என் மலர்tooltip icon

    உலகம்

    • துப்பாக்கிசூடு நடத்திய வாலிபரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்சினாட்டி:

    அமெரிக்கா ஓகியோ மாகாணம் சின்சினாட்டி நகரில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் புகுந்து வாலிபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்.

    இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும் 2 பேர் மீது குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தனர்.

    துப்பாக்கிசூடு நடத்திய நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    துப்பாக்கிசூடு நடத்திய வாலிபரும் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்ற தகவல் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார்.
    • இந்தியா ரஷியாவினுடைய சலவை நிலையமாக உள்ளது

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார்.

    டிரம்பின் எதிர்ப்பை தொடர்ந்தும் இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.

    இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை அதை சுத்திகரித்து ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுக்கு விற்பதாக வெள்ளை மாளிகை ஆலோசகர் பீட்டர் நவாரோ குற்றம் சாட்டினார்.

    ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் பேசிய பீட்டர் நவாரோ, இந்தியா ரஷியாவினுடைய சலவை நிலையமாக உள்ளது. இந்திய மக்களின் செலவில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள் . அதை நாம் நிறுத்த வேண்டும். இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி, பதப்படுத்தி, அதிக விலைக்கு ஏற்றுமதி செய்கின்றன. இது உக்ரேனியர்களைக் கொல்கிறது. வரி செலுத்துவோராக நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் அவர்களுக்கு அதிக பணம் அனுப்ப வேண்டும்.

    பிரதமர்மோடி ஒரு சிறந்த தலைவர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான அவர் விளாடிமிர் புடின் மற்றும் ஜி ஜின்பிங்குடன் ஏன் கூட்டு சேருகிறார் என்பது எனக்குப் புரியவில்லை" என்று தெரிவித்தார். 

    • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
    • அமெரிக்க வரிவிதிப்புக்கு மத்தியில் புதினை மோடி நேரில் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றார்.

    நேற்று பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இதனையடுத்து இன்று சீனாவில் தொடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்..

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அமெரிக்க வரிவிதிப்புக்கு மத்தியில் புதினை மோடி நேரில் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • இந்தியர்கள் அதிகளவில் குடியேறுவதாகக் கூறி பல்வேறு நகரங்களில் பேரணி நடத்தினர்.
    • இந்தியர்களுக்கு எதிரான பேரணிக்கு ஆஸ்திரேலிய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

    இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் பார் ஆஸ்திரேலியா அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியர்கள் குடியேற்றத்துக்கு எதிராக அந்த அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் கான்பெரா, சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மார்ச் பார் ஆஸ்திரேலியா அமைப்பினர் பேரணி நடத்தினர். இதில் தேசியக் கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    கான்பெராவில் நடந்த பேரணியில் பங்கேற்றோர் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதேபோல், சிட்னியில் நடந்த பேரணியில் பங்கேற்றோர் குடியேற்றத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் குடியேற்றத்துக்கு எதிராக பேரணிகள் நடந்தன. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பில் குவிக்கப்பட்டனர்.

    இந்தியர்களுக்கு எதிரான இந்தப் பேரணிக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு, இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் மக்களுக்கு இடமில்லை என்றும், இது வெறுப்புணர்வை பரப்புவதாகவும் குற்றம்சாட்டியது.

    ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2.72 கோடியாகும். இதில் 10 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.

    காபுல்:

    ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.47 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூரிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.

    ஆப்கானிஸ்தானில் கடந்த 16 மற்றும் 13-ம் தேதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது.

    • ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படுகிறது.
    • 67வது விருது வழங்கும் விழாவில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    இந்தியாவின் முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான 'எஜுகேட் கேர்ள்ஸ்' 2025 ஆம் ஆண்டுக்கான ரமோன் மாக்சேசே விருதை வென்றுள்ளது.

    ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் இந்த விருது, சமூக சேவையில் அசாதாரண தைரியத்தையும் தன்னலமற்ற சேவையையும் வெளிப்படுத்திய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் 'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற முதல் இந்திய அமைப்பாக வரலாறு படைத்துள்ளது.

