search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரிக்க உத்தரவு
    • குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர அறிவுறுத்தினார்

    கலவை:

    ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார். அப்போது அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

    பின்னர் மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையிலுள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்று உத்தர விட்டார்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உடன் இருந்தனர்.

    • மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    • குடிசை வீடுகளையும் நேரில் பார்வையிட்டர்

    காவேரிப்பாக்கம்:

    தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதால் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் பனப்பாக்கம் பேரூராட்சியில் தாழ்வான பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொண்டுள்ளதையும், கசக்கால்வாய் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது கலெக்டர் வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, பேரூராட்சி செயல் அலுவலர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
    • ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட மேலபுலம் ஊராட்சியில் ரூ.29 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது.

    இதன் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து அதே கிராமத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.35.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.

    இதில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, சோளிங்கர் எம்.எல்.ஏ முனிரத்தினம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ரவி, ஊராட்சி மன்ற தலைவர் அனிதா நாராயணன், தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தி.மு.க ஒன்றிய பொருளாளர் பிரகாஷ் மற்றும் ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டரிடம் பா.ம.க.வினர் மனு
    • இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும் என புகார்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே முள்ளுவாடி ஊராட்சி கலவை கூட்ரோடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு. தெரிவித்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ப.சரவணன் தலைமையில் அக்கட்சி யினர், கலெக்டர் வளர்மதி யிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

    அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    புதிய டாஸ்மாக்கடை அமைய உள்ள இடம் பிரதான சாலையாக உள்ளதால் பல கிராமங்க ளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக ளுக்காக இந்த சாலை வழியாக செல்ல வேண்டி உள்ளது. அதே போல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், மதுக் கடை மூலம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    அப்போது ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ந. சுப்பிரமணி,மாவட்ட தலைவர் எம்.எஸ்.பாரி, மாவட்ட உழவர் பேரியழக்க செயலாளர் மணிவண்ணன்,மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் கிரி குமரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.டி.மகேந்திரன், பசுமை த்தாயகம் பொறுப்பாளர் ரத்தின குமார், செல்வமுருகன், அஜய் ஆறுமுகம் மகளிர் சங்க நிர்வாகிகள் தேவி, அமுதா சிவா, ஒன்றிய செயலா ளர்கள், லோக நாதன், பாரத், நகர செயலாளர் துளசி ரவி முள்ளுவாடி தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் செந்தாமரை ரஜினி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஜெயந்தி விழா முன்னிட்டு ஏற்பாடு
    • நாளை நாட்டிய மஹோத்சவம் நடக்கிறது

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாள்தோறும் யாகங்கள், அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். முரளிதர சுவாமிகளின் 63-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டும் பல்வேறு சிறப்பு ஹோம பூஜைகள், அபிஷேக, ஆராத னைகளும், நாள்தோறும் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 1000 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய மஹோத்சவம் நிகழ்ச்சி நாளை காலை முதல் மாலை வரை நடைபெறுகிறது.

    பரத நாட்டிய நிகழ்ச்சியை அலமேலு பாஸ்கரன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர்.ஜோதிமணி, ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர். பாலாஜி நந்தகோபால், பெங்களூர் டாக்டர்.பரசுராமன், வக்கீல் மோகனமுரளி, சென்னை சந்திரசேகரசெட்டி, ஆடிட்டர் தேவராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பைரவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 64பைரவர் யாகமும், அஷ்ட கால மகா பைரவருக்கு 1000 கிலோ விபூதி அபிஷேகமும் நடைபெறுகிறது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ராணிப்பேட்டை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜெ.லட்சுமணன், துணை தலைவர் என்.பி.பழனி, நெமிலி கஜேந்திரன், பாக்கி யலட்சுமி, சென்னை டாக்டர்கள்.ரங்கராஜன், விஷ்வஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    நாட்டிய மஹோத்சவம் மற்றும் பைரவர் ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், துரைமஸ்தான், மாவட்ட பொருளாளர் ஏவி.சாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி கலந்து கொண்டு, இளைஞரணி மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என பேசினார்.

    கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி வருகிற 17-ந் தேதி சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநாடு, இளைஞர் அணி செயலாளரும்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் வெள்ளை சீருடை அணிந்து கலந்து கெள்ள வேண்டும் என்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி உள்பட செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பா ளர்கள், உள்ளாட்சி, கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் குமுதா நன்றி கூறினார்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்
    • கூச்சல் குழப்பம் ஏற்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் ஹரிணிதில்லை தலைமையில் ,துணைத்த லைவர் கமலராகவன், நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    கூட்டத்தில் திமுக உறுப்பினர் பிருந்தா, எனது வார்டு பகுதிக்கான பணிகளை கேட்டு எந்த பணிகளும் நடைபெறவில்லை, கூட்டத்திற்கு வருவதே பயனற்றது வெளிநடப்பு செய்வதாக கூறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை நகரமன்ற தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் சமரசம் செய்ததை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றார்.

