search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 people arrested"

    • 3 பேர் கைது
    • சி.சி.டி.வி. கேமரா மூலம் போலீசார் மடக்கி பிடித்தனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு கணக்கர் தெருவை சேர்ந்தவர் பிரதீப்குமார் இவரது மகன் காமேஷ் (வயது 23). இவர் பால்வண்டி டிரைவராக உள்ளார்.

    காமேஷ் கடந்த செவ்வாய்க்கிழமை குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல தனது நண்பரின் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு பரதராமிக்கு வந்துள்ளார்.

    பரதராமியில் உறவினரை பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். குடியாத்தம் அடுத்த ராமாலை கிராமம் அருகே வரும்போது மகேசை தடுத்து நிறுத்திபோலீஸ் எனக்கூறி ஒருவர் குடியாத்தம் அழைத்து வந்து சிலருடன் சேர்ந்து கஞ்சா வழக்கு போட்டு விடுவதாக மிரட்டி மோட்டார் சைக்கிள் செல்போன் 1500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மேலும் 30 ஆயிரம் கொண்டு வந்து தருமாறும் இல்லை என்றால் கஞ்சா வழக்கு போட்டு விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

    இதனையடுத்து காமேஷ் உறவினர்களுக்கு தெரிவித்து அவர்களுடன் காவல் நிலையத்திற்கு வந்து விசாரித்த போது நாங்கள் யாரும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யவில்லை என தெரிவித்தனர்.

    அப்போது போலீஸ் என கூறி காமேசை ஏமாற்றி மோட்டார் சைக்கிளைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காமேஷ் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன்,சிலம்பரசன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது தனிப்படை யினருக்கு போலீஸ் என மிரட்டி பறித்து சென்ற மோட்டார் சைக்கிளுடன் இருவர் குடியாத்தம் சித்தூர் கேட்பகுதியில் வந்து கொண்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பறித்து சென்ற மோட்டார் சைக்கிளில் இருவர் வந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி சீனிவாசன் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர்

    தான் கடந்த செவ்வாய்க்கிழமை ராமாலை அருகே மகேசை மடக்கி திருட்டு மோட்டார் சைக்கிள் என கூறியது தெரியவந்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒருவர் மாதனூரைச் சேர்ந்த கிரி (22), மோகன்குமார் (27) என தெரியவந்தது.

    இதில் மோகன்குமார் போலீஸ் என கூறியதும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடியாத்தம் அடுத்த உள்ளி மேம்பாலம் அருகே கார் மோட்டார் சைக்கிள் மோதிய சம்பவத்தில் தம்பதியை பட்டாக்கத்தி காட்டி மிரட்டிய சம்பவத்தில் குடியாத்தம் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன்பு ஜெயிலிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது.

    அந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை விற்பதற்காகவும் அதனை விற்க மனோஜை உடன் அழைத்துச் செல்ல வந்த போது போலீசாரிடம் பிடிபட்டது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் 1500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்ற கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது மது விற்றதாக தேவூரை சேர்ந்த ஜெகதீஸ்வரன்(வயது 27), முருகன்(58), எம்.ஜி.ஆர்.நகர் அருகே ஏகாம்பரம்(55) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் தொழிலா ளர்கள் தங்கி வேலை செய்ய போடப்பட்டிருந்த குடிசை வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
    • அருகிலே இருந்த கொட்ட கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டிராக்டர்கள், கரும்பு வெட்டும் எந்திரம் ஆகி யவை எரிந்து நாசமானது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே சரளைமேட்டில் கடந்த

    21-ந் தேதி இரவு வக்கீல் துரைசாமி (வயது 57) என்பவரது வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் தொழிலா ளர்கள் தங்கி வேலை செய்ய போடப்பட்டிருந்த குடிசை வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

    இதில் குடிசை வீட்டிற்கு அருகிலே இருந்த கொட்ட கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டிராக்டர்கள், கரும்பு வெட்டும் எந்திரம் ஆகி யவை எரிந்து நாசமானது.

    இதே நாளில் ஜேடர்பா ளையம்-நல்லூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு கூரை வீட்டிற்கு தீ வைத்த மர்மநபர்கள், வடகரை யாத்தூரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி வீட்டில் மண் எண்ணை குண்டுகளை வீசி சென்றனர்.

    இதையடுத்து, பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. கலை யரசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீ சார் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இதில் தொடர்புடைய வடகரை யாத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தர்மராஜ் (30), ஜேடர்பா ளையம் அருகே கரைப்பா ளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் பிரவீன் என்கிற பரமசிவம்(28), அதே பகுதியைச் சேர்ந்த கோட்டையப்பன் மகன் சுதாகர் (25) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களி டம் விசாரணை நடந்து வருகிறது.

    • பஸ்நிறுத்தத்தில் நின்று வீடியோவை காட்டியபோது சிக்கினர்
    • நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் ஒரிஜினல் நோட்டு கொடுத்தால், அதற்கு 3 மடங்கு கள்ளநோட்டு தருகிறோம்.

