என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    முன்னேற்றம் கூடும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. தேக நலனில் அக்கறை செலுத்தவும். சில நேரங்களில் நீங்கள் விட்டுக்கொடுத்து போவது நல்லது.

    ரிஷபம்

    யோகமான நாள். பிரியமானவர்களோடு ஏற்பட்ட பிரச்சனை தீரும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. குடும்ப அமைதிக்காக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள்.

    மிதுனம்

    நெருக்கடி நிலை அகலும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    கடகம்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். சேமிப்பு கரையாதிருக்க சிக்கனத்தை கடைப்பிடிப்பீர்கள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    சிம்மம்

    கவலைகள் தீரக் கடவுள் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டிய நாள். கடன் சுமை அதிகரிக்கும். உறவினர் வழியில் மனக்கசப்பு உருவாகும். வரவைவிடச் செலவு கூடும்.

    கன்னி

    தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். வியாபார விருத்திக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் நீடிப்பதா வேண்டாமா என்ற சிந்தனை அதிகரிக்கும்.

    துலாம்

    எதிரிகளின் பலம் கூடும் நாள். எல்லோரையும் அனுசரித்துச்செல்வது நல்லது. நேற்று எடுத்த முடிவை இன்று மாற்றிக்கொள்வீர்கள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை.

    விருச்சிகம்

    வாயிலைத்தேடி வருமானம் வந்து சேரும் நாள். வழிபாடுகளில் மனதை செலுத்துவீர்கள். நேற்றைய கனவு இன்று பலிதமாகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

    தனுசு

    செல்வாக்கு உயரும் நாள். வரவு வந்தாலும் செலவு கூடுதலாகும். முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களில் தாமதம் ஏற்படும்.

    மகரம்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பணத்திற்காக செய்திருந்த ஏற்பாடுகள் பலன் தரும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் உத்தியோக முயற்சி கைகூடும்.

    கும்பம்

    நிம்மதி குறையும் நாள். வரவைவிடச் செலவு கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தொல்லை உண்டு. வீடு கட்ட அல்லது வாங்க செய்த ஏற்பாடு தாமதப்படும்.

    மீனம்

    எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் பொருளாதார வளர்ச்சி கூடும். பெற்றோர்களின் பாசமழையில் நனைவீர்கள்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் திருச்சி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • கணேஷ் நகர், திருமகள் நகர், மேத்தா நகர், ராஜேஸ்வரி நகர், 100 அடி சாலை.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (08.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    தாம்பரம்: சேலையூர் கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, பாரதி பார்க் தெரு, கர்ணம் தெரு, ராஜா ஐயர் தெரு, மாதா கோவில் தெரு, நெல்லுரம்மன் கோவில் தெரு, பாளையத்தான் தெரு, புதிய பாலாஜி நகர் மற்றும் விரிவாக்கம், லோரா தெரு, அவ்வை நகர், எம்.எஸ்.கே.நகர், கண்ணன் நகர், ஐ.ஓ.பி. காலனி, முத்தாலம்மன் கோவில் தெரு, குமரன் தெரு, இளங்கோவன் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு.

    சிட்லபாக்கம்: சிட்லபாக்கம் மெயின் ரோடு, கணேஷ் நகர், திருமகள் நகர், மேத்தா நகர், ராஜேஸ்வரி நகர், 100 அடி சாலை, சுந்தரம் காலனி, செல்லி நகர், எழில் நகர், அன்னை நகர், தனலட்சுமி நகர், விஜயலட்சுமி தெரு மற்றும் சந்தான லட்சுமி தெரு.

    ஆவடி: சிவசங்கராபுரம், ஜாக் நகர், தென்றல் நகர், பத்மாவதி நகர், மூர்த்தி நகர், ரவீந்தரா நகர், ஸ்ரீ நகர் காலனி, முல்லை குறிஞ்சி தெரு, சோழன் நகர், சிடிஎச் சாலை, கவரபாளையம், சிந்து நகர், தனலட்சுமி நகர், எம்ஆர்எப் நகர், நாசர் மெயின் ரோடு, மோசஸ் தெரு.

    • ஆயுதங்களும் சாஸ்திரங்களும் மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும்.
    • இப்போது கியர்களை மாற்ற வேண்டிய நேரம் இது.

