என் மலர்
நீங்கள் தேடியது "பெண் விஷம் குடித்து தற்கொலை"
ஈரோடு:
ஈரோடு, சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி மீனாம்மாள்(வயது38). தர்மராஜ் டெய்லராக உள்ளார்.
இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2 வருடமாக மீனாம்மாள் ஈரோடு, அல்-அமீன் நகர், தோட்டம்பட்டியில் உள்ள தங்கை வீட்டில் வசித்து வந்தார்.
கணவன்-மனைவி பிரச்சனை குறித்து இருவீட்டாரும் சமரசம் செய்ய முயன்றனர். எனினும் சுமூக முடிவு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மீனாம்மாள் சில நாட்களாகவே மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மீனாம்மாள் தற்கொலை செய்ய முடிவு எடுத்து விஷ மாத்திரையை தின்று விட்டார். இதில் அவர் மயங்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மீனாம்மாளை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் மீனாம்மான் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






