என் மலர்
நீங்கள் தேடியது "Brothers Murder"
- மாரிபாண்டி மற்றும் அருள்ராஜ் ஆகியோர் தான் காரணம் என்று ரிதன் கருதியுள்ளார்.
- உடலை அங்கேயே அந்த கும்பல் குழிதோண்டி புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெர்மல் நகர் கேம்ப்-1 பண்டுகரை பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகன்கள் மாரிப்பாண்டி(வயது 35), அருள்ராஜ்(30). இவர்கள் 2 பேரும் சமீபத்தில் மாயமாகி இருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வ.உ.சி. துறைமுக சாலையில் தனியார் அனல்மின் நிலையத்தின் பின்புறம் உப்பாற்று ஓடை பண்டுகரையில் அவர்கள் 2 பேரும் கொன்று புதைக்கப்பட்டிருந்தனர். தகவல் அறிந்து தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு மதன், தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2 பேர் உடலையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து 2 பேரையும் கொன்ற கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதில் மாரிபாண்டியனின் உறவினரான கோவில்பிள்ளை நகரை சேர்ந்த ரிதன்(25) என்பவரின் சகோதரர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு மாரிபாண்டி மற்றும் அருள்ராஜ் ஆகியோர் தான் காரணம் என்று ரிதன் கருதியுள்ளார்.
இதையடுத்து கடந்த 28-ந்தேதி ரிதன் மற்றும் அவரது கூட்டாளிகளான முனீஸ்வரன், முகமது மீரான், சங்கர் மற்றும் ஒரு இளஞ்சிறார் உள்ளிட்டோர் சேர்ந்து மாரிபாண்டி மற்றும் அவரது சகோதரர் அருள்ராஜ் ஆகிய இருவரையும் கம்பு, கல்லால் தாக்கி உப்பாற்று ஓடைக்கு தூக்கி சென்றுள்ளனர்.
அங்கு வைத்து 2 பேரையும் சரமாரி தாக்கியதில் அவர்கள் இறந்தனர். தொடர்ந்து அவர்கள் உடலை அங்கேயே அந்த கும்பல் குழிதோண்டி புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் கூறிய தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் கூடுதலாக வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று பண்டுகரை ஒடை பகுதியில் புதைக்கப்பட்ட வாலிபர் உடலை தோண்டி எடுக்கும் பணி நடந்தது.
- ஒரு கும்பல் அருள் ராஜின் வீடு அருகே கஞ்சா போதையில் ரகளை செய்துள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே உள்ள கோவில் பிள்ளை நகரை சேர்ந்தவர் சின்னத்துரை.
இவருக்கு பாண்டியன் (வயது 36), அருள் ராஜ் (30), வேல்முருகன் என்ற 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணமாகி விட்டது.
மகன்களில் வேல்முருகனுக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. பாண்டியன் மற்றும் அருள் ராஜ் ஆகியோர் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர். இதில் பாண்டியன் அடிக்கடி வெளியே சென்று விட்டு சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி அருள் ராஜ் திடீரென மாயமாகியுள்ளார். அவரை வேல்முருகன் தேடிய நிலையில் அவர் கிடைக்காததால் தெர்மல் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே நேற்று அங்குள்ள பண்டுகரை ஓடை பகுதியில் நாய்கள் சண்டையிட்டவாறு குறைத்துக் கொண்டிருந்தது.
இதனை அப்பகுதியினர் பார்த்தபோது ஒரு வாலிபர் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் கை மட்டும் வெளியே தெரிந்துள்ளது.
இது குறித்து உடனடியாக தெர்மல் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் சோபா ஜென்ஸி, ஜெயந்தி மற்றும் தாசில்தார் முரளிதரன், கிராம நிர்வாக அதிகாரி பிரேமலதா ஆகியோர் விரைந்து சென்றனர்.
இரவு நேரம் என்பதால் போலீசார் இன்று காலை அங்கு சென்று புதைக்கப்பட்ட உடலை தோண்ட முடிவு செய்தனர். இதற்கிடையே அருள் ராஜின் அண்ணனான பாண்டியனும் மாயமானார். இதனால் அவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று பண்டுகரை ஒடை பகுதியில் புதைக்கப்பட்ட வாலிபர் உடலை தோண்டி எடுக்கும் பணி நடந்தது. அப்போது அங்கு 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது கொன்று புதைக்கப்பட்டது அருள் ராஜ் மற்றும் அவரது அண்ணன் பாண்டியன் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து பாண்டியன், அருள் ராஜ் ஆகியோரது உடல்கள் அதிகாரிகள் முன்னிலையில் அடுத்தடுத்து வெளியே எடுக்கப்பட்டது. இவர்கள் இருவரையும் ஒரே கும்பல்தான் கொன்று புதைத்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடந்த 26-ந் தேதி அருள் ராஜூக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.
அப்பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் அருள் ராஜின் வீடு அருகே கஞ்சா போதையில் ரகளை செய்துள்ளனர். இதை அருள்ராஜ் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அன்று நள்ளிரவில் கும்பல் அருள் ராஜின் வீட்டிற்குள் புகுந்து அவரை வெளியே குண்டு கட்டாக பண்டுகரை பகுதிக்கு கடத்திச் சென்று தாக்கி கொலை செய்துள்ளனர்.
