பொதுமக்கள் சாலை மறியல்

அரசின் இலவச வீடு கேட்டு நடந்ததுபோலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்
ஆற்காடு அருகே மறியலில்  ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.
ஆற்காடு அருகே மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.
Published on

கலவை:

ஆற்காடு அருகே வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது33).

இவர் அரசின் இலவச வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தின் கீழ் வீடு கேட்டு கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் இவரது வீடு 2 நாட்களுக்கு முன்பு இடிந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் வேப்பூர் மெயின் ரோட்டில் தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த ஆற்காடு போலீசார் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com