search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடு திருட்டு"

    • ஆட்டோ பறிமுதல்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    ஆரணி:

    ஆரணி -சேத்துப்பட்டு நெடுஞ்சாலை கண்ணகிநகரை சேர்ந்தவர் ரகு (வயது 38). இவரது வீட்டின் முன்பு கட்டப்பட்டி ருந்த ஆடும், பக்கத்து வீட்டில் ராணி என்பவ ரின் வீட்டின் முன்பு கட்டப்பட் டிருந்த ஆடும் நேற்று பகலில் திடீரென மாயமானது.

    உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ள வர்கள் ஆடுகளை தேடினர். அப்போது ஆடுகளுடன் ஆட்டோவில் 2 பேர் சென்றதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தி சாலை, அம்பேத்கர் நகர் அருகே ஆட்டோவில் ஆடுகளுடன் சென்ற 2 பேரை பிடித்து ஆரணி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் வேலூர் மாவட்டம், அல்லாபுரம் பகுதியை சேர்ந்த சபரி (35), இவரது மனைவி நிஷா (31) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஆடுகளை திருடி சென்றது தெரிந்தது.

    இவர்கள் மீது வேலூர், சத்துவாச்சாரி உள் ளிட்ட பல போலீஸ் நிலையங்களில் ஆடு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து, கணவன்- மனைவி இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் 2 ஆடுகளையும் பறிமுதல் செய்து அதன் உரிமையா ளர்களிடம் ஒப்படைத்தனர்.

    • பெல்லாரம் பள்ளி போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
    • கொமுராஜூலா ராமலு, அவரது மனைவி ஸ்வரூபா, மகன் சீனிவாஸ் ஆகிய 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம், மஞ்சிரியாலா மாவட்டம், மந்தமரியைச் சேர்ந்தவர் கொமுராஜூலா ராமுலு.

    இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது, ஆட்டு மந்தையில் இருந்து ஒரு ஆடு காணாமல் போனது.

    இதனால் அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்த தேஜா மற்றும் அவரது நண்பரான பழங்குடியின வகுப்பை சேர்ந்த சிலுமுலா கிரண் ஆகியோரிடம் விசாரித்தார்.

    பின்னர், இருவரையும் அவரின் மாட்டு தொழுவத்திற்கு அழைத்து சென்றார். வாலிபர்களை அவரது குடும்பத்தினர் சரிமாரியாக தாக்கி கால்களில் கயிற்றை கட்டி கொட்டகையில் தலைகீழாக தொங்க விட்டனர். மேலும் கீழே தரையில் தீ மூட்டினர்.

    தீ சுட்டதால் வலிதாங்க முடியாமல் இருவரும் அலறி துடித்தனர். இவ்வாறு அவர்கள் சித்தரவதை செய்தது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெல்லாரம் பள்ளி போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இதனையடுத்து கொமுராஜூலா ராமலு, அவரது மனைவி ஸ்வரூபா, மகன் சீனிவாஸ் ஆகிய 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • மூதாட்டியிடம் சென்று நாங்கள் ஆட்டின் அருகில் நின்று செல்பி எடுக்க விரும்புவதாக வாலிபர்கள் தெரிவித்தனர்.
    • அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை அடுத்த தமிழகப்பகுதியான கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு மெயின்ரோடு அருகே மூதாட்டி ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஆட்டோவில் சென்ற வாலிபர்கள், அந்த மூதாட்டியிடம் சென்று, 'நாங்கள் ஆட்டின் அருகில் நின்று செல்பி எடுக்க விரும்புவதாக தெரிவித்தனர்.

    அதற்கு அந்த மூதாட்டி ஒப்புக்கொண்டார். பின்னர் அந்த வாலிபர்கள் ஆட்டின் அருகில் நின்று செல்போனில் செல்பி எடுத்தனர்.

    திடீரென்று அந்த வாலிபர்கள் ஒரு ஆட்டை திருடி ஆட்டோவில் கடத்திச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் ஆட்டோவை சிறிது தூரம் துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் கோட்டக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் ஆடு திருடிய வாலிபர்களை பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது27), ராகேஷ் பாபு (22). சந்தோஷ் (21), ஆனந்த் (22) உள்பட 5 பேர் என்பது தெரியவந்தது.

    இவர்கள் ஆட்டோவில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து விட்டு மது போதையில் சென்னை திரும்பி செல்லும்போது செல்பி எடுப்பதுபோல் நடித்து ஆட்டை திருடியுள்ளனர்.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் கடலூர் சிறையில் அடைத்தனர்.

