search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பப்ஜி"

    • நேற்று மாலை நீண்ட நேரம் பப்ஜி கேம் விளையாடியதை அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது
    • தற்கொலை சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கத்தில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர், தினமும் நண்பர்களுடன் சேர்ந்து பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார்.

    நேற்று மாலை நீண்ட நேரம் பப்ஜி கேம் விளையாடியதை அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த மாணவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பப்ஜி கேம் விளையாடிய கல்லூரி மாணவரை தாய் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீமாஹைதருக்கு உதவியதாக அவரது காதலன் சச்சினும் கைது செய்யப்பட்டார்.
    • பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த சிலர் சீமாஹைதரை பாகிஸ்தானிடம் ஒப்படைக்காவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    மும்பை:

    பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் சீமாஹைதர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு திருணமத்திற்கு பிறகு கராச்சியில் குடியேறினார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    இவருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

    இந்நிலையில் சீமாஹைதர் தனது கணவரை விட்டு விட்டு, காதலனை பார்ப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்தார். பின்னர் சீமாஹைதர் சச்சினுடன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் பாதுகாப்பு படை போலீசார் சீமாஹைதரை கடந்த 4-ந் தேதி கைது செய்தனர்.

    மேலும் சீமாஹைதருக்கு உதவியதாக அவரது காதலன் சச்சினும் கைது செய்யப்பட்டார். பின்னர் 7-ந் தேதி இருவருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    இந்நிலையில் சீமாஹைதர் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த சிலர் சீமாஹைதரை பாகிஸ்தானிடம் ஒப்படைக்காவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் பேசியுள்ளார். உருது மொழியில் பேசிய அவர், சீமாஹைதரை மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பாவிட்டால் 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலுக்கு மும்பை போலீசார் தயாராக இருக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து மும்பை போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிள்ளைகள் ஸ்மார்ட் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு.
    • ஆன்லைன் கேம்களை விளையாடுபவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து கேம்களை அன்-இன்ஸ்டால் செய்ய வைக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் தாமாக முன்வந்து மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    நமது தேசத்தின் எதிர்காலம் இளைய தலைமுறையின் கைகளில் உள்ளது. அவர்கள்தான் நம் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளார்கள், அதற்காக அவர்கள் உடல், உளவியல், பொருளாதாரம், சமூகம் என எல்லாவற்றிலும் தகுந்தவர்களாக இருக்க வேண்டும்.

    ஆனால் இன்றைய இளம்தலைமுறையினர் பப்ஜி, பிரீ பயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி, கல்வி மற்றும் ஆரோக்கியமான பொழுதுபோக்குகள் போன்றவற்றிலிருந்து அவர்கள் விலகிச் செல்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் தங்கள் எதிர்காலத்தை பணயம் வைக்கிறார்கள்.

    அதன் விளைவாக நமது நாட்டின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த வகையான ஆன்லைன் விளையாட்டுகளின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கான அவசரத்தேவை ஏற்பட்டுள்ளது. இளைஞர்களை, அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும்.

    இந்த விவகாரத்தில் காவல்துறைக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் பங்கு உள்ளது. பிள்ளைகள் ஸ்மார்ட் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு.

    ஆன்லைன் கேம்களை விளையாடுபவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து கேம்களை அன்-இன்ஸ்டால் செய்ய வைக்க வேண்டும். ஆகையால் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நிரந்தர தடை விதிக்கும் வகையில் இணையதள மாற்றங்களை ஏற்படுத்தவும், ஆன்லைன் விளையாட்டு விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை உருவாக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

    இந்த விவகாரம் எதிர்கால தலைமுறையினர் சம்பந்தப்பட்டது. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கியதால் தற்போதைய இளைஞர்கள், மாணவர்கள் மைதானங்களுக்கு சென்று விளையாடுவதையே மறந்து விட்டனர். இப்படியே இந்த விவகாரத்தை விட்டு விட்டால் பெரும் ஆபத்தில் முடியும். இதற்கு முடிவு கட்டாமல் இந்த கோர்ட்டு விடப்போவதில்லை.