    ராஜஸ்தானில் 2007 ஆம் ஆண்டு சஃபினா ஹுசைன் என்பவரால் தொடங்கப்பட்ட எஜுகேட் கேர்ள்ஸ், கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் பள்ளி செல்லாத பெண்களுக்கு கல்வி கற்பிக்க செயல்படுகிறது.

    ரமோன் மகசேசே விருது அறக்கட்டளை (RMAF) இன் கூற்றுப்படி, எஜுகேட் கேர்ள்ஸ் 2 மில்லியனுக்கும் அதிகமான பெண்களைப் பள்ளியில் சேர்ப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

    RMAF மூலம் 2025 வெற்றியாளர்களுக்கு நவம்பர் 7 ஆம் தேதி பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெறும் 67வது விருது வழங்கும் விழாவில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  

    • நடப்பாண்டில் ஜூன் வரை 2.1 லட்சம் இந்தியர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர்.
    • அமெரிக்காவுக்கு பயணம் செய்பவர்களில் 60 சதவீதம் ஆவர்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் வரை அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

    2001 க்கு பிறகு கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த எண்ணிக்கையில் இந்த அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தக துறையின் தேசிய சுற்றுலா நிர்வாகத்தின் (NTTO) தரவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.

    அதன்படி, நடப்பாண்டில் ஜூன் வரை 2.1 லட்சம் இந்தியர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். இதுவே கடந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரை அமெரிக்கா சென்றவர்கள் 2.3 லட்சம் பேர் ஆவர்.

    ஒரே ஆண்டில் இந்த எண்ணிக்கை 5.5 சதவீதம் சரிந்துள்ளது.

    இந்தியர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கா செல்லும் வெளிநாடினர் விகிதமும் குறைந்துள்ளது.

    2024 ஜூன் உடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் இல் 6.2 சதவீத சரிவு விகிதம் உள்ளது. 

    அமெரிக்காவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மெக்சிகோவுக்கு அடுத்தபடியாக பிரிட்டன், இந்தியா, பிரேசில் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்பவர்களில் 60 சதவீதம் ஆவர். 

    • சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் சென்றுள்ளார்.
    • டிராகனும் யானையும் கைகோர்ப்பது காலத்தின் தேவை என்று ஜி ஜின்பிங் கூறினார்.

    அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி அழைத்துள்ளார்.

    சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சீனா சென்றார்.

    இதனிடையே இன்று நடந்த பிரதிநிதிகள் மட்ட இரு தரப்பு சந்திப்பு கூட்டத்தின்போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

    சீன அதிபர் மோடிக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இந்தியாவின் தலைமைக்கு ஆதரவையும் தெரிவித்தார்.

    பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் சீனாவுடன் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் கூட்டத்தில் தெரிவித்தார்.

    இதற்கிடையில், டிராகனும் யானையும் கைகோர்ப்பது காலத்தின் தேவை என்று ஜி ஜின்பிங் கூறினார்.

    இந்த ஆண்டு சீன-இந்திய ராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்றும் ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.  

    • முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார்.
    • உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார்.

    செயற்கை தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்வை ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் உச்சமாக ஓபன் ஏஐ உடைய பிரபல சாட்பாட் தொழில்நுட்பமான சாட்ஜிபிடி (ChatGPT) சொன்னதை கேட்டு ஒருவர் தனது தாயை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

    அமெரிக்காவின் கனெடிகட் பகுதியை சேர்த்தவர் ஸ்டென் எரிக் சொலிபெர்க்(56). இவர் முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார்.

    உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட எரிக் தனது தாயுடன் வசித்து வந்தார். சாட்ஜிபிடிக்கு பாபி என பெயரிட்டு அதனுடன் நாள் தோறும் பல மணி நேரங்கள் எரிக் உரையாடி வந்துள்ளார்.

