என் மலர்
தலைப்புச்செய்திகள்
நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியது.
தெலுங்கானா மாநிலம் கத்வால் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விஜய் தேவரகொண்டா கார் சென்றபோது கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
கார் சேதமடைந்த நிலையில், விஜய் தேவரகொண்டா காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.
புட்டபர்த்திக்கு சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பியபோது விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கவின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்கள் கவினுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.
சமீபத்தில் வெளியான கிஸ் திரைப்படம் கவலையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
கிஸ் படத்தை தொடர்ந்து, கவின் அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் மாஸ்க் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், 'மாஸ்க்' படத்தின் முதல் சிங்கிளான 'கண்ணுமுழி' பாடல் இன்று மாலை வெளியானது. இப்பாடலை, அந்தோணிதாசன், சுப்லாஷினி ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.
- ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானதால் கடன்மேல் கடன் வாங்கியுள்ளார்.
- கடன் கழுத்தை நெரித்ததால், அம்மாவின் நகைகளை திருடும்போதும் மாட்டியதால் கொலை.
உத்தர பிரதேச மாநலத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 20 வயது வாலிபர், லோன் ஆப் மூலம் கடன்மேன் கடன் வாங்கியதால் நெருக்கடிக்கு உள்ளாகி தாயின் நகையை திருடியபோது மாட்டிக்கொண்டதால், தாயையே அடித்துக் கொலை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
உ.பி.யில் உள்ள பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த காலி என்ற பகுதியில் வசித்து வரும் வாலிபர் நிகில் யாதவ் என்ற கொலு. இவர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். Aviator என்ற ஆன்லைனில் பணம் கட்டி விளையாடியுள்ளார். பணத்தை இழக்க இழக்க கடன் வழங்கம் ஆன்லைன் செயலிகளில் (M Pokket, Flash Wallet, RAM Fincorp) கடன் பெற்றுள்ளார். அந்த செயலில் வட்டி மற்றும் மறைமுக கட்டணம் என அதிகமாக தொகை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
பணம் செலுத்த வழியில்லாததால் தாயின் நகையை திருடி, அதை விற்று பணத்தை செலுத்த முயற்சி செய்துள்ளார். நகையை திருடும்போது, தாய் கையும் களவுமாக பிடித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர், இந்த கொலை கொள்ளை சம்பவத்தால் நடைபெற்றது என நாடகம் ஆடுவதற்காக, வீட்டில் உள்ள பொருட்களை அங்கும் இங்குமா தூக்கி வீசியுள்ளார். பின்னர் தனது தந்தைக்கு போன் செய்து, மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை அடித்தனர். அப்போது என்னை தாக்கிவிட்டு, அம்மாவை கொலை செய்து விட்டு ஓடிவிட்டனர் எனக் கூறியுள்ளார்.
தந்தை இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் நிகில் யாதவிடம் தொடர் விசாரணை நடத்தும்போது, உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மீது கொலை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். அவர் நடித்த முதல் படம் கிச்சா. அதனால் அவரை அவரது ரசிகர்கள் கிச்சா சுதீப் என அழைக்கிறார்கள். இவர் நடிகர் விஜய்யின் புலி, ஈ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார்.
இந்நிலையில் கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மார்க் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்க் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழு கடந்த வாரம் அறிவித்தது.
அதன்படி, மார்க் படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை வெளியானது.
- இருதயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ராமதாசை கண்காணித்து வருகின்றனர்.
- சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,"ராமதாசின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருதயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ராமதாசை கண்காணித்து வருகின்றனர்.
சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டது.
முன்னதாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பா.ம.க.நிறுவனர் ராமதாசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
முதல்வர் இன்று காலை ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலையில் நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிரீமியா உள்பட 14 மாகாணத்தில் உக்ரைன் டிரோன் மூலம் சரமாரி தாக்குதல்.
- 251 டிரோன்களை வீழ்த்தியதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பலமுறை போர் நிறுத்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்தார். ரஷியா பேச்சுவார்த்தைக்கு இணங்காததால், சண்டை நீடித்து வருகிறது.
தற்போது டிரோன்கள் மூலம் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்று ரஷியாவின் முக்கியமான எண்ணெய் நிலையம் மற்றும் வெடிபொருள் தொழிற்சாலையை டிரோன் மூலம் தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேற்கு ரஷியாவில் உளள் நிஸ்னி நோவ்கோரோடு மாகாணத்தில் உளள் ஸ்வெர்ட்லோவ் வெடிபொருள் தொழிற்சாலை தாக்கப்பட்டதாக உக்ரைன் ஜெனரல் ஸ்டாஃப் தெரிவித்துள்ளார். அங்கு வெடிச்சத்தம் கேட்டதாகவும், தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷியப் படைகளுக்கு வெடிபொருட்கள் வழங்கும் முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாக இந்த தொழிற்சாலை திகழ்ந்து வருகிறது. கிரீமியாவில் உள்ள எண்ணெய் நிலையத்தையும் டிரோன் தாக்கியதாவும், இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார். கிரீமியா உள்பட 14 மாகாணத்தில் உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதை ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது.
