ஆண்டின் முதல் Super Moon... இரவு வானில் ஒளிரும் முழு நிலவு!

நிலவு சாதாரணமாகத் தெரியும் முழு நிலவைவிட சற்றே பெரியதாகவும், 30% வரை பிரகாசமாகவும் தெரியும்.நிலவின் ஈர்ப்பு விசை அதிகரிப்பதால், கடலில் அலைகள் சற்றே அதிகமாக எழும்.
ஆண்டின் முதல் Super Moon... இரவு வானில் ஒளிரும் முழு நிலவு!
Published on

இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் நிகழ்வு இன்றிரவில் தெரிகிறது. இந்தியாவில் பௌர்ணமி நாளான அக்டோபர் 6 இரவு தொடங்கி அக்டோபர் 7 அதிகாலை வரை சூப்பர் மூனைப் பார்க்க முடியும்.

முழு நிலவு பூமியை அதன் நீள்வட்டப் பாதையில் மிக நெருங்கி வரும்போது இந்தச் சூப்பர் மூன் நிகழ்வு ஏற்படுகிறது.

இதனால், நிலவு சாதாரணமாகத் தெரியும் முழு நிலவைவிட சற்றே பெரியதாகவும், 30% வரை பிரகாசமாகவும் தெரியும்.

இந்த நிகழ்வால் நிலவின் ஈர்ப்பு விசை அதிகரிப்பதால், கடலில் அலைகள் சற்றே அதிகமாக எழும்.  2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் இரு முறை இந்த சூப்பர் மூன் பௌர்ணமி நாளில் வானில் தென்பட உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com