என் மலர்
நீங்கள் தேடியது "#கொலை"
- கடலூரில் பரபரப்பு - ஜாமீனில் வந்தவர் கொலை செய்யப்பட்டாரா? ேபாலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
- கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கெடிலம் ஆற்றில் இறந்த நிலையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் அண்ணா பாலம் கீழே கெடிலம் ஆறு ஓடுகிறது. இந்த கெடிலம் ஆற்றில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதந்திருந்தது. இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சிஅடைந்தனர்.
தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மிதந்திருந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில் கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 42) என தெரியவந்தது. இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் ராஜா என்பவரை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். பின்னர் ராஜா உயிர் இழந்தார். இந்த வழக்கை கடலூர் புதுநகர் போலீசார் கொலை வழக்காக மாற்றி இறந்த ராஜேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். ராஜேஷ் மர்மமான முறையில் கெடிலம் ஆற்றில் இறந்து கிடந்தார்.
இந்த நிலையில் ராஜேஷ் எப்படி இறந்தார்? யாரேனும் ராஜேஷை கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசினரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கெடிலம் ஆற்றில் இறந்த நிலையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காண்டிராக்டர் கொலை வழக்கை விசாரித்து முடிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- சிறைக்குள் கைதிகள் அடித்துக் கொலை செய்தனர்.
மதுரை
நெல்லை மாவட்டம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மனோ என்பவர் ஒரு வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடைக்கப்பட்டார். அவரை சிறைக்குள் கைதிகள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருந்த சிறைத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்திவு செய்ய வலியுறுத்தி 72 நாள்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவரது உடலை பெற்ற உறவினர்கள் கடந்த ஆண்டு ஜூலை 2-ந் தேதி அடக்கம் செய்தனர்.
இவரது கொலைக்கு பழி வாங்கும் வகையில் அடுத்த சில நாட்களில் நெல்லை மாவட்டம் தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் கண்ணன் என்பவரை 10 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது.
இந்த கொலை வழக்கில் மொத்தம் 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலர் கைதானார்கள். இந்த வழக்கு நெல்லை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொல்லப்பட்ட கண்ணனின் தந்தை நாராயணன், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் கண்ணன் கொலை வழக்கில் கைதானவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் அவர்களால் சாட்சிகள் மிரட்டப்படுவார்கள். சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
எனவே கண்ணன் கொலை வழக்கைவிரைவாக விசாரித்துமுடிக்கவும், அதுவரை குற்றவாளி களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் கிருஷ்ணா தாஸ் ஆஜராகி, கண்ணன் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் பலர் குற்றப் பின்னணியை கொண்டவர்கள். ரவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றவர்கள்.
எனவே இந்த வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
விசாரணை முடிவில் நீதிபதி, மனுதாரர் மகன் கொலை வழக்கை சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டு 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- வீட்டை சுற்றி வளைத்து அதிரடியாக புகுந்தனர்.
- சரியான நேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டதால் கொலை திட்டம் தடுக்கப்பட்டு உள்ளது.
அம்பத்தூர்:
கொரட்டூர், கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் மர்மகும்பல் பதுங்கி இருப்பதாக இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்துபோலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து அதிரடியாக புகுந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த 3 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்த மேலும் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவர்கள் கொரட்டூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ், கல்லூரி மாணவரான அஜய் மற்றும் பட்டரைவாக்கம் பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்பது தெரிய வந்தது.
அவர்கள் சிறையில் இருக்கும் ஒரு ரவுடியின் திட்டப்படி அதேபகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை தீர்த்து கட்ட திட்டமிட்டு பதுங்கி இருந்தது தெரிந்தது. சரியான நேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டதால் கொலை திட்டம் தடுக்கப்பட்டு உள்ளது.
கைதானவர்களிடம் இருந்து அரிவாள், பட்டாக் கத்தி மற்றும் அதனை கூர்மைப்படுத்த பயன் படுத்தும் எந்திரம், இரும்பு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 3 பேர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முத்துராமலிங்கம் நடத்திய ஒர்க்ஷாப்பில் மலையரசன் என்பவர் வேலை பார்த்து வந்தார்.
- அப்போது சுனிதாவுக்கும், மலையரசனுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.புளியங்குளத்தைச் சேர்ந்தவர் முத்து ராமலிங்கம் (வயது 45). இவர் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். அதன் பின்னர் அவருக்கு மின்வாரியத்தில் வேலை கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் மதுரை அரசரடியில் பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி முத்து ராமலிங்கம் நரிக்குடி-திருச்சுழி சாலையில் காரேந்தல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள நாடாகுளம் கண்மாய் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலையில் காயம் இருந்தது. அருகில் அவர் கொண்டு சென்ற பேக் மற்றும் அவர் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் கிடந்தது. அவர் விபத்தில் இறந்தது போல் கிடந்தார்.