    எனவே ஆன்லைன் விளையாட்டுகளை முழுவதுமாக தடை செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். வருகிற 27-ந்தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • பாகிஸ்தானும் இந்த 2 செயலிகளுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
    • பப்ஜி, டிக்டாக் உட்பட நூற்றுக்கணக்கான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

    காபூல் :

    ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் அவர்கள் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்த நிலையில் உலகளவில் பிரபலமான பப்ஜி மற்றும் டிக்டாக் ஆகிய 2 செயலிகளின் பயன்பாட்டுக்கு ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த இரு செயலிகளும் வன்முறையை ஊக்குவிப்பதால் இவற்றின் பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்ய முடிவெடுக்கப்பட்டதாக கூறிய தலிபான்கள் இன்னும் 90 நாட்களுக்குள் இரு செயலிகளும் தடை செய்யப்படும் என தெரிவித்தனர்.

    இந்த இரண்டு பிரபலமான செயலிகளுக்கு ஒரு நாடு தடை விதிப்பது இது முதல்முறை அல்ல. கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி பப்ஜி, டிக்டாக் உட்பட நூற்றுக்கணக்கான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தானும் இந்த 2 செயலிகளுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அருகே உள்ள கூடப்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சசிகுமார்(25), இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான அஜித் என்பவருடன் செல்போனில் பப்ஜி விளையாட்டை விளையாடினார்.

    அப்போது சசிகுமாருக்கும் அஜித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் சசிக்குமார், அஜித் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தின் உறவினரான செல்வம், சசிகுமாரின் ஆதரவாளர்கள் விஜயகுமார், சாமுவேல், அபிலேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் நண்பர்கள் அவரை கேலி கிண்டல் செய்தனர். இதில் விரக்தி அடைந்த கல்லூரி மாணவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் மாணவர் தற்கொலை செய்தாரா? அல்லது அவரது சித்தி கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி ராஜ். இவரது முதல் மனைவி லட்சுமி நரசம்மா. அவர் விஜயவாடாவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகள் உள்ளனர். சாந்தி ராஜ், கவுரி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு மசூலிப்பட்டினத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    லட்சுமி நரசிம்மாவின் மகன் பிரபு (வயது 16).தனது தந்தையுடன் மசூலிப்பட்டினத்தில் தங்கி அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். பிரபு தனது நண்பர்களுடன் பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்தார்.

    அப்போது விளையாட்டில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் நண்பர்கள் அவரை கேலி கிண்டல் செய்தனர். இதில் விரக்தி அடைந்த பிரபு இரவில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபு தூக்கில் தொங்குவதை கண்ட சாந்தி ராஜ் மற்றும் அவரது மனைவி கதறி அழுதனர்.

    இதுகுறித்து சிலகளபுடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரபு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறிபட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பிரபுவின் தாய் தனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக 2-வது மனைவி கவுரி மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் பிரபு தற்கொலை செய்தாரா? அல்லது அவரது சித்தி கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பப்ஜி எனும் செல்போன் கேம் விளையாட்டிற்கு அடிமையான வாலிபர் பெற்றோர் மற்றும் சகோதரியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #PUBG
    புதுடெல்லி :

    ஐரிஸ் நாட்டின் 'பிராடன் கிரீனி' என்பவரால் உருவாக்கப்பட்டது 'பப்ஜி' ஸ்மார்ட் போன் கேம். (Player Unknown's Battle grounds (PUBG)) என்பதே இதன் சுருக்கம். இந்த கேம் இளைஞர்கள், இளம் பெண்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இது அவர்களின் நேரத்தை வீணடித்து அந்த விளையாட்டிற்கு அடிமைகளாகவும் உருவாக்குகிறது.

    இந்த கேம்மில் சிறுசிறு குட்டித்தீவுகள் அடங்கிய உள்ள ஒரு பெரிய தீவில் 100 பேர் களம் கண்டு, போர்களத்தில் போராடி யார் வெற்றி பெருகிறார்களோ அவரே வெற்றி பெருவார் என்பதே போட்டியின் விதி. இதில், ஒருவர், இருவர், நால்வர், ஆறுபேர் என, எண்ணிக்கையில் அணி அணியாக சேர்ந்து விளையாடலாம். இதுவரை வெளிவந்த மொபைல் 'கேம்'களிலேயே உயர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால் இளைஞர்கள், கல்லுாரி பெண்கள் மத்தியில் 'பப்ஜி' விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், டெல்லியை சேர்ந்த சுராஜ் அலியாஸ் சர்னம் வெர்மா எனும் வாலிபர் பப்ஜி கேம் விளையாட கூடாது எனக்கூறியதால் பெற்றோரையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து போலீசார் கூறுகையில், ’ பெற்றோரை கொன்ற சுராஜ் அலியாஸ், பப்ஜி கேம் விளையாடி அதற்கு அடிமையானதால் பள்ளிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து மெஹ்ரவுலி எனும் இடத்தில் ரூம் வாடகைக்கு எடுத்து அங்கு கேம் விளையாடி வந்துள்ளார்.