சத்தம் கேட்டு பாண்டியன் அங்கு சென்ற நிலையில் அவரையும் கும்பல் தாக்கி கொலை செய்துள்ளது. பின்னர் 2 பேரின் உடல்களையும் அங்கேயே புதைத்தது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று ஒருவரது கை வெளியே தெரிந்த நிலையில் நாய்கள் அந்தப் பகுதியில் வந்து கையை கடித்து இழுத்ததால் இந்த சம்பவம் வெளியாகி உள்ளது. இந்த இரட்டை கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
- கைதான 13 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கட்டாணிபட்டியை சேர்ந்தவர்கள் செல்வம் மகன்கள் மணிகண்டன் (வயது 30), சிவசங்கரன் என்ற விக்னேஷ் (25). இதில் மணிகண்டன் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
விக்னேஷ் கல்லம்பட்டியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் சிவகங்கை அருகே அழகமா நகரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு தோப்பில், அப்பகுதியை சேர்ந்த சிலர் தொலைந்து போன மாடு ஒன்றை தேடி சென்றுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் ஆடு, கோழி சத்தம் கேட்டுள்ளது. சத்தம் வந்த திசை நோக்கி சென்றபோது, தோப்பிற்குள் மணிகண்டன், விக்னேஷ் இருவரும் இருந்துள்ளனர். இதையடுத்து மாட்டை தேடி சென்றவர்கள் மற்றும் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி கிராம மக்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் ஆடு, கோழி திருட வந்ததாக கூறி பயங்கரமாக தாக்கினர்.
தப்பித்து ஓட முயற்சி செய்தபோது, மேலும் பலமாக தாக்கியதில் இருவரும் சுருண்டு கீழே விழுந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் சிறிது நேரத்தில் இறந்தனர். ஆடு, கோழி திருட வந்ததாக தவறாக எண்ணி தாக்கப்பட்டனரா? அல்லது முன்பகை காரணமா? என்பது குறித்து மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக அழகமாநகரி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (45), சேமராஜ் (31), பிரபு (30), தீபக் (19), விக்னேஸ்வரன் (31), தினேஷ் (31) உள்ளிட்ட 6 பேரை முதற்கட்டமாக போலீசார் நேற்று கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரணையில் வினோத் (34), பிரவீத் (24), அருண் பாண்டி (29), யுவராஜ் (22), அரவிந்த் (25), மணிகண்டன் (31), சீமான் (43) ஆகியோரை இன்று போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் அண்ணன், தம்பி கொலை வழக்கில் மொத்தம் 13 பேர் கைதாகி உள்ளனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக மேலும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரர்கள் மீது கடந்த 2015-ம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலவளவு போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- காதணி விழா நடந்த முருகனும், அவரது மனைவி நந்தினியும் திட்டமிட்டனர்.
- மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த விநாயகம், முருகனின் மார்பில் குத்தினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 36) சலூன் கடை நடத்திவந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண்குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். ஆடி மாதம் பிறந்ததால், குழந்தைகளுக்கு காதணி விழா நடந்த முருகனும், அவரது மனைவி நந்தினியும் திட்டமிட்டனர். இதற்காக குலதெய்வம் கோவிலுக்கு இன்று சென்று வழிபாடு நடத்தி மொட்டையடிக்க திட்டமிட்டனர். இதற்காக உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து வந்தனர்.
இதையடுத்து தனது சகோதரரான விநாயகத்தை (40) அழைப்பதற்காக அவரது வீட்டிற்கு முருகன் நேற்று சென்றார். அவரும் சலூன் கடை நடத்தி வருகிறார். சலூன் கடைகள் பெரும்பாலும் செவ்வாய்கிழமைகளில் இயங்காது. இதனால் விநாயகம் நன்கு குடித்துவிட்டு வீட்டிலிருந்தார். அப்போது முருகனு க்கும், விநாயகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறியது. இதில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த விநாயகம், முருகனின் மார்பில் குத்தினார். இதில் சம்பவ இடத்தி லேயே முருகன் துடிதுடித்து இறந்துபோனார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முருகனின் அண்ணன் விநாயகம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். குழந்தைகளின் காதணி விழாவிற்கு அழைக்க வந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி யையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த 14-ந் தேதி மது அருந்திய போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மணிகண்டனையும், அவருடன் இருந்த அவரது தம்பி சபரீஸ்வரனையும் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.
- கைதான சதீஷ்குமார், பார்த்திபன் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
நெல்லை:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் மணிகண்டன் ( வயது 25). இவர் லோடு ஆட்டோவில் ஊர், ஊராக சென்று வெங்காயம் விற்பனை செய்து வந்தார்.
ஒவ்வொரு ஊருக்கும் மொத்தமாக வெங்காயம் ஏற்றிச்சென்று சாலை ஓரங்களில் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்வது வழக்கம். கடந்த 1-ந்தேதி நெல்லை மாவட்டத்திற்கு வெங்காயம் விற்பனை செய்வதற்காக மணிகண்டன் வந்துள்ளார்.
