மேல்மலையனூர் அருகே பரபரப்பு: காதணி விழாவிற்கு அழைக்க வந்த தம்பியை கொலை செய்த அண்ணன் போலீசார் தீவிர விசாரணை

காதணி விழா நடந்த முருகனும், அவரது மனைவி நந்தினியும் திட்டமிட்டனர்.மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த விநாயகம், முருகனின் மார்பில் குத்தினார்.
மேல்மலையனூர் அருகே பரபரப்பு: காதணி விழாவிற்கு அழைக்க வந்த தம்பியை கொலை செய்த அண்ணன் போலீசார் தீவிர விசாரணை
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 36) சலூன் கடை நடத்திவந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண்குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். ஆடி மாதம் பிறந்ததால், குழந்தைகளுக்கு காதணி விழா நடந்த முருகனும், அவரது மனைவி நந்தினியும் திட்டமிட்டனர். இதற்காக குலதெய்வம் கோவிலுக்கு இன்று சென்று வழிபாடு நடத்தி மொட்டையடிக்க திட்டமிட்டனர். இதற்காக உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து வந்தனர்.

இதையடுத்து தனது சகோதரரான விநாயகத்தை (40) அழைப்பதற்காக அவரது வீட்டிற்கு முருகன் நேற்று சென்றார். அவரும் சலூன் கடை நடத்தி வருகிறார். சலூன் கடைகள் பெரும்பாலும் செவ்வாய்கிழமைகளில் இயங்காது. இதனால் விநாயகம் நன்கு குடித்துவிட்டு வீட்டிலிருந்தார். அப்போது முருகனு க்கும், விநாயகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறியது. இதில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த விநாயகம், முருகனின் மார்பில் குத்தினார். இதில் சம்பவ இடத்தி லேயே முருகன் துடிதுடித்து இறந்துபோனார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முருகனின் அண்ணன் விநாயகம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். குழந்தைகளின் காதணி விழாவிற்கு அழைக்க வந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி யையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com