    இதனால் பள்ளி தேர்வுகளில் தோல்வியடைந்ததால் 12ம் வகுப்பினை கைவிட்டு உள்ளான்.  ஊர் சுற்றி வந்த அவனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.  பின்னர் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சிவில் பொறியியலுக்கான டிப்ளமோ படிப்பில் அவனை மிதிலேஷ் சேர்த்து விட்டுள்ளார்.

    ஆனாலும், வீட்டுக்கு தெரியாமல் சுராஜ் செய்து வரும் சில்மிஷங்களை மோப்பம் பிடித்த அவரது சகோதரி அதை பெற்றோரிடம் போட்டுக்கொடுத்துள்ளார். இதனால் சுராஜ் செல்போன் பயன்படுத்த பெற்றோர் தடை விதித்துள்ளனர். இதனால் கேம் விளையாட முடியாத விரக்தியில் இருந்த சுராஜ் தனது குடும்பத்தினரை கொலை செய்யும் கொடூர முடிவுக்கு வந்துள்ளான்.




    கடந்த செவ்வாய் கிழமை நண்பர்களுடன் மெஹ்ராலி நகருக்கு சென்று ஆயுதங்களை வாங்கி வந்துள்ளான்.

    அதன்பின் இரவில் பெற்றோருடன் சேர்ந்து புகைப்பட ஆல்பங்களை பார்த்துள்ளான்.  வழக்கம்போல் நடந்து கொண்டான்.  அதன்பின்னர் அதிகாலை 3 மணியளவில் எழுந்த அவன் தந்தையை கத்தியால் பலமுறை குத்தி உள்ளான்.

    சத்தம் கேட்டு அதே அறையில் தூங்கி கொண்டிருந்த அவன் தாய் எழுந்து அலறினார்.  அவரை ஒரு முறை குத்தியுள்ளான்.  பின்னர் சகோதரி அறைக்கு சென்று அவரை கழுத்தில் குத்தியுள்ளான். 

    இந்த சம்பவத்தில் 3 பேரும் உயிரிழந்தனர்.  அதன்பின்பு கைகளை கழுவி தடயங்களை அழித்து விட்டு வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து போட்டு விட்டு அருகில் வசிப்போரிடம் வீட்டுக்குள் கொள்ளைக்காரர்கள் வந்துள்ளனர் என கூறியுள்ளான்.

    இதனை அடுத்து போலீசாரிடமும், கொள்ளைக்காரன் வீட்டில் கொள்ளையடிக்க வந்துள்ளான்.  ஆனால் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை என சுராஜ் கூறியுள்ளான்.  ஆனால் சுராஜை கொள்ளைக்காரன் விட்டு சென்றது ஏன் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.  தடய அறிவியல் குழு சுராஜ் தடயங்களை அழித்த விவரத்தினை கண்டறிந்தனர்.  அதன்பின் போலீசார் சுராஜிடம் நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்தது.


    கைது செய்யப்பட்ட சுராஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான், விசாரணையின் போது தண்டைனையில் இருந்து தன்னை காப்பாற்றுங்கள் என்று மட்டுமே அவன் கூறிவருவதாக போலீசார் கூறினர். குடும்பத்தினர் இறுதி சடங்குகளில் சுராஜை அனுமதிக்க கூடாது என நீதிமன்றத்தில் அவனது உறவினர்கள் கூறியதை தொடர்ந்து அனைத்து சடங்குகளையும் உறவினர்களே செய்தனர்.

    செல்போன் கேம் விளையாட்டிற்கு அடிமையான வாலிபர் பெற்றோர் மற்றும் சகோதரியை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #PUBG
    ×