பூந்தமல்லி அருகே பப்ஜி விளையாட்டில் நண்பர்களுக்கிடையே மோதல்- 2 பேருக்கு கத்திக்குத்து

படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
பூந்தமல்லி அருகே பப்ஜி விளையாட்டில் நண்பர்களுக்கிடையே மோதல்- 2 பேருக்கு கத்திக்குத்து
Published on

திருவள்ளூர்:

பூந்தமல்லி அருகே உள்ள கூடப்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சசிகுமார்(25), இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான அஜித் என்பவருடன் செல்போனில் பப்ஜி விளையாட்டை விளையாடினார்.

அப்போது சசிகுமாருக்கும் அஜித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் சசிக்குமார், அஜித் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தின் உறவினரான செல்வம், சசிகுமாரின் ஆதரவாளர்கள் விஜயகுமார், சாமுவேல், அபிலேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com