    இதை தொடர்ந்து உறுப்பினர்கள் சுரேஷ், ரவிச்சந்திரன், சீனிவாசன், மோகன், செந்தில்குமார் ஆகியோர் தங்கள் வார்டு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஆஞ்சநேயர் கோவில் குளம், பூண்டி மகான் ஆசிரம குளம் ஆகியவை குறித்து பேசினர்.

    உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு , அதிகாரிகள் தொடர்ந்து நகராட்சியில் நிதி நிலை சரியில்லை என கூறியதால், உறுப்பினர்கள் வரிவசூல் செய்வது அதிகாரிகளின் பணி அதை முறையாக மேற்கொள்ளவில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் அதிகாரிகள் , உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    • அரசின் இலவச வீடு கேட்டு நடந்தது
    • போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்

    கலவை:

    ஆற்காடு அருகே வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது33).

    இவர் அரசின் இலவச வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தின் கீழ் வீடு கேட்டு கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் இவரது வீடு 2 நாட்களுக்கு முன்பு இடிந்துள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் வேப்பூர் மெயின் ரோட்டில் தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அங்கு வந்த ஆற்காடு போலீசார் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட்டார்
    • போலீசார் உடனிருந்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது அலுவலகத்தில் பின்பற்றப்படும் அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட்டார்.

    மேலும் புகார் மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையிலுள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்தார்.

    பின்னர் வழக்கு சம்பந்தமான கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    பொது மக்களிடையே நற்பெயர் பெறும் வகையில் அன்பாகவும், மரியாதையுடனும் பழகி பணிசெய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, மங்கையர்கரசி, ஷாகின் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    • 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராகவேந்திரா மூளைச்சாவு அடைந்தார்.
    • சிறுவன் ராகவேந்திராவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கலைச் சேர்ந்தவர் அருள். இவரது மனைவி பரிமளா. இத்தம்பதியின் மகனான ராகவேந்திரா 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 18-ந்தேதி இரவு நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் ஆற்காடு-ஆரணி சாலையில் ராகவேந்திரா சென்றார். அப்போது, எதிரே வந்த நபர்கள் மீது சிறுவன் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ராகவேந்திராவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராகவேந்திரா மூளைச்சாவு அடைந்தார்.

    மகன் இறந்துவிட்ட துக்கம் தாங்காமல் பெற்றோர் உடைந்து போக… அவர்களை அழைத்து உடலுறுப்பு தானம் குறித்தும், சிறுவனின் உறுப்புகள் மூலம் பலர் புதுவாழ்வு பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் மருத்துவர்கள் விளக்கினர். இதற்கு சிறுவனின் பெற்றோர் சம்மதிக்க, மின்னல் வேகத்தில் மருத்துவர்கள் உடல் உறுப்புகளை அகற்றி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் சி.எம்.சி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் அப்போலோ மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.

    இதையடுத்து, சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் ராகவேந்திராவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் சென்றனர். அப்போது மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது சிறுவனின் பெற்றோர், தங்களுக்கு உடல் உறுப்பு தானம் பற்றி எதுவும் தெரியாது, மருத்துவர்கள் சொன்னதால் விழிப்புணர்வு பெற்றதாக அழுதபடி அமைச்சரிடம் கூறினர். இதனால், உருக்கமாக இருகரம் கூப்பி வணங்கிய அமைச்சர், கண்ணீர் சிந்தியபடி, அவர்களின் காலில் விழவும் முயன்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


    • புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை
    • உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம்,காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என காவேரிப்பாக்கம் போலீசார் பள்ளி கல்லூரிகள் அருகில் உள்ள கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.

    அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடைகளின் உரிமையாளர்களிடம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

    • கலெக்டர் வளர்மதி தகவல்
    • தானியங்களின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுதானிய ஆண்டு-2023 ஐ முன்னிட்டு பொதுமக்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நாளை முதல் சிறுதானிய உணவுத்திரு விழாவானது பஸ் நிலையங்கள், கல்லூரிகள் மற்றும் பொது மக்கள் கூடும் சந்தைகளில் நடைபெறவுள்ளது.

    மேற்படி உணவுத் திருவிழாவில் சிறுதானிய உணவுகள் குறித்த கண்காட்சி பல்வேறு அரசுத்துறைகள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி களில் இடம்பெற்றுள்ள குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் சார்பில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் மற்றும் சிறுதானியங்களின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது.

    இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) ராணிப்பேட்டை சந்தை, 2 -ந்தேதி ஓச்சேரி சந்தை, 4-ந்தேதி நெமிலி சந்தை, 5-ந்தேதி மின்னல் கிராமம்,6-ந்தேதி சோளிங்கர் பஸ் நிலையம், 7-ந்தேதி பாணாவரம் சந்தை, 8-ந்தேதி அரக்கோணம் பஸ் நிலையம், 11-ந்தேதி ஆற்காடு பஸ் நிலையம், 19-ந்தேதிராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் மேலும் நுகர்வோர் மன்றங்கள் செயல்படும் கல்லூரி களிலும் சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெறும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் சிறுதானிய உணவுத்திரு விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறுதானிய உணவுகளின் பயன்பாடு குறித்து தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

    ×