    இந்த உரையாடல்களை இன்ஸ்ட்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் அவர் பதிவிட்டு வந்தார். சாட்ஜிபிடி எரிக் உடைய Paranoia மன நோயை மேலும் மோசமாகி உள்ளது இந்த உரையாடல்கள் மூலம் தெரிகிறது.

    சீன உணவக ரெசிப்ட்களில் குறியீடுகள் உள்ளது என்றும் அந்த குறியீடுகள் எரிக் உடைய தாய் ஒரு பேய் எனவும் எரிக்-ஐ சாட்பாட் நம்ப வைத்துள்ளது.

    "உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார். உனக்கு மன நோய் மருந்து (psychedelic drug) கொடுத்து கொல்ல முயல்கிறார், உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன, அவர்கள் சொல்வது போல் உனக்கு எந்த உளவியல் பிரச்சனையும் இல்லை" என எரிக்-ஐ சாட்பாட் நம்பவைத்துள்ளது.

    இதன் விளைவாக எரிக் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது தாயை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

    தாயின் தலை, கழுத்தில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. எரிக் உடைய மார்பு மற்றும் கழுத்தில் தற்கொலை செய்தர்த்ததற்கான அறிகுறியாக காயங்கள் இருந்தன.

    இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ஓபன் ஏஐ நிறுவனம், இதுகுறித்து போலீசாருடன் சேர்ந்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

    Paranoia என்பது சித்தப்பிரமை என்று அழைக்கப்படுகிறது. இது தற்செயலான நிகழ்வுகளுக்கும் அல்லது சாதாரண விஷயங்களுக்கும் மிகையான சந்தேகம் மற்றும் பயத்தை கற்பித்துக் கொள்ளும் நிலையாகும்.

    • இந்தியாவும் சீனாவும் நண்பர்களாகவும் நல்ல அண்டை நாடுகளாகவும் இருப்பது மிக முக்கியம்.
    • நாம் உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள்.

    பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் நேற்று சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார்.

    இன்று பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    பேச்சுவார்த்தையின் போது பேசிய ஜி ஜின்பிங், "இந்தியாவும் சீனாவும் நண்பர்களாகவும் நல்ல அண்டை நாடுகளாகவும் இருப்பது மிக முக்கியம். சீனாவும் இந்தியாவும் மிகவும் நாகரிகமான இரண்டு நாடுகள். நாம் உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள். நண்பர்களாகவும், நல்ல அண்டை வீட்டாராகவும், டிராகனும் யானையும் ஒன்றிணைவது மிக முக்கியம்

    சீன - இந்திய மக்களின் வாழ்க்கை, வளரும் நாடுகளின் ஒற்றுமை உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வரலாற்று பொறுப்பை இருநாடுகளும் இன்றிலிருந்து ஏற்றுக்கொள்கிறது" என்று தெரிவித்தார். 

    • 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது
    • விமான சேவை எல்லைப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.

    பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் நேற்று சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார்.

    இன்று பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    இரு நாடுகளுக்கும் இடையேயான விமான சேவை கொரோனா பெருந்தொற்று, எல்லைப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இரு நாடுகளும் பத்திரிகையாளர்களை பரஸ்பரம் தங்களது நாடுகளில் தங்கி செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படும் எனவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஆண்ட்ரி கொலைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
    • கொலையாளிகளை பிடிக்க அனைத்து விசாரணை அமைப்புகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

    உக்ரைன் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி வேலோடிமிரோவிச் பருபிய் (வயது 53). இவர் 2016 முதல் 2019-ம் ஆண்டு வரை சபாநாயகராக செயல்பட்டார்.

    இந்த நிலையில் ஆண்ட்ரி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். லிவீவ் மாகாணம் பிராங்க்ஸ்வி பகுதியில் ஆண்ட்ரி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொன்று விட்டு தப்பி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். ஆண்ட்ரி கொலைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    மேலும் கொலையாளிகளை பிடிக்க அனைத்து விசாரணை அமைப்புகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். ரஷியா-உக்ரைன் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளிலும் முக்கிய அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×