இது தொடர்பாக முத்துராமலிங்கத்தின் சித்தப்பா மகன் முருகன் என்பவர் திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதில் முத்துராமலிங்கம் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் சந்தேகத்தின் பேரில் முத்துராமலிங்கத்தின் மனைவி சுனிதா (43) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
முத்துராமலிங்கம் நடத்திய ஒர்க்ஷாப்பில் மலையரசன் (25) என்பவர் வேலை பார்த்து வந்தார். அப்போது சுனிதாவுக்கும், மலையரசனுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி அறிந்த முத்துராமலிங்கம் மனைவியை கண்டித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சுனிதா, கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்கு மலையரசனின் உதவியை நாடியுள்ளார். இருவரும் சேர்ந்து திட்டமிட்டபடி முத்துராமலிங்கத்தை சம்பவத்தன்று அடித்துக்கொலை செய்து அவர் விபத்தில் இறந்தது போல் காட்டுவதற்காக சாலையோரம் உடலை வீசிச் சென்றுள்ளனர்.
இந்த கொலைக்கு மலையரசின் நண்பர் சிவா (23) என்பவரும் உடந்தையாக செயல்பட்டு வந்தார். முத்துராமலிங்கம் கொலை செய்யப்பட்டது உறுதியானதை தொடர்ந்து அவரது மனைவி சுனிதா மற்றும் கள்ளக்காதலன் மலையரசன், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சிவா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மலையரசன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று இரவு முத்துராமலிங்கம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நானும், புளியங்குளத்தைச் சேர்ந்த சிவாவும் கட்டையால் அவரை அடித்துக்கொலை செய்தோம். பின்னர் அவரது உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து 3 கிலோமீட்டர் தூரம் எடுத்துச்சென்று நரிக்குடி-திருச்சுழி சாலையில் காரனேந்தல் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரம் போட்டுவிட்டு சென்று விட்டோம். அவர் வாகன விபத்தில் இறந்தது போல் காட்டுவதற்காக இவ்வாறு செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.
சுனிதா கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாரின் மனைவி ஆவார். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகள் அன்னபூரணியுடன் வந்து முத்துராமலிங்கத்தை திருமணம் செய்துள்ளார். பின்னர் புளியங்குளம் அருகே உள்ள அணிக்கலக்கியேந்தல் கிராமத்தில் வசித்துள்ளார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சுனிதா தன்னை விட 20 வயது குறைந்த வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்து கணவரை கொலை செய்த சம்பவம் காரியாபட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அண்ணன் சமுத்திரம், அவரது மகன் மணிகண்டன் மற்றும் உறவினர் தலைமுத்து ஆகியோர் மாரிமுத்துவிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி உள்ளனர்.
- அப்போது அதனை தடுக்க முயன்ற மாரிமுத்துவின் மனைவி மாரியம்மாளை மிரட்டி உள்ளனர். இந்த சம்பவத்தின்போது மாரிமுத்துவும் அரிவாளால் மணிகண்டனை வெட்டி உள்ளார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மீனாட்சிபுரம் தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 59), விவசாயி. இவரது அண்ணன் சமுத்திரம் (60). இவர்களுக்கு இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
சமுத்திரம் தனது தம்பிக்கு சொந்தமான இடத்தில் 15 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாரிமுத்து தனது நிலத்தில் எலுமிச்சை பயிரிட்டு இருந்தார். அதில் நாற்றுகள் அழுகி விட்டதால் நேற்று மாலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் எலுமிச்சை நாற்றுகளை அகற்றி விட்டு நிலத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவர் அண்ணன் ஆக்கிரமித்து இருந்த இடத்தையும் சீர் செய்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அவரது அண்ணன் சமுத்திரம், அவரது மகன் மணிகண்டன் மற்றும் உறவினர் தலைமுத்து ஆகியோர் மாரிமுத்துவிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி உள்ளனர்.