    கோவை,

    கோவை அரசு ஆஸ்பத்திரி எதிர்புறம் பஸ்நிறுத்தம் உள்ளது. இந்த பஸ்நிறுத்தத்தில் உக்கடம் அருகே உள்ள ஜே.கே. கார்டன் பகுதியைச் சேர்ந்த முகமது ஹனீபா (வயது 41) என்பவர் பஸ்சுக்காக காத்து நின்றார்.

    அப்போது அங்கு நின்ற 3 பேர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். எங்களிடம் கள்ளநோட்டுகள் உள்ளன, நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் ஒரிஜினல் நோட்டு கொடுத்தால், அதற்கு 3 மடங்கு கள்ளநோட்டு தருகிறோம். அதனை வைத்து நீங்கள் செலவு செய்யலாம் என ஆசைவார்த்தைகள் கூறினர். தங்களிடம் கள்ளநோட்டு இருப்பதற்கு ஆதாரமாக செல்போன் வீடியோ ஒன்றையும் காண்பித்தனர்.அதற்கு முகமது ஹனீபா, நீங்கள் இங்கேயே காத்து இருங்கள், நான் பணம் எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார். நேராக அவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த விவரங்களை தெரிவித்தார்.

    உடனே போலீசார் உஷாராகி அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்துக்கு சென்றனர். அங்கு முகமது ஹனீபா, பணம் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பில் 3 பேர் கும்பல் காத்து நின்றது. போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணை யில் அவர்கள் கோவை வீரபாண்டி பிரிவைச் சேர்ந்த பிரகாஷ் (47), குன்னூர் நஞ்சப்ப சத்தி ரத்தைச் சேர்ந்த கலைவாசன் (50), மதுரை வில்லா புரத்தைச் சேர்ந்த சண்முக பிரசாத் (36) என்பது தெரியவந்தது.

    விசா ரணையில் அவர்களிடம் கள்ளநோட்டு எதுவும் இல்லை என்பதும், வீடி யோவில் கள்ள நோட்டுகளை காண்பித்து பணம் பறிக்க முயன்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • 5 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருகின்றன.
    • சிலர் ஆன்லைன் மூலம் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவ தாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வேலகவுண்டன்பட்டி, நல்லூர், பரமத்தி, ஜேடர்பா ளையம், பரமத்தி வேலூர் ஆகிய 5 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருகின்றன.

    இந்நிலையில், பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே உள்ள கலைமகள் காம்ப்ளக்ஸில் சிலர் ஆன்லைன் மூலம் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவ தாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு ஆன்லைன் மூலம் லாட்டரி

    சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதனை யடுத்து லாட்டரி சீட்டுக ளை விற்பனை செய்த பரமத்திவேலூர் தெற்கு தெருவை சேர்ந்த வடிவேல் (வயது 42), விஜய் (24), சுல்தான்பேட்டையைச் சேர்ந்த மோகன்குமார் (33) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுக ளின் முடிவுகளை வெளியிடுவதற்கு பயன்ப டுத்தப்பட்ட 5 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.60 ஆயிரம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை கம்ப்யூட்டர் மூலம் பிரிண்ட் எடுத்து விற்பனை செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சம்பவத்தன்று கல்லூரி முடித்து அரசு பஸ்ஸில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்த போது பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று கொண்டு சென்றார்.
    • திடீரென்று அங்கு வந்த 3 வாலிபர்கள் விஷ்ணுவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி ஆடூர் அகரம் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 20). கடலூர் அரசு பெரியார் கலை கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி முடித்து அரசு பஸ்ஸில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று கொண்டு விஷ்ணு சென்றார். அப்போது 3 வாலிபர்கள் பஸ்க்குள் விஷ்ணு செல்ல வேண்டும் என கூறி திட்டியதாக தெரிகிறது.

    இதன் காரணமாக விஷ்ணு பஸ்ஸிலிருந்து இறங்கி வேறு பஸ்ஸில் செல்வதற்கு குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலை காமராஜர் சிலை அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென்று அங்கு வந்த 3 வாலிபர்கள் விஷ்ணுவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த விஷ்ணு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார், பொட்டவெளி சேர்ந்த கிஷோர், வாஞ்சிநாதன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • அரசம்பட்டு ஆற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒருவர் தப்பி ஓடினார். மீதமுள்ள 3 பேரையும் பிடித்து கைது செய்தனர்
    • போலீசார், அவர்களிடம் இருந்து 240 லிட்டர் சாராயம் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான காவலர்கள் அரசம்பட்டு ஆற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்தஅரசம்பட்டு ஆற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒருவர் மட்டும் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினார். மீதமுள்ள 3 பேரையும் பிடித்து சோதனை செய்தபோது, லாரி டியூப்களில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22), தவமணி (19), அஜித் (20) என்பதும், தப்பி ஓடியவர் மல்லாபுரம் முத்துராமன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 240 லிட்டர் சாராயம் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துராமனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • இவரது வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி.இவரது வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் இரவு ரோந்து பணியில் இருந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன், முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.எஸ்.ஐ. கலியமூர்த்தி ஆகியோர் ஆடு திருடர்கள் தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்தினர்க.டலூர் வாரசந்தையில் வடலூர் போலீசார் ஆடுகள் விற்க முயன்ற 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து முத்தாண்டிக் குப்பம் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்

    விசாரணையில் பேர்பெரியான் குப்பம் அசோக்குமார் (வயது 22), கருக்கை பிரதாப் (17), கீழ்காங்கேயன்குப்பம் ஹரிஷ் (17) என்பது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை வீட்டில் 2 ஆடுகளை திருடி சென்று வடலூர் சந்தையில் விற்க முயன்றது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், 2 ஆடுகள் ஆகிவற்றை பறி முதல் செய்தனர்.

