search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் காந்தி"

    • மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட 642 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கவரப்பேட்டையில் நடைபெற்றது.
    • கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

    பெரியபாளையம்:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட கும்மிடிபூண்டி ஒன்றியத்தில் உள்ள கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, கும்மிடிப்பூண்டி, புதுகும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம், ஈகுவார்பாளையம், மாநெல்லூர், நேமளூர் உள்ளிட்ட 9 கிராமங்களில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட 642 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கவரப்பேட்டையில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.வி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

    இதில் டி.ஜே.ஜி. தமிழரசன், கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், நிர்வாகிகள் நெல்வாய் மூர்த்தி, கவரப்பேட்டை திருமலை, ஒன்றிய குழு உறுப்பினர் ஜோதி, புலியூர் புருஷோத்தமன், திருஞானம், பிரசாத், இஸ்மாயில், கும்மிடிப்பூண்டி தாசில்தார் ப்ரீத்தி, வருவாய் ஆய்வாளர் பொன்னி, கிராம நிர்வாக அதிகாரிகள் ஜோதிபிரகாசம், திவ்யா, அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராகவேந்திரா மூளைச்சாவு அடைந்தார்.
    • சிறுவன் ராகவேந்திராவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கலைச் சேர்ந்தவர் அருள். இவரது மனைவி பரிமளா. இத்தம்பதியின் மகனான ராகவேந்திரா 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 18-ந்தேதி இரவு நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் ஆற்காடு-ஆரணி சாலையில் ராகவேந்திரா சென்றார். அப்போது, எதிரே வந்த நபர்கள் மீது சிறுவன் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ராகவேந்திராவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராகவேந்திரா மூளைச்சாவு அடைந்தார்.

    மகன் இறந்துவிட்ட துக்கம் தாங்காமல் பெற்றோர் உடைந்து போக… அவர்களை அழைத்து உடலுறுப்பு தானம் குறித்தும், சிறுவனின் உறுப்புகள் மூலம் பலர் புதுவாழ்வு பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் மருத்துவர்கள் விளக்கினர். இதற்கு சிறுவனின் பெற்றோர் சம்மதிக்க, மின்னல் வேகத்தில் மருத்துவர்கள் உடல் உறுப்புகளை அகற்றி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் சி.எம்.சி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் அப்போலோ மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.

    இதையடுத்து, சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் ராகவேந்திராவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் சென்றனர். அப்போது மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது சிறுவனின் பெற்றோர், தங்களுக்கு உடல் உறுப்பு தானம் பற்றி எதுவும் தெரியாது, மருத்துவர்கள் சொன்னதால் விழிப்புணர்வு பெற்றதாக அழுதபடி அமைச்சரிடம் கூறினர். இதனால், உருக்கமாக இருகரம் கூப்பி வணங்கிய அமைச்சர், கண்ணீர் சிந்தியபடி, அவர்களின் காலில் விழவும் முயன்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


    • கடந்த 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் முதல் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
    • ஜவுளித்துறைக்கு பல்வேறு நிதி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

    கோவை:

    கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடந்தது.

    ஜவுளி துறையில் தொழில்நுட்ப ஜவுளி பிரிவு என்பது முக்கியமான சந்தையை பிடித்து வரும் நிலையில், தமிழகத்தில் தொழில்நுட்ப ஜவுளி தொழிலில் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும், தொழில்நுட்ப ஜவுளி சந்தையின் சர்வதேச வாய்ப்புகள், தொழிலில் உள்ள சிக்கல்கள், அதை எவ்வாறு களையலாம் என்பது குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

    கடந்தாண்டு முதல் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. தற்போது 2-வது கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.

    2 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் முதல் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில் கோவையில் 2-வது கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.

    ஜவுளித்துறைக்கு பல்வேறு நிதி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

    மாநில ஜவுளித்துறை சார்பில் புதிய ஜவுளி பாலிசி விரைவில் வெளியிட போகின்றோம். டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப மாநில அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு மில்லியன் எகனாமி என்ற இலக்கை அடைய இந்த கருத்தரங்கம் உதவும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மத்திய, மாநில அரசின் ஜவுளித்துறையின் செயலாளர்கள், ஆணையர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டுறவு பட்டு சங்கங்கள் மூலம் வருவாய்களை அதிகரிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.
    • கைத்தறி ரகங்களை விசைத்துறையில், உற்பத்தி செய்து வருவதை தடுக்க தனிகுழு அமைக்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வழக்கறுத் தீஸ்வரர் கோவில் தெருவில், ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் புதிய விற்பனை நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

    இதனை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.பின்னர் அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது-

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் உருவாக்கப்படும் பட்டுகள் தான் உண்மையான கைத்தறி பட்டுகள். இந்த பட்டுக்களில் தான் தங்கத்தின் அளவு, வெள்ளி அளவு ஆகியவற்றுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    கோ-ஆப்-டெக்ஸ் நிறுவனம் ரூ.7 கோடி நஷ்டத்தில் இயங்கியது. தற்போது அதில் ரூ.9 கோடி லாபம் கொண்டு வந்துள்ளோம். கூட்டுறவு பட்டு சங்கங்கள் மூலம் வருவாய்களை அதிகரிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. ரூ.150 கோடியாக இருந்த விற்பனையை ரூ.200 கோடியாக உயர்த்தினோம். இந்த ஆண்டு ரூ.400 கோடி இலக்கு வைத்துள்ளோம். இதை நாங்கள் ரூ.1000 கோடியாக அதிகரிப்போம்.

    காமாட்சியம்மன் பட்டு கூட்டுறவில் விற்பனை ரூ.10 கோடியில் இருந்து ரூ.13 கோடியாக அதிகரித்துள்ளது. நலிவடைந்த சங்கங்களுக்கு முதலீடுகள் கொடுத்து தொடர்ந்து அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

    கைத்தறி ரகங்களை விசைத்துறையில், உற்பத்தி செய்து வருவதை தடுக்க தனிகுழு அமைக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு உண்மையான பட்டு எது? என்று தெரியவில்லை. இதனை தடுக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் போலி பட்டுகள் குறித்த விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அனைத்து கூட்டுறவு கடைகளிலும், இதுகுறித்து தகவல்கள் இடம்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சரின் உதவியாளர் ராஜசேகரன் (62) காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அமைச்சரை மிரட்டும் தொனியில் பேசிய 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    நெமிலி:

    கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை சென்று விட்டு தனது காரில் ராணிப்பேட்டை நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தார்.

    அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர், தான் வக்கீல் என்றும், தன்னிடம் ராணிப்பேட்டையை சேர்ந்த ஒருவர் பணம் வாங்கியுள்ளார். அதை நீங்கள் தான் உடனடியாக வாங்கித்தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    சிறிது நேரம் கழித்து மீண்டும் போனில் தொடர்புகொண்ட அந்த நபர், அமைச்சரை தொந்தரவு செய்யும் வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அமைச்சரின் உதவியாளர் ராஜசேகரன் (62) காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தீவிரமாக விசாரித்த போலீசார், செல்போன் சிக்னலை வைத்து 2 வாலிபர்களை பிடித்தனர்.

    அவர்களிடம் விசாரித்தபோது, சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த கோகுல்(25), கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த பாலாஜி(31) என்றும் தெரிய வந்தது.

    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அமைச்சரை மிரட்டும் தொனியில் பேசிய 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    ×