அப்போது அதனை தடுக்க முயன்ற மாரிமுத்துவின் மனைவி மாரியம்மாளை மிரட்டி உள்ளனர். இந்த சம்பவத்தின்போது மாரிமுத்துவும் அரிவாளால் மணிகண்டனை வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி மாரிமுத்துவின் மனைவி மாரியம்மாள் தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சமுத்திரம், மணிகண்டன், தலைமுத்து ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து தகராறில் அண்ணனே தம்பியை கொலை செய்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சேலம் அருகே விவசாயி கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கடந்த 26-ந் தேதி நிலப்பிரச்சினை தொடர்பாக லோகநாதனுக்கும், வெங்கடாசலத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள வேட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அம்மாசி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவியின் மகன் லோகநாதன் (வயது 47), விவசாயி. 2-வது மனைவியின் மகன் வெங்கடாசலம் (38). அம்மாசிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தில் 2 மகன்களும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி நிலப்பிரச்சினை தொடர்பாக லோகநாதனுக்கும், வெங்கடாசலத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஒருவரை யொருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார்2 இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சர்வேயரை வைத்து நிலத்தை அளவீடு செய்து பிரித்து கொள்ளுமாறு அவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் லோகநாதனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக இறந்தார். கடந்த 26-ந் தேதி வெங்கடாசலம் தாக்கியதில் தான் லோகநாதன் காயமடைந்து இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
அதன்பேரில் போலீசார் வெங்கடாசலத்திடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. லோகநாதனின் தம்பி வெங்கடாசலம், அவரது மனைவி அமுல், அக்கா பானுமதி, அம்மா தனம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
- கைதான வினோத் ஏற்கனவே தாம்பரம் ரெயில் நிலையத்திற்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிறைக்கு சென்று வெளியே வந்தவர்.
- கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கோகிலன் (வயது57). தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். இவரும் அதே பகுதிைய சேர்ந்த வினோத்தும் (32) நண்பர்களாக பழகி வந்தனர்.
நேற்று இரவு வினோத்தும், பழவியாபாரி கோகிலனும் காமராஜபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுபான கடையில் ஒன்றாக மது குடித்தனர். பின்னர் அவர்கள் பஸ் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வினோத் அருகில் உள்ள கடைக்கு சென்று காய் வெட்டும் கத்தியை வாங்கி வந்து நண்பர் கோகிலனை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கோகிலன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,
இதனை கண்ட பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற வினோத்தை மடக்கி பிடித்து வைத்து சேலையூர் போலீஸ் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர்.
உதவி ஆணையர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட கோகிலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கைதான வினோத் ஏற்கனவே தாம்பரம் ரயில் நிலையத்திற்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிறைக்கு சென்று வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பழனியம்மாளுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
- இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீவட்டிப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தும்பிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சேர்வராயன். இவரது மகன் மாது (வயது 37). கூலி தொழிலாளி.
மாதுவுக்கும், அதே ஊரை சேர்ந்த பழனியம்மாள் (வயது 52) என்ற பெண்ணுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மாது குடிபோதையில் பழனியம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் பதிலுக்கு பழனியம்மாள் அவரை சத்தம் போட்டார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை உருவானது.
தொடர்ந்து இருவரும் ஆபாசமான வார்த்தைகளை பேசி சண்டை போட்டனர். இதை கண்டு அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டு மாதுவிடம் சண்டை போடாமல் இருக்கும்படி கூறி விலக்கி விட்டனர். ஆனால் மாது அங்கிருந்து செல்லாமல் கோபத்தில் கல்லை எடுத்து பழனியம்மாளின் தலையில் தாக்கினார்.
இதனால் அவரது தலையில் இருந்து ரத்தம் குபு, குபுவென பீறிட்டு வெளியேறியது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பலத்த காயம் ஏற்பட்ட பழனியம்மாளை மீட்டு அக்கம், பக்கத்தினர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். பழனியம்மாளுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீவட்டிப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளி மாது வீட்டில் இல்லை. போலீசார் கைது செய்து விடுவார்கள் என கருதி அவர் தலைமறைவாகி விட்டார்.
மாது குறித்து அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரித்தபோது பரபரப்பு தகவல் கிடைத்தது.
மாதுவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. ஏற்கனவே திருமணம் ஆனவர். குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல், வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் மது குடித்து வந்தார். இதனால் அவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாதுவிடம் இருந்து விவாகரத்து பெற்று சென்று விட்டார். தற்போது அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மாது விரக்தி அடைந்தார். இதனால் மாது அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டார். இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த பழனியம்மாள், அந்த பெண்ணையும், மாதுவையும் கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட விரோதத்தால் பழனியம்மாளை மாது கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார், மாது மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி (வயது60).
- மாயாண்டியின் உறவினர்கள் தச்சநல்லூரில் உள்ள மதுரை-நெல்லை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி (வயது60). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 27-ந் தேதி கடைக்கு செல்வதாக கூறி சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக அவரது உறவினர்கள் தச்சநல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது மாயாண்டி வழக்கமாக ஒரு வாலிபருடன் தினமும் மதுக்குடிப்பது வருவது தெரியவந்தது. அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் வழக்கம் போல சம்பவத்தன்றும் நாங்கள் இருவரும் மதுகுடித்துவிட்டு சென்றுவிட்டோம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாயாண்டியின் உறவினர்கள் இன்று காலை தச்சநல்லூரில் உள்ள மதுரை-நெல்லை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு கடும்போக்குவரத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் தச்சநல்லூர் வேப்பங்குளம் வழியாக திருப்பி விடப்பட்டன.