    டெல்லியின் பிதாம்பூரில் ஸ்ரீ பிராமண சபா ஏற்பாடு செய்த அகில இந்திய பிராமண மகாசபா நிகழ்வில் நேற்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.

    நிகழ்ச்சியில் பேசிய ரேகா குப்தா, "பிராமணர்கள்தான் நமது சமூகத்தில் அறிவு தீபத்தை ஏற்றுபவர்கள். பிராமணர்கள் சாஸ்திரங்களை மட்டுமல்ல, அஸ்திரங்களையும் வணங்கினர்.

    ஆயுதங்களும் சாஸ்திரங்களும் மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும். மதத்தைப் பரப்பி, நல்ல பண்புகளை வளர்ப்பதன் மூலம், பிராமண சமூகம் எப்போதும் சமூகத்தின் நன்மைக்காகவே பாடுபட்டுள்ளது. எனவே எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பிராமண சமூகத்தின் நலனுக்காக பாடுபட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மேலும்,"கடந்த 27 ஆண்டுகளாக டெல்லியின் வளர்ச்சி மெதுவாக உள்ளது. இப்போது கியர்களை மாற்ற வேண்டிய நேரம் இது. டெல்லிக்கு இன்னும் தீவிரமான வளர்ச்சி தேவை.

    டெல்லியின் வளர்ச்சிக்கு நாம் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம். ஒன்றுபட்ட சமூகத்தால் மட்டுமே உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியும்" என்று ரேகா குப்தா கூறினார். 

    • ஆதர்ஷ் நகரில் ஒரு விடுதியில் தங்கி கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.
    • வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி, செப்டம்பர் மாதம் முழுவதும் பலமுறை பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    அரியானாவின் ஜிந்த் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் டெல்லியில் உள்ள ஆதர்ஷ் நகரில் ஒரு விடுதியில் தங்கி கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.

    அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. செப்டம்பர் 9 ஆம் தேதி, தனது இரண்டு நண்பர்களுடன் விருந்து வைப்பதாக கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணை ஹோட்டல் அறைக்கு அந்த இளைஞர் அழைத்தார்.

    அங்கு, குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்து சுயநினைவை இழக்க செய்து அந்த இளைஞர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். மற்ற இருவரும் அந்த கொடூரத்தை பதிவு செய்தனர். அதன் பின்னர் அவர்களும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    செப்டம்பர் 9 ஆம் தேதி நடந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த இளைஞர்கள் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி, செப்டம்பர் மாதம் முழுவதும் பலமுறை பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    ஒரு மாதமாக நரகத்தைத் தாங்கிய பிறகு, இளம் பெண் இறுதியாக தைரியத்தை வரவழைத்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் கூறினார்.கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி பெண் சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை மூன்று இளைஞர்கள் மீதும் மீதும் போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவர்களைக் கைது செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.   

    • திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருந்தது.
    • ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

     திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Lik) திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்ட்டது.

    விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்படத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், 'டூட்' படம் அதே நாளில் வெளியாவதால் Lik படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்தது. அதனை தொடர்ந்து, Lik படம் டிசம்பர் மாதம் 18-ந்தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

    எங்கள் டீசருக்கு கொடுத்த மாபெரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதே ஆர்வத்துடன் படம் வெளியாகும் வரை காத்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். வரும் வாரங்களில் படம் குறித்த பல புதிய அப்டேட்கள், பாடல்கள் உங்களை தேடி வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




    • மத்திய அரசு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
    • சுலோச்சனா வர்மாவுக்கு அவரது மகன் இறந்த தேதியிலிருந்து சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்

    பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம், புற்றுநோயால் இறந்த ஒரு ராணுவ அதிகாரியின் தாய்க்குச் சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்கிய உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

    அந்த ராணுவ அதிகாரி அரிய வகை புற்றுநோயால் ஜூன் 24, 2009 அன்று உயிரிழந்த நிலையில் திகாரியின் தாயார் சுலோச்சனா வர்மாவுக்குச் சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று சண்டிகர் ஆயுதப்படை தீர்ப்பாயம் 2019-ல் உத்தரவிட்டிருந்தது.

    இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு அண்மையில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹர்சிம்ரன் சிங் சேத்தி மற்றும் விகாஸ் சூரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், புகைபிடித்தல் போன்ற காரணங்களால் ஏற்படும் புற்றுநோயைத் தவிர, ராணுவ வீரர்களிடையே ஏற்படும் அனைத்து வகையான புற்றுநோய்களும் ராணுவ சேவையுடன் தொடர்புடையதாகவே கருதப்படும். பணியில் சேரும்போது ஆரோக்கியமாக இருந்த அதிகாரி, ஆறு ஆண்டுகள் ராணுவச் சேவையில் இருந்ததால் ஏற்பட்ட நீண்டகால மன அழுத்தமே புற்றுநோய்க்குக் காரணம்" என்று தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், சுலோச்சனா வர்மாவுக்கு அவரது மகன் இறந்த தேதியிலிருந்து சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பளித்தனர். 

    • என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த அவரது தந்தை, இறுதியாகச் சிறுமி நடந்தவற்றை சொன்னபோது அதிர்ச்சியில் உரைந்தார்.
    • வெளியே சொன்னால் தேர்வில் தோல்வியடையச் செய்வேன், உன் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பேன்

    உத்தரப் பிரதேசத்தில் 8 ஆம் வகுப்பு மாணவியை பள்ளி மேலாளர் தொடர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    தியோரியா மாவட்டத்தில் சதார் கோட்வாலி பகுதியை சேர்ந்த அந்த சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியொன்றில் பயின்று வந்தார்.

    அண்மை காலமாக சிறுமி பள்ளியிலும் வீட்டிலும் விநோதமாக நடந்துகொண்டிருக்கிறார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த அவரது தந்தை, இறுதியாகச் சிறுமி நடந்தவற்றை சொன்னபோது அதிர்ச்சியில் உரைந்தார்.

    பள்ளி மேலாளர் தேவேந்திர குஷ்வாஹா தன்னை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து, கதவைப் பூட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், வெளியே சொன்னால் தேர்வில் தோல்வியடையச் செய்வேன், உன் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பேன் என்று மிரட்டியதாகவும் சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். மேலும் பல மாதங்களாக இந்த துன்புறுத்தல் தொடர்ந்தது என்று சிறுமி நடுக்கத்துடன் கூறியுள்ளார். 

    சிறுமியின் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறை பள்ளி மேலாளர் தேவேந்திர குஷ்வாஹாவை கைது செய்து விசாரித்து வருகிறது. அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    • புட்டபர்த்திக்கு சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பியபோது நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.
    • செய்திகள் உங்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்க விடாதீர்கள்.

    புட்டபர்த்திக்கு சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பியபோது நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம் கத்வால் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

    கார் சேதமடைந்த நிலையில், விஜய் தேவரகொண்டா காயங்கள் இன்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் தான் நலமாக உள்ளதாக விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள பதிவில், எல்லாமே நல்லபடியாக இருக்கிறது.

    கார் சேதமடைந்தது, ஆனால் நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். ஒரு ஸ்ட்ரென்த் உடற்பயிற்சியும் செய்துவிட்டு இப்பதான் வீட்டிற்குத் திரும்பி வந்தேன்.

    என் தலை வலிக்கிறது, ஆனால் பிரியாணி மற்றும் தூக்கத்தால் சரி செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. அதனால் உங்களுக்கெல்லாம் என் பெரிய அணைப்புகளையும் அன்பையும் கொடுக்கிறேன். செய்திகள் உங்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்க விடாதீர்கள்." என்று தெரிவித்தார்.  

    விஜய் தேவரகொண்டாவுக்கும் நடிகை ராஷ்மிக்கா மந்தனாவுக்கும் அண்மையில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் நிச்சயதாரதம் நடந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

    • 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்டார்.
    • அரசியலமைப்பைப் பாதுகாக்க சமூகத் தடைகளைத் தகர்த்தெறிந்த ஒருவரை மிரட்டி அவமானப்படுத்தும் முயற்சியை இது பிரதிபலிக்கிறது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராஜேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

    இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு பி.ஆர்.கவாய் கேட்டுக் கொண்டார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உச்ச நீதிமன்றத்தில் இந்திய தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டிக்க வார்த்தைகள் போதாது.

