், முருகன், அய்யப்பன் கோவில்களிலும் அய்யப்ப பக்தர்கள் இரு முடி கட்ட ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த கோவில்களில் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    இதனால் சேலத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சரணம், சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் ஒலித்தது. இதையொட்டி கோவில்க ளில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கார்த்திகை மாத பிறப்பையொட்டி சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்ய இன்றே நடை பாதை யாகவும், வாகனங்களிலும் ஏராளமா னோர் புறப்பட்டு சென்றனர்.

    இதையொட்டி சேலம் சின்ன கடை வீதியில் கார்த்திகை விரதம் தொடங்கிட தேவையான துளசி மணி மாலை, வேட்டி துண்டுகள், அய்யப்பன் டாலர், இரு முடி பை, சந்தனம், ஜவ்வாது, விபூதி, குங்குமம், இருமுடிக்கு தேவையான தேங்காய், பொரி, முந்திரி, திராட்சை , ஏலக்காய், அச்சுவெல்லம், பச்சரிசி ஊதுவத்தி , நெய் உள்பட பூஜை பொருட்கள் வாங்க கடைவீ தியில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் சாமந்தி, சம்பங்கி, குண்டு மல்லி, முல்லை பூ, அரளி, துளசி உள்பட பூக்களின் விற்பனை களை கட்டியது. இதனால் பூக்களில் விலையும் அதிகரித்தது. 

    • பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ராஜபாளையம்

    தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி ராஜபாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் வடக்கு நகர செயலாளர் வக்கீல் துரை முருகேசன் தலைமையில் மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் சிவகுருநாத பாக்கியம் முன்னிலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட பேரவை துணைச் செயலாளர் ராசா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் யோக சேகரன், மாவட்ட பேரவை துணைத் தலைவர் திருப்பதி, பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக பிரிவு வெங்கடேஷ் ராஜா, அவைத்தலைவர் கணேசன், பொருளாளர் ஜீவா, சிறுபான்மை பிரிவு மைதீன் என்ற ராஜப்பா, ஆந்திரா குமார், விக்னேசுவரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராமர், ராமராஜா, ஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    ராஜபாளையம் நகர ம.தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு விருதுநகர் மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நகரசெயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வில்லிசை மனோகரன், தலைமை கழக பேச்சாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன், நகர அவைத்தலைவர் சேது.இன்பமணி, மாவட்ட பிரதிநிதிகள் புஷ்பவேல், ஞானசேகரன், நகரத் துணைச் செயலாளர்கள் அக்பர்அலி, லிங்கம், நகர இளைஞரணி அமைப்பாளர் கே.எஸ்.நிஜாமுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×