சம்பவ இடத்திற்கு தச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாயாண்டி மாயமான வழக்கில் போலீசார் அலட்சியமாக செயல்படுவதாகவும், தீவிர விசாரணை நடத்தி உடனடியாக அவரை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து நெல்லை கிழக்கு மண்டல துணை கமிஷனர் சீனிவாசன், மாநகர தலைமையிடத்து துணை கமிஷனர் அனிதா ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் மாயாண்டியை தேடும் பணியில் தீவிரம் காட்டினர். அப்போது தாழையூத்து ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு பாதி அழுகிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார்.
அவரது உடலில் அடிபட்ட காயங்களும் இருந்தன. அவர் மாயாண்டியாக இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அவரது உறவினர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். அவர்கள் அங்கு இறந்து கிடந்தது மாயாண்டி என்பதை உறுதி செய்தனர்.
அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இங்கு வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனினும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகே சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
- போலீஸ் நிலையத்தில் ஆய்வு
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரன் பிரசாத் நேற்று மாலை "திடீர்" என்று வந்தார். அங்கு வந்த அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். போலீசாருக்கு சில அறிவு ரைகளையும் வழங்கினார். போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றியும் எவ்வளவு புகார் மனுக்கள் வருகின்றன என்பது குறித்தும் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டார்.
கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தல மாக திகழ்வதால் போலீஸ் நிலையத்தையும் சுற்றுப்பு றங்களையும் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு எவ்வளவு புகார் மனுக்கள் வருகின்றன என்பது குறித்தும் எந்த மாதிரியான வழக்குகள் பதிவாகுகின்றன என்பது குறித்தும் எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்தும் நான் ஆய்வு மேற்கொண்டேன். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு உள்ளேன்.
டி.ஜி.பி.யின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (வெள்ளிக்கிழமை) குமரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை நாகர்கோவிலில் நடைபெற இருக்கிறது. இதில் 2 ஆயிரம் போலீசார் பங்கேற்கின்றனர். 50-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு போலீசாருக்கு பரிசோதனை செய்கின்றனர்.
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் கடற்கரைப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் போலீஸ் ரோந்து ஏற்படுத்தப்படும்.
கன்னியாகுமரியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கழுத்து அடிபட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு ரெயில்வே பாலத்தின் அடியில் வீசப்பட்டு பிண மாக கிடந்தார். மர்மமான முறையில் நடந்த அந்த வாலிபரின் கொலை வழக்கு குறித்து மிக விரைவில் துப்பு துலக்கப்படும்.
அதற்காக கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர் கன்னியா குமரியில் நடைபெற்ற போலீ சாரின் குடும்பங்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
- திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே செவ்வாத்தூர் புதூரை சேர்ந்தவர் செல்வராஜ்.
- வீடு திறக்காததால் வீட்டுக்குள் இருந்த அம்சா அக்கம் பக்கத்தினருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்தார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே செவ்வாத்தூர் புதூரை சேர்ந்தவர் செல்வராஜ். திருப்பத்தூரில் உள்ள கடையில் இரவு நேர பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராமரோஜா (வயது 58).
இவர்களுக்கு புனிதா என்ற மகளும், ஏழுமலை என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக உள்ளார்.
இதனால், செல்வராஜ் மற்றும் அவரது மனைவி ராமரோஜா மருமகள் அம்சா (வயது21) மற்றும் 10 மாத பேத்தியுடன் வீட்டில் வசித்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு பணிக்காக செல்வராஜ் திருப்பத்தூர் சென்றார்.
இரவு சுமார் 10 மணியளவில், வீட்டுக்குள் மருமகளும் பேத்தியும் தூங்கினர். ராமரோஜா வெளி தாளிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே உள்ள திண்ணையில் தூங்கினார். அந்த நேரத்தில் அவரை மர்ம நபர்கள் கழுத்தை நெறித்து கொலை செய்தனர்.
நேற்று காலை வெகு நேரமாகியும், வீடு திறக்காததால் வீட்டுக்குள் இருந்த அம்சா அக்கம் பக்கத்தினருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்தார்.
அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது, ராமரோஜா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில், கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக ராமரோஜாவின் மருமகள் மற்றும் பெரிய குனிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.