    இது அவர் மீது மட்டுமல்ல, நமது அரசியலமைப்பின் மீதான தாக்குதலாகும். தலைமை நீதிபதி கவாய் மிகவும் கருணையுள்ளவர். முழு தேசமும் அவருடன் ஒற்றுமையாக நிற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய தலைமை நீதிபதி மீதான தாக்குதல் நமது நீதித்துறையின் கண்ணியம் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வு மீதான தாக்குதல் ஆகும். இத்தகைய வெறுப்புக்கு நம் நாட்டில் இடமில்லை, அது கண்டிக்கப்பட வேண்டும்"என்று தெரிவித்தார்.

    காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள கண்டன பதவில், ""உச்ச நீதிமன்றத்தில் இன்று மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெட்கக்கேடானது மற்றும் இழிவானது. இது நமது நீதித்துறையின் கண்ணியம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மீதான தாக்குதல்.

    தனது திறமை, நேர்மை மற்றும் விடாமுயற்சி மூலம் நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறை பதவிக்கு உயர்ந்துள்ள ஒரு தலைமை நீதிபதி, இந்த முறையில் குறிவைக்கப்படும்போது, அது மிகவும் கவலையளிக்கும் செய்தியை அனுப்புகிறது.

    அரசியலமைப்பைப் பாதுகாக்க சமூகத் தடைகளைத் தகர்த்தெறிந்த ஒருவரை மிரட்டி அவமானப்படுத்தும் முயற்சியை இது பிரதிபலிக்கிறது" என்று கூறினார்.  

    • டெல்லி மற்றும் பஞ்சாபில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மாதிரியை பீகாரிலும் பின்பற்ற முடியும்
    • நாங்கள் எந்தக் கட்சியுடனும் அல்லது கூட்டணியுடனும் கைகோர்க்க மாட்டோம்

    பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    முழுமையான பெரும்பான்மையைப் பெற மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 122 இடங்கள் தேவை. ஐக்கிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய ஆளும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

    இந்நிலையில் பீகார் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

    டெல்லி மற்றும் பஞ்சாபில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மாதிரியை பீகாரிலும் பின்பற்ற முடியும் என்று தான் நம்புவதாக ஆம் ஆத்மி பீகார் மாநில பொறுப்பாளர் அஜேஷ் யாதவ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

    அறிவிப்பின் ஒரு பகுதியாக, அஜேஷ் யாதவ் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் ராகேஷ் யாதவ் ஆகியோர் 11 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டனர்.

    "எங்கள் கூட்டணி மக்களுடன் உள்ளது. நாங்கள் எந்தக் கட்சியுடனும் அல்லது கூட்டணியுடனும் கைகோர்க்க மாட்டோம்" என்று அக்கட்சியின் மாநில இணைப் பொறுப்பாளர் அபினவ் ராய் தெரிவித்தார்.  

    • நிலவு சாதாரணமாகத் தெரியும் முழு நிலவைவிட சற்றே பெரியதாகவும், 30% வரை பிரகாசமாகவும் தெரியும்.
    • நிலவின் ஈர்ப்பு விசை அதிகரிப்பதால், கடலில் அலைகள் சற்றே அதிகமாக எழும்.

    இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் நிகழ்வு இன்றிரவில் தெரிகிறது. இந்தியாவில் பௌர்ணமி நாளான அக்டோபர் 6 இரவு தொடங்கி அக்டோபர் 7 அதிகாலை வரை சூப்பர் மூனைப் பார்க்க முடியும்.

    முழு நிலவு பூமியை அதன் நீள்வட்டப் பாதையில் மிக நெருங்கி வரும்போது இந்தச் சூப்பர் மூன் நிகழ்வு ஏற்படுகிறது.

    இதனால், நிலவு சாதாரணமாகத் தெரியும் முழு நிலவைவிட சற்றே பெரியதாகவும், 30% வரை பிரகாசமாகவும் தெரியும்.

    இந்த நிகழ்வால் நிலவின் ஈர்ப்பு விசை அதிகரிப்பதால், கடலில் அலைகள் சற்றே அதிகமாக எழும்.  2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் இரு முறை இந்த சூப்பர் மூன் பௌர்ணமி நாளில் வானில் தென்பட உள்ளது. 

    ×