அப்போது தனது தம்பி சபரீஸ்வரன் ( 13) என்பவரையும் ஆட்டோவில் அழைத்துக்கொண்டு நெல்லைக்கு வந்துள்ளார். இங்கு நெல்லையை அடுத்த சுத்தமல்லியில் முக்கூடல் சாலையில் வெங்காய விற்பனைக்காக தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர்.
மணிகண்டன், சபரீஸ்வரன் ஆகிய இருவரும் தினமும் தனது தந்தையுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளனர். கடந்த 13-ந்தேதி முதல் அவர்களிடம் இருந்து நாகராஜனுக்கு அழைப்பு வரவில்லை. நாகராஜன் தனது மகனுக்கு பலமுறை போன் செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் 15-ந் தேதி நெல்லைக்கு வந்து சுத்தமல்லி பகுதியில் மகன்கள் 2 பேரையும் தேடி பார்த்துள்ளார். அப்போது கொண்டாநகரத்திலிருந்து திருப்பணிகரிசல்குளம் செல்லும் சாலையில் அவர்களது லோடு ஆட்டோ நின்றுள்ளது. ஆனால் மகன்கள் இருவரையும் காணவில்லை.
பின்னர் அந்த பகுதியில் நாகராஜன் தேடிப்பார்த்துள்ளார். ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து நாகராஜன் சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தார்.
இந்நிலையில் அவர்களது லோடு ஆட்டோ நின்ற இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சற்று தொலைவில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது.
போலீசார் அந்த கட்டிடத்திற்கு சென்ற போது அங்கு மணிகண்டன் உடல் பாதி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே தலை இல்லாமல் மற்றொரு உடல் மட்டும் அழுகிய நிலையில் கிடந்தது.
போலீசாரின் விசாரணையில் அந்த உடல் மணிகண்டனின் தம்பி சபரீஸ்வரன் என்பது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சபரீஸ்வரன் தலையை தேடி கண்டு பிடித்தனர்.
பின்னர் 2 பேரின் உடலையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக இன்று அதிகாலை அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடந்த போலீஸ் விசாரணையில் அதே பகுதியில் பழக்கடை நடத்தி வந்த சுத்தமல்லி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த சுப்பையா என்பவரது மகன்களான சதீஷ்குமார் ( வயது 23), பார்த்திபன்( வயது 22) ஆகியோர் சிக்கினர்.
இவர்கள் கடந்த சில நாட்களாக மணிகண்டனுடன் சேர்ந்து மது அருந்தி வந்தது தெரிய வந்தது. கடந்த 14-ந் தேதி மது அருந்திய போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மணிகண்டனையும், அவருடன் இருந்த அவரது தம்பி சபரீஸ்வரனையும் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து சதீஷ்குமார், பார்த்திபன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான சதீஷ்குமார், பார்த்திபன் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சம்பவத்தன்று மணிகண்டன், சதீஷ்குமார், பார்த்திபன் ஆகிய 3 பேரும் பாழடைந்த கட்டிடத்தில் மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகறாறு ஏற்பட்டது. உடனே மணிகண்டனை மற்ற இருவரும் தாக்கியுள்ளனர். மேலும் அவரது கை, கால்களை கட்டி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். வெகு நேரம் ஆகியும் தனது அண்ணனை காணாததால் சபரீஸ்வரன் அங்கு சென்று தேடி பார்த்துள்ளார். அப்போது மணிகண்டன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சதீஷ்குமாரிடம் கேட்டுள்ளார்.
இதனால் சகோதரர்கள் 2 பேரும் சேர்ந்து சபரீஸ்வரனையும் கழுத்தை நெரித்து கொலை செய்து கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு எதுவும் தெரியாதது போல் இருந்துள்ளனர். எனினும் போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி சதீஷ்குமார், பார்த்திபன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மது போதையில்தான் 2 பேரும் சேர்ந்து அண்ணன், தம்பியை கொலை செய்தார்களா? அல்லது ஓரின சேர்க்கை விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மணிகண்டன் உடலின் அருகே கிடந்த சபரீஸ்வரன் உடலில் தலை இல்லாமல் இருந்தது. போலீசார் நள்ளிரவு நேரத்திலும் அங்குள்ள பாழடைந்த கட்டிடங்கள், புதர்கள் ஆகியவற்றில் சபரீஸ்வரனின் தலையை தேடி பார்த்தனர். நள்ளிரவு முதல் அதிகாலை 3 மணி வரையிலும் சுமார் 3 மணி நேரம் போலீசார் இடைவிடாது தேடி தலையை கண்டு பிடித்தனர்.
2 பேரும் கை,கால்கள் கட்டப்பட்டு 3 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒதுக்குபுறமான இடம் என்பதால் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. அந்த வழியாக சென்ற நாய்கள் சபரீஸ்வரனின் தலையை கடித்து கொண்டு சென்று புதரில் போட்டிருக்கலாம் என்று போலீசார் கூறினர்.






