search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Appears"

    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கின் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆஜரானார். #INXMediaCase #PChidambaram
    புதுடெல்லி:

    முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.



    இவ்வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ப.சிதம்பரம் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்த ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துக்களை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது. #INXMediaCase #PChidambaram

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கின் விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் டெல்லி முன்னாள் தலைவர் சஜ்ஜன் குமார் இன்று ஆஜரானார். #AntiSikhRiotsCase #SajjanKumar
    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது.  இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    இது தொடர்பான ஒரு வழக்கில் இருந்து முன்னர்  நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு தற்போது டெல்லி உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் சஜ்ஜன் குமார் சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.



    இந்நிலையில் சீக்கிய கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கின் விசாரணைக்காக சஜ்ஜன் குமார் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது உயர்நீதிமன்ற உத்தரவின்படி தனது செல்போனை ஒப்படைத்தார். ஆனால் சஜ்ஜன் குமாரின் பிரதான வழக்கறிஞர் ஆஜராகாததால், விசாரணை ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    கலவரத்தின்போது சுல்தான்புரியில் சுர்ஜித் சிங் என்ற சீக்கியரை கொன்றதாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், சஜ்ஜன் குமார், பிரம்மானந்த் குப்தா, வேதப் பிரகாஷ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த 241 வழக்குகள் முன்னர் முடித்து வைக்கப்பட்டன. இவற்றில் 186 வழக்குகள் உரிய விசாரணை நடத்தாமலேயே முடித்து வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கண்காணிப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.

    இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட், மேற்படி 186 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்கும்படி உத்தரவிட்டது. அதன்பேரில் தற்போது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. #AntiSikhRiotsCase #SajjanKumar
    அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 2 ஊழல் வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். #NawazSharif #CorruptionCase
    இஸ்லாமாபாத்:

    பனாமா கேட் ஊழல் வழக்கில் சிக்கி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தேசிய பொறுப்புடைமை கோர்ட்டுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் படி லண்டன் அவன்பீல்டு நகரில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியது, அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 3 ஊழல் வழக்குகளை தேசிய பொறுப்புடைமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    இதில் அவன்பீல்டு வழக்கில் நவாஸ் ஷெரீப், அவருடைய மகள் மரியம் நவாஸ், மருமகன் முகமது சப்தார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள், மரியம் நவாசுக்கு 7 ஆண்டுகள் மற்றும் முகமது சப்தாருக்கு ஓர் ஆண்டு சிறைதண்டனை விதித்து கடந்த மாதம் 6-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் ராவல்பிண்டி நகரில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 2 ஊழல் வழக்குகள் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு நீதிபதி அர்ஷத் மாலிக் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நவாஸ் ஷெரீப்பை விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அடியாலா சிறையில் இருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர்.அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக கோர்ட்டிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழக்கில் தொடர்புடையவர்கள், நீதிபதி மற்றும் வக்கீல்கள் தவிர மற்றவர்கள் யாரும் கோர்ட்டுக்குள் நுழைய அதிகாரிகள் தடைவிதித்தனர். பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

    கோர்ட்டில் நீதிபதி முன்பு நவாஸ் ஷெரீப் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதே சமயம் இந்த வழக்குகளில் தொடர்புடைய நவாஸ் ஷெரீப்பின் மகன்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. முந்தைய அவன்பீல்டு வழக்கிலும் அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை என்பதும், இதனால் அவர்கள் தலைமறைவாக இருப்பதாக கோர்ட்டு ஏற்கனவே அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.  #NawazSharif #CorruptionCase  #tamilnews
    வெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நளினி சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். #NaliniChidambaram #KartiChidambaram
    சென்னை:

    அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களை மறைத்ததாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் மீது வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இதுதொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்திக் ஆகியோர் ஜன் 25-ம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன்படி, இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம், மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் ஆஜராகினர்.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து, ஜூலை 23-ம் தேதி கார்த்திக் சிதம்பரத்தை மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது. #NaliniChidambaram #KartiChidambaram
    ×