என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "divorced"

    • மனைவிக்கு 120 கிராம் தங்க நகை, ரூ.18 லட்சம் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார்.
    • தான் சிங்கிளாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் இந்த இளைஞர் பதிவிட்டுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை இளைஞரும் அவரது தாயும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

    இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மனைவியை விவாகரத்து செய்ததோடு, மனைவி கொண்டு வந்த 120 கிராம் தங்க நகை, ரூ.18 லட்சம் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார்.

    புதிய வாழ்க்கையை தொடங்கும் விதமாக அவரின் தாய், மகனுக்கு பாலபிஷேகம் செய்து, புது துணி வாங்கிக்கொடுத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

    மேலும், விவாகரத்துக்குப்பின் தான் சிங்கிளாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் இந்த இளைஞர் பதிவிட்டுள்ளார்.

    இவரது இந்த செயலுக்கு கமென்ட்ஸில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    ஈரோட்டில் கடந்த 2 வருடமாக கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு, சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி மீனாம்மாள்(வயது38). தர்மராஜ் டெய்லராக உள்ளார்.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2 வருடமாக மீனாம்மாள் ஈரோடு, அல்-அமீன் நகர், தோட்டம்பட்டியில் உள்ள தங்கை வீட்டில் வசித்து வந்தார்.

    கணவன்-மனைவி பிரச்சனை குறித்து இருவீட்டாரும் சமரசம் செய்ய முயன்றனர். எனினும் சுமூக முடிவு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மீனாம்மாள் சில நாட்களாகவே மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மீனாம்மாள் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வி‌ஷ மாத்திரையை தின்று விட்டார். இதில் அவர் மயங்கினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மீனாம்மாளை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் மீனாம்மான் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக சிந்து மாகாணத்தில் இந்து மதத்தை சேர்ந்த விவாகரத்தான, விதவைப் பெண்கள் மறுமணத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. #divorcedHinduwomen
    இஸ்லாமாபாத்:

    இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் விவாகரத்து பெறவும், விவாகரத்தான பெண்கள் மற்றும் கணவரை இழந்த விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கும் வகையில் இந்து திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் நந்த்குமார் என்பவர் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாண சட்டசபையில்  மசோதா ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

    திருமண பருவத்தை எட்டாத வயதுள்ள சிறுமிகளை திருமணம் செய்யவும் தடை விதிக்க கோரிய இந்த சட்டதிருத்தம் சிந்து மாகாண சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கவர்னரின் கையொப்பத்துக்கு பிறகு கடந்த வாரம் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.

    இந்த புதிய சட்டத்தின்படி திருமணமான  இந்து மதத்தை சேர்ந்த ஆண், பெண் இருவரும் இனி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகலாம். விவாகரத்தான பெண் மற்றும் அவரது குழந்தைகளுக்கு பொருளாதார பாதுகாப்பு வழங்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது.

    பாகிஸ்தானில் இதற்கு முன்னதாக  விவாகரத்து கோரி இந்து பெண்கள் நீதிமன்றங்களை நாட முடியாத நிலை நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. #HinduwomeninSindh #divorcedHinduwomen #Hinduwomenallowedtoremarry
    ×