என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • டெல்லி மற்றும் பஞ்சாபில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மாதிரியை பீகாரிலும் பின்பற்ற முடியும்
    • நாங்கள் எந்தக் கட்சியுடனும் அல்லது கூட்டணியுடனும் கைகோர்க்க மாட்டோம்

    பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    முழுமையான பெரும்பான்மையைப் பெற மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 122 இடங்கள் தேவை. ஐக்கிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய ஆளும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

    இந்நிலையில் பீகார் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

    டெல்லி மற்றும் பஞ்சாபில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மாதிரியை பீகாரிலும் பின்பற்ற முடியும் என்று தான் நம்புவதாக ஆம் ஆத்மி பீகார் மாநில பொறுப்பாளர் அஜேஷ் யாதவ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

    அறிவிப்பின் ஒரு பகுதியாக, அஜேஷ் யாதவ் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் ராகேஷ் யாதவ் ஆகியோர் 11 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டனர்.

    "எங்கள் கூட்டணி மக்களுடன் உள்ளது. நாங்கள் எந்தக் கட்சியுடனும் அல்லது கூட்டணியுடனும் கைகோர்க்க மாட்டோம்" என்று அக்கட்சியின் மாநில இணைப் பொறுப்பாளர் அபினவ் ராய் தெரிவித்தார்.  

    • நிலவு சாதாரணமாகத் தெரியும் முழு நிலவைவிட சற்றே பெரியதாகவும், 30% வரை பிரகாசமாகவும் தெரியும்.
    • நிலவின் ஈர்ப்பு விசை அதிகரிப்பதால், கடலில் அலைகள் சற்றே அதிகமாக எழும்.

    இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் நிகழ்வு இன்றிரவில் தெரிகிறது. இந்தியாவில் பௌர்ணமி நாளான அக்டோபர் 6 இரவு தொடங்கி அக்டோபர் 7 அதிகாலை வரை சூப்பர் மூனைப் பார்க்க முடியும்.

    முழு நிலவு பூமியை அதன் நீள்வட்டப் பாதையில் மிக நெருங்கி வரும்போது இந்தச் சூப்பர் மூன் நிகழ்வு ஏற்படுகிறது.

    இதனால், நிலவு சாதாரணமாகத் தெரியும் முழு நிலவைவிட சற்றே பெரியதாகவும், 30% வரை பிரகாசமாகவும் தெரியும்.

    இந்த நிகழ்வால் நிலவின் ஈர்ப்பு விசை அதிகரிப்பதால், கடலில் அலைகள் சற்றே அதிகமாக எழும்.  2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் இரு முறை இந்த சூப்பர் மூன் பௌர்ணமி நாளில் வானில் தென்பட உள்ளது. 

    • படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
    • நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.

    இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.

    இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

    படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.

    அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14, 2026-இல் இப்படம் திரைக்கு வருகிறது.

     படம் வெளியாக இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், 100 days to go என்று பராசக்தி படக்குழு புது போஸ்டர் ஒன்றை படக்குழு இன்று (ஆகஸ்ட் 6) வெளியிட்டுள்ளது.

    • 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்டார்.
    • கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

    இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு பி.ஆர்.கவாய் கேட்டுக் கொண்டார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடி கவாய்-க்கு போன் செய்து இந்த தாக்குதல் குறித்து கேட்டறிந்து சமூக வலைத்தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    இந்நிலையில் தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் ராகேஷ் கிஷோரின் வழக்கறிஞர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுவதாக இந்தியா பார் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. 

    • நாட்டு வெடிகுண்டு வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தி, அவர்களின் உடைமைகளைப் பறித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
    • இத்தனைக் கோடிகள் கொட்டி கொள்முதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்தான் எதற்கு?

    நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று நாகை மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

    இந்நிலையில் இதுதொடர்பாக நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரத் தாக்குதல்; கைகட்டி வேடிக்கை பார்க்கும் இந்திய நாட்டிற்கு கடற்படை எதற்கு?

    நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை அருகே கடந்த 05.10.2025 அன்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை நம்பியார் நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், விமல், சுகுமார், திருமுருகன், முருகன், அருண் உள்ளிட்ட 10 மீனவச்சொந்தங்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தி, அவர்களின் உடைமைகளைப் பறித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    தாக்கி பல இலட்சம் மதிப்பிலான வலைகள், விசைப்படகு இயந்திரம், இருப்பிடக் கருவி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றதால் மீனவ மக்கள் செய்வதறியாது பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய ஒன்றிய – தமிழ்நாடு அரசுகளின் தொடர் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. இத்தனை காலமும் இலங்கை கடற்படையால் கொடுந்தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் மீது, தற்போது இலங்கை கடற்கொள்ளையர்களும் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருப்பது தமிழ் மீனவ மக்களுக்கு இன்னுமொரு பேரிடியாக அமைந்துள்ளது.

    இந்திய நாட்டின் கடற்படை என்னதான் செய்துகொண்டுள்ளது? அடுத்த நாட்டு கடற்படையும், கடற்கொள்ளையர்களும் சொந்த நாட்டு மீனவர்களைத் தாக்குவது இந்திய நாட்டிற்கு அவமானம் இல்லையா? அமெரிக்காவோ, சீனாவோ, ரஷ்யாவோ இப்படி சொந்த நாட்டு மீனவர்களைத் தாக்குவதை வேடிக்கை பார்க்குமா?

    கடற்கொள்ளையர்கள் என்றால் அவர்கள் எந்த நாட்டு மீனவர்கள்? இலங்கை கடற்கொள்ளையர்கள் என்றால், தமிழ்நாட்டு மீனவர்களை விரட்டி விரட்டி வேட்டையாடும் இலங்கை கடற்படைக்கு, தன் எல்லைக்குள் உலவும் கடற்கொள்ளையர்களைப் பிடிக்க திறனில்லையா? அல்லது கடற்கொள்ளையர்களாக வந்தவர்களே இலங்கை கடற்படையினர்தானா? இத்தனை குறுகிய கடற்பரப்பில் இலங்கை – இந்தியக் கடற்படைகளைக் கடந்து தமிழக மீனவர்களைத் தாக்கிவிட்டு இலங்கை கடற்கொள்ளையர்கள் எங்கே மாயமாய் மறைந்தார்கள்?

    இந்தியக் கடற்படையால் இலங்கை கடற்படையிடமிருந்துதான் தமிழ் மீனவர்களைக் காக்க முடியவில்லை? இலங்கை கடற்கொள்ளையர்களிடமிருந்து கூடவா காக்கும் திறன் இந்திய இராணுவத்திற்கு இல்லை? சொந்த நாட்டு மீனவர்களைக் காக்க முடியவில்லை என்றால் இந்த நாட்டிற்கு கடற்படை என்ற ஒன்று எதற்கு? இத்தனைக் கோடிகள் கொட்டி கொள்முதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்தான் எதற்கு?

    பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் எல்லை தாண்டி இந்திய நாட்டு குடிகள் மீது தாக்குதல் நடத்தியவுடன் பதறி துடித்த பெருமக்கள், இலங்கை கடற்கொள்ளையர்கள் எல்லை தாண்டி தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதற்கு எந்த பதற்றமும் கொள்ளாமல் அமைதி காப்பது ஏன்? தமிழர்கள் இந்த நாட்டின் குடிகள் இல்லையா? இந்திய அரசுக்கு எந்த நாடு தாக்கியது? தாக்கப்பட்ட மக்கள் யார் என்பதெல்லாம் பார்த்துதான் கோபமும் இரக்கமும் கூட வருமா? என்று அடுக்கடுக்காய் எழும் கேள்விகளுக்கு இந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடம் பதிலுண்டா?

    சொந்த நாட்டு மக்களைத் தாக்குவதிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தி காக்க முடியவில்லை என்றால் இலங்கையின் நட்பு இந்தியாவிற்கு எதற்கு? இந்திய நாட்டுக் குடிகளைத் தாக்கும் பாகிஸ்தானிடம் வரும் கோவமும், பகையும், இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு இலங்கையிடம் வர மறுப்பதேன்?