    அவர்களிடம் இருந்து ஆட்டை மீட்ட போலீசார், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் வாலிபர்கள் 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • அவர்களிடம் இருந்த வெள்ளை ஆடு மற்றும் மோட்டார் சைக்கிளில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை நத்தக்காடு கருப்பு சாமி கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (65). இவர் மேய்ச்சலுக்கு நத்தக்காடு ஏரி அருகில் தனது விவசாய பூமியில் ஆடுகளை கட்டி வருவது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்றும் ஆடுகளை அந்த பகுதியில் கட்டி மேய்ச்சலுக்கு விட்டு உள்ளார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் கட்டப்பட்டு இருந்த வெள்ளை ஆடு ஒன்றின் கயிற்றை அவிழ்த்ததை பார்த்து சுப்பிரமணி கூச்சல் போட்டு உள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

    அவர்களை கண்டதும் வாலிபர்கள் 2 பேரும் ஓட்டம் பிடிக்க அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததால் சுப்பிரமணி மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த 2 பேரையும் பிடித்து பவானி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பவானி செங்காடுகோட்டை விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த விஜய் என்கிற விஜயகுமார் (23) மற்றும் பவானி சொக்காரம்மன் நகர் பகுதியை சேர்ந்த குமார் (25) என்பதும் தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்த வெள்ளை ஆடு மற்றும் மோட்டார் சைக்கிளில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • ஆட்டை திருடி சென்று விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மது குடிக்க ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
    • வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீளவிட்டான் வி.எம்.எஸ் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 40). இவருக்கு சொந்தமான ஒரு ஆடு அப்பகுதியில் உள்ள மைதானத்தில் மேய்ந்து கொண்டிருந்தது, அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி அந்த ஆட்டை தூக்கிக் கொண்டு திருடி சென்றனர்.

    இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்த சேர்ந்த மணிகண்டன் (29), குறிஞ்சி நகரை சேர்ந்த சரவணன்( 31), அழகேசபுரத்தைச் சேர்ந்த ராமர்(51) ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆட்டை திருடியது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில், நண்பர்களாக இவர்கள் 3 பேரும் மது குடிக்க ஆசைப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களிடம் பணம் இல்லாததால், அவர்களது மற்றொரு நண்பரின் காரில் சென்று ஆட்டை திருடி சென்று விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மது குடிக்க ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார், கைதான 3 பேருக்கும் இதேபோன்று வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். ஆட்டையும் மீட்டனர்.
    • போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த கணியூரை சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மொட்டையப்பன்(வயது 32) என்பவர் கடந்த 5ந்தேதி காலை 6 மணியளவில் உடுமலை ஆட்டு சந்தையில் ரூ. 15 ஆயிரத்துக்கு ஆடு ஒன்று வாங்கி அதை அருகில் உள்ள மரத்தடியில் கட்டி விட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது கட்டி வைத்திருந்த ஆட்டை காண வில்லை. மர்ம நபர் ஆட்டை திருடி சென்று இருந்தனர். இதில் அதிர்ச்சியடைந்த மொட்டை யப்பன், இது குறித்து உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில், உடுமலை காந்தி சவுக்கு பத்ரகாளியம்மன் லே-அவுட் டை சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் சேது மாதவன் (வயது 22 )என்பவர் ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். ஆட்டையும் மீட்டனர்.

    • இவரது வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி.இவரது வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் இரவு ரோந்து பணியில் இருந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன், முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.எஸ்.ஐ. கலியமூர்த்தி ஆகியோர் ஆடு திருடர்கள் தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்தினர்க.டலூர் வாரசந்தையில் வடலூர் போலீசார் ஆடுகள் விற்க முயன்ற 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து முத்தாண்டிக் குப்பம் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்

    விசாரணையில் பேர்பெரியான் குப்பம் அசோக்குமார் (வயது 22), கருக்கை பிரதாப் (17), கீழ்காங்கேயன்குப்பம் ஹரிஷ் (17) என்பது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை வீட்டில் 2 ஆடுகளை திருடி சென்று வடலூர் சந்தையில் விற்க முயன்றது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், 2 ஆடுகள் ஆகிவற்றை பறி முதல் செய்தனர்.

    • விழுப்புரம் சுற்றுவட்டார பகுதியில் காதலர் தினத்தை கொண்டாட இளைஞர்கள் முடிவு செய்தனர்.
    • போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் காதலர் தினத்தை கொண்டாட ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    விழுப்புரம்:

    பிப்ரவரி 14-ந் தேதி ஆண்டுதோறும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது, காதலர்கள் பரிசுகளை வழங்கி, நினைவுகளை பரிமாறி கொள்வார்கள். காதலர் தினம் நெருங்குவதால் இப்போதே காதலர்கள் நினைவு பரிசை தேர்வு செய்து வருகிறார்கள்.

    இதேபோல விழுப்புரம் சுற்றுவட்டார பகுதியில் காதலர் தினத்தை கொண்டாட இளைஞர்கள் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் ஆடுகளை திருடி உள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பிரங்கிமேடு பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 20). செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (20). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். எனவே 2 பேரும் காதலர் தினம் கொண்டாட முடிவு செய்தனர். ஆனால் கையில் போதுமான பணம் இல்லை.

