என் மலர்
உலகம்

அமெரிக்காவில் குடியிருப்புக்குள் புகுந்து வாலிபர் துப்பாக்கி சூடு- 2 பேர் பலி
- துப்பாக்கிசூடு நடத்திய வாலிபரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்சினாட்டி:
அமெரிக்கா ஓகியோ மாகாணம் சின்சினாட்டி நகரில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் புகுந்து வாலிபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்.
இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும் 2 பேர் மீது குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தனர்.
துப்பாக்கிசூடு நடத்திய நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
துப்பாக்கிசூடு நடத்திய வாலிபரும் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்ற தகவல் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