    வழக்கம்போல இன்னொரு கடிதம் எழுதுவதைத் தவிர, தமிழ் மீனவர்களைக் காக்க மாநில சுயாட்சி நாயகர் ஐயா ஸ்டாலின் அவர்களிடம் மாற்று திட்டம் ஏதாவது உண்டா? ஐந்துமுறை திமுக தமிழர் நிலத்தை ஆண்ட பிறகும் கச்சத்தீவு மீட்கப்படவும் இல்லை; தமிழ் மீனவர் சிக்கல் தீர்க்கப்படவும் இல்லை. இதைத்தான் திராவிட மாடல் அரசு தமிழ் மீனவர்களைக் காக்கும் முறையா?

    ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் தமிழ் மீனவர்களைக் காக்க இனியேனும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதோடு, பாதிக்கப்பட்ட 10 மீனவச்சொந்தங்களுக்கும் உரிய மருத்துவம், துயர்துடைப்பு உதவிகளைச் செய்துதர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். 

    • காரில் இருந்த குமார் மனோஜ் (34), சிங் சுர்ஜித் (33), சிங் ஹர்விந்தர் (31), மற்றும் சிங் ஜஸ்கரன் (20) ஆகிய நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர்.
    • ரோமில் உள்ள இந்தியத் தூதரகம் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

    இத்தாலியின் சாலை விபத்தில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த சனிக்கிழமை நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மடேரா நகரின் ஸ்கான்சானோ யோனிகோ பகுதியில் ரெனால்ட் ஸ்கெனிக் வகை கார் ஒன்று, சரக்கு லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் காரில் இருந்த குமார் மனோஜ் (34), சிங் சுர்ஜித் (33), சிங் ஹர்விந்தர் (31), மற்றும் சிங் ஜஸ்கரன் (20) ஆகிய நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர்.

    விபத்துக்குள்ளான காரில் மேலும் ஆறு பேர் இருந்துள்ளனர். அவர்களில் ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.  உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரோமில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து இத்தாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மனைவிக்கு 120 கிராம் தங்க நகை, ரூ.18 லட்சம் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார்.
    • தான் சிங்கிளாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் இந்த இளைஞர் பதிவிட்டுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை இளைஞரும் அவரது தாயும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

    இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மனைவியை விவாகரத்து செய்ததோடு, மனைவி கொண்டு வந்த 120 கிராம் தங்க நகை, ரூ.18 லட்சம் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார்.

    புதிய வாழ்க்கையை தொடங்கும் விதமாக அவரின் தாய், மகனுக்கு பாலபிஷேகம் செய்து, புது துணி வாங்கிக்கொடுத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

    மேலும், விவாகரத்துக்குப்பின் தான் சிங்கிளாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் இந்த இளைஞர் பதிவிட்டுள்ளார்.

    இவரது இந்த செயலுக்கு கமென்ட்ஸில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    • திமுக-வின் மு.க.ஸ்டாலின் மாடல் Failure அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களிடத்தில் அம்பலமாகிவிட்டது.
    • மண்டல காவல் துறை ஐ.ஜி. தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை துவக்கம்.

    அதிமுக பொதுச் செயலாளர் எட்பபாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றதாக தமிழக அரசின் மருத்துவத் துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் பாதிக்கப்பட்டவர்கள், நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் ஏழை விசைத்தறி தொழிலாளர்கள். சிறுநீரக மாற்று மோசடி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, புரோக்கர்கள் மூலம் நடைபெற்ற கிட்னி முறைகேடு கொடூரமான செயல் என கண்டித்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்தும், தமிழக அரசு இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.

    மாறாக, #KarurTragedy தொடர்பான நீதிமன்ற உத்தரவு அரசுக்கு கிடைக்கப்பெறும் முன்பே, சில மணி நேரங்களிலேயே, மண்டல காவல் துறை ஐ.ஜி. தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டுவிட்டது.

    ஆனால் கிட்னி முறைகேடு வழக்கில் இதுவரை விசாரணை தொடங்காதது ஏன்?

    இரண்டு வழக்குகளிலும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகள் ஒன்றுபோல் இருந்தபோதிலும், தங்களுக்கு தொடர்புடையவர்கள் வழக்கு என்றால், விசாரணையை தாமதப்படுத்துவதும், கிடப்பில் போடுவதும், வேண்டாதவர்கள் மீதான விசாரணை என்றால் துரித வேகத்தில் செயல்படும் விடியா திமுக-வின்

    மு.க.ஸ்டாலின் மாடல் Failure அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களிடத்தில் அம்பலமாகிவிட்டது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண் 169-ஐ கைகழுவியது ஏன்?
    • அடுத்த தலைமுறையின் நலனில் அலட்சியம் காட்டும் திமுக அரசு.

