என் மலர்
ராணிப்பேட்டை - Page 2
- 5 நிலைகள் கொண்டதாக அமைக்கப்படுகிறது
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
வாலாஜா:
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 89 பரிவார மூர்த்திகளுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆரோக்லட்சுமி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு 31 அடி உயரத்தில் 5நிலைகள் கொண்ட ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை மிக பிரம்மாண்டமான முறையில் நேற்று முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது.
இதற்கான பூர்வாங்க பூஜையாக சப்தகன்னிகள், நவகன்னிகைகள் மற்றும் ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கு பொங்கலிடுதல் வைபவம், சுமங்கலி பூஜை தன்வந்திரி மூலவருக்கு 108 கலச திருமஞ்சனம் நடைபெற்று பலவகையான வண்ண மலர்கள் கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
முன்னதாக கணபதி பூஜை, வாஸ்து பூஜை, அஷ்டதிக் பாலகர் பூஜை, கூஷ்மாண்ட பூஜை, கோபூஜையுடன் தொடங்கி அகில இந்திய விஷ்ணு சகஸ்ர நாம பாராயண கலாசார கூட்டமைப்பைச் சேர்ந்த ஆண், பெண் உறுப்பினர்கள் சுற்று வட்ட நகர கிராம மக்கள், தன்வந்திரி குடும்பத்தி னர்கள், மற்றும் முக்கி யஸ்தர்கள் பங்கேற்று 1008 செங்கல் பூஜையுடன் பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் நாராயணி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பாலாஜி, ரத்தினகிரி பாலமுருகன டிமை ஸ்வாமிகள், சித்தஞ்சி மோகனானந்த ஸ்வாமிகள், 108 சக்தி பீடம் காமாட்சி ஸ்வாமிகள், லலிதாம்பிகை பீடம் பாலானந்த ஸ்வாமிகள், நெமிலி பாலாபீடம் கவிஞர் எழில்மணி ஸ்வாமிகள், வனதுர்கா பீடம் பிரசாத் ஸ்வாமிகள், பூமாத்தம்மன் பீடம் வடபாதி சித்தர் ஸ்வாமிகள், சரபேஸ்வரர் பீடம் ஞானபிரகாச ஸ்வாமிகள், திருத்தணி பாலாபீடம் யோகானந்த ஸ்வாமிகள், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி மற்றும் தொழிலதிபர்கள் ஜெ.லட்சுமணன், சரவணன், மகேந்திர வர்மன், திருப்பாற்கடல் சுந்தரம், டாக்டர். ரங்கராஜன் சென்னை, முன்னாள் காவல்துறை ஆணையர் அறிவுச்செல்வம் ஐ.பி.எஸ், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். ஸ்ரீதரன் மற்றும் அனந்தலை ஊராட்சிமன்ற தலைவர் தேவகி மகா தேவன், துணைத்தலைவர் மீனா பெருமாள், அரசியல் பிரமுகர்கள் முரளி, சுரேஷ், வாலாஜாபேட்டை நகர கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு மாநில மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு 108 கலச திருமஞ்சன வைபவத்துடன் மாபெரும் புஷ்பயாகம் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன் நேற்று மாலை வரை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் விஷேச அருட் பிரசாதமும் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் வழங்கினார்.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
- சென்னையை சேர்ந்தவர்
- போலீசார் விசாரணை
நெமிலி:
சென்னை தண்டையார் பேட்டை பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் அஜித் என்கிற மணிகண்டன் (வயது 24). எலக்ட் ீசியன். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வெங்கடாபுரத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது சம்பத்ராயன் பேட்டையில் உள்ள தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாத அஜித் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை நண்பர்கள் மீட்க முயன்றும் முடியவில்லை.
உடனடியாக இதுகுறித்து அரக்கோணம் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் அஜித்தை பிணமாக மீட்டனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பர்கள் வீட்டிற்கு வந்தவர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ஆற்காடு பாலாற்றங்கரை யில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் மின்சார தகனமேடை கட்டபட்டுள்ளது.