251 டிரோன்கள் வான்பாதுகாப்பு சிஸ்டம் மூலம் தடுத்து அழிக்கப்பட்டதாக தெரிவித்த ரஷியா, போர் தொடங்கிய பிறகு உக்ரைனின் மிகப்பெரிய டிரோன் தாக்குதல் இதுவாகும் எனவும் தெரிவித்துள்ளது.
- பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மக்கள் நலன் மற்றும் நல்லாட்சியாக மாறியுள்ளது.
- ஜனநாயகத்தின் தாயாகக் கருதப்படும் புனித பூமியான பீகார் பெருமளவிலான வாக்குகளையும் வழங்கும்.
பீகார் தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜே.பி. நட்டா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பீகார் தேர்தல் மாநிலத்தின் தொடர் வளர்ச்சி, ஊடுருவல்காரர்களை அகற்றுதல், மீண்டும் காட்டு ராஜ்ஜியம் வருதை தடுப்பதற்கானது.
ஜனநாயகத்தின் தாயாகக் கருதப்படும் புனித பூமியான பீகார், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதன் ஆசீர்வாதங்களையும், பெருமளவிலான வாக்குகளையும் வழங்கும் என நாள் முழுமையான நம்புகிறேன்.
பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மக்கள் நலன் மற்றும் நல்லாட்சியாக மாறியுள்ளது.
இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் 2 கட்டங்காளக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று தேதி அறிவித்தது.
- நீதிமன்றங்களில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
- மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி அன்று, தவெக சார்பில் நடைபெற்ற விஜயின் பரப்புரையின்போது கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நீதிமன்றங்களில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 41 பேர் உயிரிழந்த கரூர் வேலுச்சாமிபரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சென்று சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.
- 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
- சென்னையில் இருந்து 14,268 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை வருகிற 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்று, மீண்டும் திரும்பி வரும் வகையில், சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* சென்னையில் இருந்து 14,268 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
* தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர 10,529 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
* தீபாவளிக்கு மொத்தமாக 20,378 பேருந்துகள் இயக்கப்படும்
* 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
- இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
- தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1400 உயர்ந்தது
சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கம் விலை உயர்ந்த நிலையில் தற்போது மீண்தும் தங்கம் விலை உயர்ந்தது.
ஆபரணத்தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,400 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.520 உயர்ந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராம் ரூ.11,125க்கு விற்பனையாகிறது.
இன்று காலை ஒரு சவரன் ரூ.88,480க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 89,00க்கு விற்பனையாகிறது.
- கடைசி 2 சுற்று வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பாக, தபால் வாக்குகள் எண்ணப்பட்டிருக்க வேண்டும்.
- 100 வயதிற்கு மேற்பட்டோர் 14 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார்.
கடைசி 2 சுற்று வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பாக, தபால் வாக்குகள் எண்ணப்பட்டிருக்க வேண்டும். இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்கள் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
SIR-க்கு பிறகு பீகாரில் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.92 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 3.5 கோடி பேர் பெண் வாக்காளர்கள். 14 லட்சம் பேர் புது வாக்காளர்கள்.
தேர்தலை வெளிப்படையாகவும், அமைதியான அடிப்படையில் நடத்துவதை உறுதி செய்ய விரும்புகிறோம்.
100 வயதிற்கு மேற்பட்டோர் 14 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 90,712 வாக்கு மையங்கள் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.
எந்தவொரு வன்முறையையும் சகித்துக் கொள்ளக் கூடாது நிர்வாக அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளம் மற்றும் மற்ற பிளாட்பார்ம் மூலமாக போலி செய்திகள் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
நவம்பர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு (முதற்கட்ட தேர்தல்)
மனுதாக்கல் தொடக்கம்- அக்டோபர் 10
மனுதாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 17
வேட்புமனு பரிசீலனை அக்டோபர் 18
வேட்புமனு திரும்பப் பெறுதல் அக்டோபர் 20
நவம்பர் 11ஆம் தேதி தேர்தல் (2 ஆம் கட்ட தேர்தல்)
மனுதாக்கல் தொடக்கம்- அக்டோபர் 13
மனுதாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 20
வேட்புமனு பரிசீலனை அக்டோபர் 21
வேட்புமனு திரும்பப் பெறுதல் அக்டோபர் 23
வாக்கு எண்ணிக்கை
நவம்பர் 14
- 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞர்.
- நீதிபதி பெருந்தன்மையாக கடந்து சென்றாலும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.
இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
நீதிபதியை தாக்க முயன்றது நமது ஜனநாயகத்தில் உயர்ந்த நீதித்துறை மீதான தாக்குதல்.
நீதிபதியை தாக்க முயன்றது அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு இன்னும் நம் சமூகத்தில் நீடிக்கிறது என்பதை காட்டுகிறது.
தலைமை நீதிபதி கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மையுடன் பதிலளித்த விதம் நீதித்துறையின் வலிமையை காட்டுகிறது.
நீதிபதி பெருந்தன்மையாக கடந்து சென்றாலும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