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?

    திமுக ஆட்சி அமைத்தால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி காலையில் பால் வழங்கப்படும் என்று தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண் 169-ஐ கைகழுவியது ஏன்?

    இது போதாதென்று, மாணவர்களின் பசியைப் போக்கி ஊட்டச்சத்தை மேம்படுத்த வேண்டிய காலையுணவில் புழுக்களையும் பல்லிகளையும் நெளியவிட்டு, மதிய உணவில் வழங்க வேண்டிய முட்டையை வெளிச்சந்தையில் விற்று, ஊசிப்போன உணவை வழங்குவது தான் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலமா?

    மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று வெற்று விளம்பர விழாக்களை நடத்துவதற்கு பதில், அதே பணத்தைக் கொண்டு மாணவர்களுக்குப் பால் வழங்கி ஊட்டச்சத்தை மேம்படுத்தியிருக்கலாமே!

    கொடுத்த வாக்குறுதியைக் கிடப்பில் போட்டு, ஊழல் புரிந்து, தமிழக மாணவர்களின் ஊட்டச்சத்தோடு விளையாடிவிட்டு, "அப்பா" என்ற பட்டத்திற்கு மட்டும் ஆசைப்படுவது என்றும் நியாயமில்லை! அடுத்த தலைமுறையின் நலனில் அலட்சியம் காட்டும் திமுக அரசை ஆட்சிக்கட்டிலில் இருந்து தமிழக மக்கள் அகற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞர்.
    • கடுமையான சூழ்நிலையை சந்தித்தும் நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டுகிறேன்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

    இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்ற செயல் முற்றிலும் கண்டிக்கத்தக்கது" என்று பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி தனது கண்டனங்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடி கூறுகையில், " உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்றது ஒவ்வொரு இந்தியரையும் கோபமடைய செய்துள்ளது.

    கடுமையான சூழ்நிலையை சந்தித்தும் நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டுகிறேன். கவாய் அமைதி காத்தது நீதியின் மதிப்புகள், நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான எடுத்துக்காட்டு" என்றார்.

    • பூமியில் உள்ள அரிய கனிம வளங்களை அமெரிக்கா விரும்புகிறது.
    • ஏற்கனவே, பாகிஸ்தான் பிரதமர் மாதிரிகளை காண்பித்த நிலையில், தற்போது அவைகள் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளது.

    வர்த்தக வரி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நட்பு பாராட்டி வருகிறது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஆகியோரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்று விருந்து அளித்தார். பாகிஸ்தான் தற்போது கடுமையான நிதிப்பற்றாக்குறையால் தத்தளித்து வருகிறது.

    இதை டிரம்ப் சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார். பாகிஸ்தானில் உள்ள அரிய கனிம வளங்களை அமெரிக்கா வெட்டி எடுத்துக் கொள்ள விரும்பினார். இது தொடர்பாக பாகிஸதான் பிரதமரிடம் பேசினார். அவரும் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.

    கடந்த முறை அமெரிக்கா சென்றபோது, பாகிஸ்தானில் உள்ள அரிய வகை கனிமங்களின் மாதிரிகளை டிரம்பிடம் காண்பித்துள்ளார் ஷெபாஷ் ஷெரீப்.

    இதனைத் தொடர்ந்து 500 மில்லியன் டாலருக்கு பாகிஸ்தானுக்கும், அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வெட்டி எடுக்கப்பட்ட கனிம வளங்கள் அடங்கிய முதல் கப்பல் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவுக்கு கனிம வளங்களை விற்பனை செய்வதற்கு இம்ரான் கான் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் ரகசிய ஒப்பந்தம் எனக் குற்றம்சாட்டியுள்ளது.

    கால்நடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

    நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியது.

    தெலுங்கானா மாநிலம் கத்வால் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விஜய் தேவரகொண்டா கார் சென்றபோது கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

    கார் சேதமடைந்த நிலையில், விஜய் தேவரகொண்டா காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

    புட்டபர்த்திக்கு சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பியபோது விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×