இந்த நிலையில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் முன்புறம் இருப்பு கூரை அமைத்தல், சுற்றுசுவர் உயரம் அதிகரித்தல், பாலாபிஷேக மண்டபம், அவரச ஊர்தி வாகனம் நிறுத்தம் கொட்டகை ஆகிய விரிவாக்க கூடுதல் பணிகள் செய்யப்பட உள்ளது.
இந்த பணிகளுக்கான பூமி பூஜை விழாவிற்கு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பளவக்கொடி சரவணன், பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடந்தது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த கைனூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் கைனூர் பஞ்சாயத்து தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஏரி மற்றும் குளங்களில் உள்ள நீர் நிலைகளை சுத்தப்படுத்தி நீரை சேமிக்க வேண்டும், குடிநீர் வீணாவதை தவிர்க்க குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கிராம சபை கூட்டத்தில் கைனூர் ஊராட்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர் நரேஷ், பஞ்சாயத்து செயலாளர் கமலக்கண்ணன், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, கீதா, புவனேஸ்வரி, மீனாட்சி, சங்கர் கணபதி, புருஷோத்தனி, விமலா, துரைசாமி மற்றும் 150 க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் கலந்து கொண்டனர்.
- உடல்நிலை சரியாகாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த கல் லாளகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45), விவசாயி. இவருக்கு சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற் கொலைக்கு முயன்றார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து அவரது மனைவி நதியா கொண்டபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 202 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளியும் கிடைத்தது
- அனைத்தும் கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது
சோளிங்கர்:
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்தில் யோக நரசிம்மர் கோவில், யோக ஆஞ்சநேயர் கோவில், லட் சுமி நரசிம்மர் கோவில், தக்கான்குளம் ஆஞ்சநேயர் கோவில், மலை அடிவாரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை திறந்து காணிக்கை பணத்தை எண்ணும் பணி உதவி ஆணையர் ஜெயா மேற்பார்வையில் நடந்தது.
இதில் 42 லட்சத்து 95 ஆயிரத்து 302 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
மேலும் 202 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளியும் இருந்தது. அவை அனைத்தும் கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் கிஷோர் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- உதவி கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக் டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்ட 254 நபர்களில், கை, கால் பாதிக்கப்பட்டவர்கள் 66 நபர்களுக்கும், காது கேளா தோர் 26 நபர்களுக்கும், கண் பார்வை பாதிக்கப்பட்ட 24 நபர்களுக்கும், மனவளர்ச்சி குன்றியவர்கள் 29 நபர்களுக்கும் மற்றும் குழந்தை நல மருத் துவரால் பரிந்துரைக்கப் பட்ட 22 நபர்களுக்கும் தேசிய அடையாள அட்டை பெற மருத்துவ சான்றுகள் மாவட்ட கலெக்டர் வளர் மதி தலைமையில் வழங்கப் பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக் கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை 60 நபர்களுக்கும், முதல்- அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் 31 நபர்களுக்கும் பதிவும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அறிவுசார் குறைபாடுடையவர்களுக்கான பராமரிப்பு நிதி உதவித் தொகை வேண்டி 38 நபர் களும், வங்கி கடன் வேண்டி 21 நபர்களும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 4 நபர் களும், சக்கர நாற்காலி வேண்டி 4 நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
மேலும் 1 நப ருக்கு ரூ.10,500 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள், 2 நபர்களுக்கு தலா ரூ.9,500 மதிப்பிலான சக்கர நாற்காலி ஆக மொத் தம் 3 பயனாளிகளுக்கு ரூ.29,500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
- தாய் புகார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ஆற்காடு திமிரி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமி. இவர் கடந்த 10-ந் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். அப்போது 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்த மற்றொரு மாணவி இது குறித்து ஆசிரியையிடம் கூறியுள்ளார். தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் சிக்கிய மாணவி மீட்கப்பட்டார்.
இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெமிலி ஒன்றிய குழு தலைவரிடம் வழங்கினர்
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
நெமிலி:
நெமிலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்க ளான அசநெல்லிகுப்பம், ரெட்டிவலம், கீழ் வீதி, சம்பத்துராயன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முடிதிருத்தும் தொழிலை நம்பி 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலும் சொந்த வீடு இன்றி வாடகை வீடுகளில் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நெமிலி முடிதிருத்தும் தொழிலாளர் நாவிதர் நலச்சங்கம் சார்பில் வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு விடம் வழங்கினர்.
இதில் துணை குழு தலைவர் தீனதயாளன், முடி திருத்தும் தொழிலாளர் நாவிதர் நலச்சங்க தலைவர் ஏகாம்பரம், செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் பெருமாள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்களும் உடனிருந்தனர்.
- நாளை நடக்கிறது
- ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தகவல்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை, கீழ்புதுப்பேட்டையில் நோய்கள் தீர்த்து ஆரோக்யம் அருளும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானை, மூலவராக கொண்டு தாய், தந்தையர்க்கு அர்ப்பணிக்கும் விதத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை
நிர்மாணித்துள்ளார் டாக்டர் முரளிதர ஸ்வாமிகள்.
இங்கு தினந்தோறும் யாகங்கள், ஹோமங்களும் நடைபெற்று யக்ஞபூமியாக போற்றப்படுகிறது. இங்கு நடைபெறாத யாகங்கள், ஹோமங்களே இல்லை என கூறும் அளவிற்கு நித்ய யாக, ஹோமங்களுக்கான யக்ஞ பீடம் எனலாம் என்ற அளவிற்கு தனிச்சிறப்புடன் தனித்தன்மை வாய்ந்தது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.பல்வேறு தனிச்சிறப்புகளுக்கென்றே பெயர் பெற்ற தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு ராஜகோபுரம் அமைத்திட வேண்டும் என்பதே பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் நெடு நாள் விருப்பமாக இருந்து வந்தது.தற்போது ஸ்ரீ தன்வந்திரி பகவான் அனுக்கிரஹத்தினாலும், தன்வந்திரி குடும்பத்தினர் ஆதரவுடனும் ராஜகோபுரத்தையும் அமைத்திடும் திருப்பபணிக்கு நாளை பூமி பூஜை நடைபெற உள்ளது.
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ராஜகோபுரமானது 21அடி அகலம், 31அடி உயரத்தில் 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரமாக அமைய உள்ளது.இந்த ராஜகோபுரத்திற்கான பூமி பூஜை பங்குனி மாதம் 9ம்தேதி, நாளை மார்ச் 23 ம்தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து திரளான பெண்கள் பங்கேற்கும் சூக்த பாராயணத்துடன், பல வண்ண மலர்களால் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு தன்வந்திரி ஹோமத்துடன் புஷ்பயாகமும் நடைபெற உள்ளது.தெய்வீக அம்சத்துடன் அமைய உள்ள இந்த ராஜகோபுரம் பூமி பூஜைக்கு குருமார்கள், ஆன்மீகஅன்பர்கள், அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
- கடந்த 3 நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழைபெய்து வந்தது.
- சேதமடைந்த பயிர்களை பார்த்து விவசாயிகள் மிகவும் வேதனையடைந்தனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புதூா், மாலைமேடு, கா்ணாவூா், குப்புகல்மேடு, கூத்தம்பாக்கம், மங்கலம் கீழ்வீராணம் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழைபெய்து வந்தது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னல், சூறை காற்றுடன் பெய்த கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி நாசமானது.
சேதமடைந்த பயிர்களை பார்த்து விவசாயிகள் மிகவும் வேதனையடைந்தனர்.
இந்நிலையில் அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.