    எனவே ஆடுகளை திருடி அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து காதலர் தினம் கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக விழுப்புரம் அருகே மலையரசன் குப்பம் பகுதிக்கு சென்றனர். அங்கு முருகன் மனைவி ரேணுகா என்பவர் தனது வீட்டு வாசலில் 10 ஆடுகளை பட்டி அமைத்து அடைத்து வைத்திருந்தார்.

    இவற்றில் 1 ஆட்டை மட்டும் 2 பேரும் திருடி மோட்டார் சைக்கிளில் செல்ல முயன்றனர். அப்போது ஆடு கத்தியது. சத்தம் கேட்டு ரேணுகா ஓடிவந்தார். அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என உரக்க கத்தினார். இவரது அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடிவந்தனர். ஆடு திருடிய வாலிபர்களை மடக்கி பிடித்து கண்டாச்சிபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் காதலர் தினத்தை கொண்டாட ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • ஆடு திருடும் கும்பல் மீது வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாக போலீஸ் சூப்பிரண்டிடம் சிவசாமி புகார் செய்தார்.
    • கடந்த 9-ந் தேதி சொகுசு காரில் வந்த மர்ம கும்பல் காரில் ஆடுகளை தூக்கி சென்றுள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவர் ஊர், ஊராக சென்று ஆட்டு கிடை அமைத்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    தற்போது காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடி கிராமத்தில் தற்காலிகமாக ஆட்டு கிடை அமைத்து ஆடுகளை மேய்த்து வருகிறார். இவரது ஆடுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வந்தது.

    கடந்த 9-ந் தேதி சொகுசு காரில் வந்த மர்ம கும்பல் காரில் ஆடுகளை தூக்கி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவசாமி காரை விரட்டி சென்றுள்ளார். ஆனால் தடுக்க முடியாத நிலையில் அந்த பகுதிகளில் பள்ளி மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது காரின் எண் மற்றும் பதிவாகியிருந்தது.

    அதனை ஆதாரமாக கொண்டு குன்றக்குடி காவல் நிலையத்தில் சிவசாமி புகார் செய்தார்.

    புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை.

    இதையடுத்து சிவசாமி மற்றும் கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் மனுவை அளித்தனர்.

    • பனங்குளம் வடக்கு கிராமத்தில் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • ஆடுகள் கத்தியதால் தூங்கியவர்கள் எழுந்து பார்த்த போது ஒரு கருப்பு நிற காரில் ஆட்டை தூக்கி வைத்துக் கொண்டு அறந்தாங்கி சாலையில் வேகமாக சென்றுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் ஆடுகள் திருட்டு தொடர்ந்து கொண்டே உள்ளது. அதேபோல பனங்குளம் வடக்கு கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீரமுத்து மகன் சிவக்குமார் (வயது 40) என்பவர் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    அப்போது ஆடுகள் கத்தியதால் தூங்கியவர்கள் எழுந்து பார்த்த போது ஒரு கருப்பு நிற காரில் ஆட்டை தூக்கி வைத்துக் கொண்டு அறந்தாங்கி சாலையில் வேகமாக சென்றுள்ளனர்.

    இதையடுத்து அவர்களை ஒரு மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றும் அந்த காரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணன் காரணை பகுதியை சேர்ந்த தேவி ஆடுகள் வளர்த்து வருகிறார்.
    • ஆடு திருட முயன்ற அடையாறு பகுதியை சேர்ந்த அஸ்வின்குமாரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கிருஷ்ணன் காரணை பகுதியை சேர்ந்தவர் தேவி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    இங்கு மோட்டார் சைக்கிளில் வந்து ஆடு திருட முயன்ற அடையாறு பகுதியை சேர்ந்த அஸ்வின்குமார் (21) என்பவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவரை மாமல்லபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

    • 6 ஆடுகள் பறிமுதல்
    • அரக்கோணம் சிறையில் அடைத்தனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் விவசாயி. தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் 13 ஆடுகளை அடைத்து வைத்து இருந்தார்.

    காலை எழுந்து பார்த்தபோது கொட்டகையில் இருந்த ஆடுகள் திடீரென காணாமல் போனது. இது குறித்து மோகனசுந்தரம் நெமிலி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருடியவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நெமிலி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சிறுனமல்லி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விடுத்து விரட்டி சென்று பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகுவேடு பகுதியை சேர்ந்த சலாம் (வயது 26) எனவும், அவர் பல்வேறு இடங்களில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் சலாமை கைது செய்து அவரிடமிருந்து 6 ஆடுகள் மற்றும் ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் சலாமை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அரக்கோணம் கிளை சிறையில் அடைத்தனர்.

    ×