search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 arrested for"

    • மளிகை கடையில் சோதனையிட்டபோது புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
    • புளியம்பட்டி போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள குளிங்கரா பகுதியை சேர்ந்தவர் பாபு (53). இவர் தற்போது ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி சத்தி ரோட்டில் உள்ள புங்கம்பள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.

    மேலும் அங்குள்ள அரசு தொடக்க பள்ளிக்கு அருகில் மளிகை கடை வைத்துள்ளார்.

    இந்த நிலையில் பாபு தனது மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக புளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பாபுவின் மளிகை கடையில் சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட 10.5 கிலோ எடையிலான ரூ.8,800 மதிப்பிலான புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து புளியம்பட்டி போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பாபுவுக்கு விற்பனைக்காக வினியோகம் செய்த புளியம்பட்டி சேரன் வீதியை சேர்ந்த வேலுசாமி (68) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • ஒருவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுவிற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
    • போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வீரப்பன்சத்திரம் போலீசார் சத்திரோடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே ஒருவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுவிற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்துள்ள பூலாங்குறிச்சியை சேர்ந்த குணசேகரன் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 780 மதிப்பிலான 6 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல சத்தியமங்கலம் போலீசார் பண்ணாரி ரோட்டில் ரோந்து பணி மேற்கொண்டி ருந்தனர். அப்போது உதையா மரத்து மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை நடை பெற்றது தெரியவந்தது.

    உடனடியாக அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் அம்பலவாந்தல் பகுதியை சேர்ந்த அன்பரசு (21) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 8 மதுபாட்டில்கள் மற்றும் பணம் ரூ.1,600 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன், சீனிவாசனை கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ.200 மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    பு.புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவர் தனது நண்பருடன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

    இதையடுத்து அவர்கள் சந்துருவிடம் வழி கேட்பது போல் நடித்து சந்துருவின் பாக்கெட்டில் இருந்த ரூ.200-யை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயற்சி செய்தனர்.

    அப்போது அவர் சத்தம் போட்டார். அவரது சத்தத்தை ேகட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை துரத்தி பிடித்தனர். தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் புளியம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (22) சீனிவாசன் (25) என தெரிய வந்தது.

    இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.200 மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சந்தேகப்படும் படியாக நடந்து வந்த 2 பேரை போலீசார் விசாரித்தனர்.
    • போலீசார் அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே நெருஞ்சிப்பேட்டை அடுத்துள்ள சின்னப்பள்ளம் சோதனை சாவடியில் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக நடந்து வந்த 2 பேரை போலீசார் விசாரித்தனர்.

    விசாரித்ததில் நெரிஞ்சிப்பேட்டை படகு துறை வீதியை சேர்ந்த ரஞ்சித் (19) மற்றும் ராக்கி (24) என்பதும், பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து மதியழகன், சங்கரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    • இதனையடுத்து 2 பேரிடம் இருந்து 17 விலை உயர்த்த செல்போன்கள் மீட்கப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே போலீசார் ஈரோடு ரெயில் நிலையத்தின் 1-வது பிளாட்பார்மில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் அங்கு இங்குமாக திரிந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, வாளவந்தி நாட்டை சேர்ந்த மதியழகன்(40) என்பது தெரிய வந்தது. மதியழகன் ரெயில் பயணிகளை குறிவைத்து செல்போன்களை திருடி வந்தது தெரிய வந்தது.

    அவர் அளித்த தகவலின் பேரில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த சங்கரன் (26) என்பவரை போலீசார் பிடித்தனர். இதனையடுத்து 2 பேரிடம் இருந்து 17 விலை உயர்த்த செல்போன்கள் மீட்கப்பட்டன.

    இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மதியழகன், சங்கரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த–ப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • ஒருவர் நைசாக குணசேகரன் பையில் வைத்திருந்த ரூ.16,750 பணத்தை திருடி அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.
    • இது குறித்து குணசேகரன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (57). ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே குணசேகரன் புதிய ஆட்டோ வாங்குவதற்காக ரூ.16,750 வைத்திருந்தார். பின்னர் அந்த பகுதியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே 2 வாலிபர்கள் வந்து அமர்ந்தனர்.

    அதில் ஒருவர் நைசாக குணசேகரன் பையில் வைத்திருந்த ரூ.16,750 பணத்தை திருடி அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.

    திடீரென எழுந்து இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குணசேகரன் திருடன்.. திருடன் என அலறினார். அதற்குள் அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து குணசேகரன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த திருட்டு தொடர்பாக கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த நாகராஜ் (35), வெட்டுக்காட்டுவலசு, சங்கரன் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்த குமார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து குணசேகரிடம் இருந்து திருடிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நாகராஜ் மீது ஏற்கனவே கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பின்னர் நாகராஜ், குமார் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 

    ×