search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4ஜி"

    பிளேயர் அன்-நோன் பேட்டிள்கிரவுன்ட் (பப்ஜி) பிளே ஸ்டேஷன் 4இல் வெளியாகிறது. இதன் வெளியீடு மற்றும் பி.எஸ். 4 டிஸ்க் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #PUBG #Playstation4



    பிளேயர் அன்-நோன் பேட்டிள்கிரவுன்ட் (பப்ஜி) கேம் பிளே ஸ்டேஷன் 4ல் அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. பப்ஜி கார்ப் மற்றும் சோனி இத்தகவலை உறுதி செய்திருப்பதோடு, இவை டிஸ்க் வடிவில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளன.

    பப்ஜி பி.எஸ்.4 இந்திய வெளியீடு குறித்து சோனி இந்தியா சார்பில் எவ்வித தகவலும் இல்லாத நிலையில், பல்வேறு விற்பனையாளர்கள் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் இந்திய வெளீயட்டை உறுதி செய்துள்ளன. இது பப்ஜி பி.எஸ்.4 டிஜிட்டல் வெர்ஷனை விட விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் விலை ரூ.1,999 முதல் துவங்குகிறது. சர்வதேச சந்தையில் டிசம்பர் 7ம் தேதி அறிமுகமாகும் நிலையில், இதே தேதியில் இந்தியாவிலும் கிடைக்கும் என தெரிகிறது. இந்தியாவில் டிஜிட்டல் வடிவம் ரூ.2,750 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், டிஸ்க் விலை ரூ.1,999 முதல் துவங்குகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் கிடைக்கும்.



    பப்ஜி பி.எஸ்.4 விலை மற்றும் விவரங்கள்

    டிஸ்க் எடிஷன் பேஸ் கேம் விலை ரூ.1,999
    லூட்டர்ஸ் டிஜிட்டல் எடிஷன் பேஸ் கேம் விலை ரூ.2,750
    சர்வைவர்ஸ் டிஜிட்டல் எடிஷன் 
    பேஸ் கேம், விகென்டி ஈவென்ட் பாஸ், 2,300 ஜி-காயின் பேக், 20,000 விலை ரூ.2,750
    சேம்பியன் டிஜிட்டல் எடிஷன்
    பேஸ் கேம், விகென்டி ஈவென்ட் பாஸ், 6,300 ஜி-காயின் பேக், 20,000 விலை ரூ.3,999

    பப்ஜி சர்வைவர்ஸ் மற்றும் லூட்டர்ஸ் எடிஷன் டிஸ்க் ஒரே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது சோனி தரப்பில் நடைபெற்று இருக்கும் பிழையாக இருக்கலாம் என்றும் இது திறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் ‘பி.எஸ்.4’ ரக வாகனங்களை விற்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. #BS4Vehicle #SupremeCourt
    புதுடெல்லி:

    மோட்டார் வாகனங்கள் மூலம் காற்று மாசுபடுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக, வாகனங்கள் மாசு வெளியிடுவதை ஒழுங்குபடுத்தும் வகையில் ‘பாரத் ஸ்டேஜ்’ (பி.எஸ்.) என்ற பெயரில் தர நிறுவனம் ஒன்றை அரசு நிறுவியுள்ளது.



    இந்த நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், வாகன தயாரிப்பு தொடர்பான பல்வேறு ஒழுங்கு விதிகளை வெளியிடுகிறது. அந்த விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படும் வாகனங்களை மட்டுமே நாடு முழுவதும் விற்கவும், பதிவு செய்யவும் முடியும்.

    அந்தவகையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பி.எஸ்.4 விதிமுறைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு இருக்கிறது. அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே நாடு முழுவதும் விற்பனையும், பதிவும் செய்யப்பட்டு வருகிறது.

    முன்னதாக அமலில் இருந்த பி.எஸ்.5 விதிமுறைகளை முற்றிலும் கைவிடுவதாக 2016-ல் அறிவித்த மத்திய அரசு, 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பி.எஸ்.6 ரக விதிமுறைகள் அமலுக்கு வரும் எனவும் அறிவித்தது.

    ஆனால் பி.எஸ்.4 ரக வாகன விற்பனைக்கு சலுகை காலம் வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

    அப்போது, 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் பி.எஸ்.4 ரக வாகனங்கள் விற்பனைக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது முதல் பி.எஸ்.6 ரக வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என கண்டிப்பாக கூறிய நீதிபதிகள், தூய்மையான எரிபொருளை பயன்படுத்துவதற்கான நேரம் இது எனவும் குறிப்பிட்டனர்.

    முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது, ‘2020-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை பி.எஸ்.4 ரக வாகனங்களை தயாரிப்பதற்கு மத்திய அரசு தங்களுக்கு அனுமதி அளித்திருப்பதாகவும், எனவே தாங்கள் இருப்பு வைத்துள்ள வாகனங்களை விற்க உரிய காலம் வழங்கப்பட வேண்டும்’ எனவும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாதிட்டன.

    ஆனால் காற்று மாசு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வக்கீல் அபராஜிதா சிங் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். குறிப்பாக 2020-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை தயாரிக்கப்படும் வாகனங்களை விற்பதற்கு அந்த ஆண்டு ஜூன் 30 வரையும், கனரக வாகனங்களை விற்பதற்கு அதே ஆண்டு செப்டம்பர் 30 வரையும் சலுகை காலம் அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 
    பி.எஸ்.என்.எல். நிறுவன 4ஜி சேவைகள் துவங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், விரைவில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவைகள் துவங்கப்பட இருக்கிறது. #BSNL



    இந்தியாவில் 2100 Mhz பேன்ட் மூலம் 4ஜி சேவைகளை வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மத்திய டெலிகாம் துறை ஒப்புதல் அளித்துள்ளது. 4ஜி சேவைகளை வழங்க ரூ.13,885 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரமை கைப்பற்ற விரிவான அறிக்கை 2017-ம் ஆண்டில் பி.எஸ்.என்.எல். சார்பில் சமர்பிக்கப்பட்டது. 

    இதைத் தொடர்ந்து அரசு சார்பில் முதலீடாக ரூ.6,652 கோடி பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மந்திரி சபை பரிந்துரையின் பேரில் ஸ்பெக்ட்ரம் கட்டணம் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளில் இருந்து 16 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது. 

    “2100 Mhz பேன்ட் மூலம் 4ஜி சேவைகளை வழங்குவதற்கு எங்களின் கோரிக்கைக்கு மத்திய டெலிகாம் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.” என பி.எஸ்.என்.எல். நிறுவன தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். இதன் மூலம் அதிவேக 4ஜி எல்.டி.இ. சேவை வழங்க முடியும்.

    இந்தியாவில் மற்ற டெலிகாம் நிறுவனங்களில், பி.எஸ்.என்.எல். மட்டும் இதுவரை 4ஜி சேவையை வழங்காமல் இருக்கிறது. எனினும், சேவை வழங்க அனுமதி கிடைத்திருக்கும் நிலையி்ல், பி.எஸ்.என்.எல். வழங்கும் சலுகைகள் சந்தையில் போட்டியை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவைகளை 2100 Mhz பேன்ட் சேவைகளை உரிமம் பெற்று இருக்கும் 21 வட்டாரங்களில் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 4ஜி சேவைகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டுள்ளது.
    இந்தியா முழுக்க அதிவேக 4ஜி சேவைகளை விரைவில் துவங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய டெலிகாம் சந்தையில் நிலவி வரும் கடுமையான போட்டியை எதிர்கொள்ள பிஎஸ்என்எல் பல்வேறு சலுகைகளை அறிவித்த நிலையில், விரைவில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை துவங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களின் போட்டியை கருத்தில் கொண்டு அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நாடு முழுக்க 4ஜி சேவைகளை வெற்றிகரமாக துவங்குவது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மிகமுக்கிய கட்டமாகும்.

    இந்த திட்டம் குறித்து பிஎஸ்என்எல் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், புதிய 4ஜி சிம் கார்டுகளை பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.20 என்ற மிக குறைந்த கட்டணத்திற்கு வழங்கும் என வலைத்தளங்களில் வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


    கோப்பு படம்

    பிஎஸ்என்எல் விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படும் 4ஜி சேவைகளை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் புதிதாக யுனிவர்சல் சிம் அல்லது யுசிம் கார்டினை ரூ.20 கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும். பின் 4ஜி சேவை துவங்கப்பட்டதும், வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் அலுவலகம் அல்லது ஸ்டோர் சென்று புதிய யுசிம் கார்டினை ரூ.20 விலையில் வாங்க முடியும். 

    பழைய வாடிக்கையாளர்கள் அதே நம்பரை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதோடு, மற்ற நிறுவன வாடிக்கையாளர்களும் தங்களது பழைய மொபைல் நம்பரை மாற்றாமல் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பயன்படுத்த முடியும்.

    முன்னதாக பிஎஸ்என்எல் 3ஜி சேவைகள் 2009-ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு கவர்ச்சிகர சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்து வருகிறது. மார்ச் 2018 பிஎஸ்என்எல் நிறுவனம் 40 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக அறிவித்திருந்தது. 

    மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவையின் மூலம் இதே மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 12 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. கவர்ச்சிகர சலுகைகள், புதிய திட்டங்கள் மற்றும் சீரான சேவையை வழங்குவதே பிஎஸ்என்எல் சேவையில் இணைவோர் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
    ×