என் மலர்tooltip icon

    உலகம்

    24 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறை..  அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் சரிவு
    X

    24 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறை.. அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் சரிவு

    • நடப்பாண்டில் ஜூன் வரை 2.1 லட்சம் இந்தியர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர்.
    • அமெரிக்காவுக்கு பயணம் செய்பவர்களில் 60 சதவீதம் ஆவர்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் வரை அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

    2001 க்கு பிறகு கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த எண்ணிக்கையில் இந்த அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தக துறையின் தேசிய சுற்றுலா நிர்வாகத்தின் (NTTO) தரவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.

    அதன்படி, நடப்பாண்டில் ஜூன் வரை 2.1 லட்சம் இந்தியர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். இதுவே கடந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரை அமெரிக்கா சென்றவர்கள் 2.3 லட்சம் பேர் ஆவர்.

    ஒரே ஆண்டில் இந்த எண்ணிக்கை 5.5 சதவீதம் சரிந்துள்ளது.

    இந்தியர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கா செல்லும் வெளிநாடினர் விகிதமும் குறைந்துள்ளது.

    2024 ஜூன் உடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் இல் 6.2 சதவீத சரிவு விகிதம் உள்ளது.

    அமெரிக்காவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மெக்சிகோவுக்கு அடுத்தபடியாக பிரிட்டன், இந்தியா, பிரேசில் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்பவர்களில் 60 சதவீதம் ஆவர்.

    Next Story
    ×