    • கம்பம் மெட்டுசாலை, கம்பம் பைபாஸ்சாலை சந்திப்பில் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • கஞ்சா கடத்தி வந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் மெட்டுசாலை, கம்பம் பைபாஸ்சாலை சந்திப்பில் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்பத்தில் இருந்து கேரளா நோக்கி வேகமாக சென்ற ஆட்டோவை மறித்து சோதனையிட்டனர்.

    அதில் 5 கிலோ 550 கிராம் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் ஆட்டோவில் இருந்து ஒருவர் தப்பியோடிவிட்டார். மற்ற 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் கம்பம் கோம்பை சாலையை சேர்ந்த துரைப்பாண்டி மனைவி இந்திராணி (51). மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பூமிநாதன் (29), நாராயணதேவன்பட்டியை சேர்ந்த முத்தையா (39) என தெரியவந்தது.

    மேலும் தப்பியோடிய நபர் அன்பரசன் என தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வரு கின்றனர். 3 பேரையும் உத்தமபாளையம் கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தினர். வாகன சோதனையில் திறமையாக செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டினார்.

    • சக்திவேல் சுடுகாடு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதிநள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார்.
    • சக்திவேலின் கொலைக்குபிறகு மிகவும் மன உளைச்சலில் இருந்தார் பூமிகா.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி, தட்டாஞ்சாவடி காந்தி நகர் காலனியில் வசித்து வருபவர் சக்திவேல். இவர் ஆட்டோ டிரைவர். திருமணமான இவர், தட்டாஞ்சாவடி காளிகோ வில் சுடுகாடு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதிநள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார். இன்ஸ்டாகிராம் காதலிபூமிகா என்பவரை பங்கு போட்டு கொள்வதில்ஆட்டோ டிரைவர்கள் சக்திவேல்சுமன்ஆகியஇருவருக்கும்இடையே மோதல்இருந்து வந்தது.சுமன் சக்திவேலை கொலை செய்ய சதி திட்டம்தீட்டி, சம்பவத்தன்று தனது கூட்டாளிகள் உதவியுடன் சக்திவேலை காளிகோவில் சுடுகாட்டுக்கு மதுபானம் அருந்த அழைத்து சென்று தீர்த்துக்கட்டியுள்ளனர்.

    இந்த விஷயம் தொடர்பாகபண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுசபியுல்லா,இன்ஸ்பெக்டர் நந்தகுமார்வழக்குப்பதிந்து சுமன், வசந்தகுமார், குணா ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். சக்திவேலின் கொலைக்குபிறகு மிகவும் மன உளைச்சலில் இருந்த பூமிகா தனது வீட்டை விட்டு வெளியேறிஓடும் பஸ்ஸில் விஷம் குடித்து மயங்கி ய நிலையில் உயிரிழந்தார். இந்த வழக்கில்தலை மறைவாக இருந்த 3 பேரை பிடிக்க பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். இன்று காலை களத்துமேடு மகேஷ்,மணிகண்டன், கொக்கு பாளையம்அஜீத் ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். 

    • கண்டமனூர் பகுதியில் குட்கா பதுக்கி விற்பனை செய்யப்படு வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • வாகன தணிக்கையின் போது 1050 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் பகுதியில் குட்கா பதுக்கி விற்பனை செய்யப்படு வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவ தாக வந்த தகவலையடுத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர்.

    அப்போது உசிலம்பட்டி நோக்கி சென்ற வேனை தடுத்து நிறுத்தி சோதனை யிட்டனர். அதில் 1050 கிலோ குட்கா கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதுதொடர்பாக அல்லி நகரத்தை சேர்ந்த ஆனந்த் (26), அமச்சியாபுரத்தை சேர்ந்த அஜித்(26), விஜயபிரபாகர்(29) ஆகிய 3 பேரை கைது செய்து 1050 கிலோ குட்காவையும் பறி முதல் செய்தனர். மேலும் அவர்கள் யாரிடமிருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்தார்கள், எங்கு கொண்டு சென்றார்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆறுமுகம் (வயது 28), சத்யா (32) ஆகிய 2 பேரும் சாராயம் விற்றனர்.
    • போலீசார் இவர்களி டமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஆறுமுகம் (வயது 28), சத்யா (32) ஆகிய 2 பேரும் சாராயம் விற்றனர். இவர்களை கைது செய்த போலீசார் இவர்களி டமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல கோட்டி க்குப்பம் மெயின் ரோட்டில் சாராயம் விற்பனை செய்து கொண்டி ருந்த குப்பு (45) கைது செய்து 15 லிட்டர் சாரா யம் பறிமுதல் செய்தனர். இந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×