என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இவ்வளவு பெரிய அளவிலான சர்வதேச நிகழ்வுகளில் சிறிய குறைபாடுகள் ஏற்படுவது சகஜம்தான்
    • சீன ரோபோ நாயை இந்திய தயாரிப்பாக ஏமாற்றி காட்சிப்படுத்தியதை ராகுல் காந்தி கண்டித்தார்.

    டெல்லியில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய ஏஐ மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது. இதில் நேற்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரான்ஸ் அதிபர் மேக்ரோனும் இதில் கலந்து கொண்டார்.

    மேலும் இன்றைய நிகழ்வில் ஸ்பெயின் பிரதமர், இலங்கை பிரதமர் உள்ளிட்ட பலநாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில் மாநாட்டைப் பாராட்டிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர் "முதல் சில நாட்கள் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டிற்காக உலகத் தலைவர்கள் ஒன்றுகூடியிருப்பது பாராட்டுக்குரியது" என்று தெரிவித்தார்.

    மாநாட்டின் ஏற்பாடுகளில் நிலவிய சில குழப்பங்கள் குறித்துக் கேட்டபோது, "இவ்வளவு பெரிய அளவிலான சர்வதேச நிகழ்வுகளில் சிறிய குறைபாடுகள் ஏற்படுவது சகஜம்தான்" என்று தெரிவித்தார்.

    சசி தரூரின் கருத்துக்கு மாறாக, ராகுல் காந்தி இந்த மாநாட்டை ஒழுங்கற்ற முறையில் நடத்தப்படும் விளம்பர கூத்து என்று சாடியுள்ளார்.

    மாநாட்டில் கால்கோடியாஸ் பல்கலைக்கழகம், சீன ரோபோ நாயை இந்திய தயாரிப்பாக ஏமாற்றி காட்சிப்படுத்தியதை கண்டித்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    மேலும் மாநாட்டில் நடக்கும் கண்காட்சியில் முதல் சில நாட்களில் லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் பல திருடுபோனது மற்றும் பங்கேற்றவர்களுக்கு தண்ணீர், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்காதது உள்ளிட்ட சில குளறுபடிகள் ஏற்பட்டன.

    காங்கிரஸ் தலைவர் கார்கே, மாநாட்டின் நிர்வாகச் சீர்கேடுகள் நாட்டுக்குப் பெரும் அவமானத்தைத் தேடித்தந்துள்ளதாக கூறினார்.

    பார்வையாளர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி கூட முறையாக இல்லை என்றும், மோடியின் விளம்பர ஆசையால் மாநாடு சீர்குலைந்துள்ளதாக விமர்சித்தார். 

    இதற்கிடையே இளைஞர் காங்கிரசார் இன்று மாநாடு திடலில் புகுந்து சட்டையை கழற்றி அமெரிக்க- இந்திய வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்த்தனர். 

    • பாபர் ஒரு 'படையெடுப்பாளர்'
    • ஒரு மசூதியைக் கட்டப்போவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்ததை எதிர்த்து இந்த மனு தாக்கல்

    முகலாயப் பேரரசரான பாபரின் பெயரிலோ அல்லது பாபர் மசூதி என்ற பெயரிலோ மசூதிகள் கட்டுவதற்கு அல்லது மசூதிகளுக்கு பெயரிடுவதற்கு நாடு முழுவதும் தடைவிதிக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    பாபர் ஒரு 'படையெடுப்பாளர்' என்றும், அவர் இந்துக்களை அடிமைகள் என்றும் குறிப்பிட்டதாகவும், அவர் பெயரில் மசூதிகள் கட்டுவது இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி போன்ற ஒரு மசூதியைக் கட்டப்போவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்ததை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது. விசாரணைக்கு நீதிபதிகள் மறுத்ததைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இதனால் இந்த மனு 'திரும்பப் பெறப்பட்டதாகக் கருதி தள்ளுபடி' செய்யப்பட்டது.

    • தாய்லாந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
    • பல அமெரிக்க, ஐரோப்பிய பிரபலங்கள் இந்த நிறுவனத்தின் தயரிப்புகளை பயனப்டுத்தி வருகின்றனர்.

    பிரிட்டனின் பிரபல ஆன்லைன் பேஷன் மற்றும் அழகுசாதன பொருட்கள் நிறுவனமான ASOS உடைய இணை நிறுவனர் குவென்டின் கிரிஃபித்ஸ்.

     58 வயதான இவர் தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று குடியிருப்பு கட்டிடத்தில் அவர் வசித்து வந்த 17-வது மாடியில் இருந்து விழுந்து மர்மமான உயிரிழநதார்.

    அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இதில் சதி இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரியவரும்.

    2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ASOS நிறுவனம், இன்று முன்னணி பேஷன் நிறுவனமாக வளர்ந்துள்ளது. பல அமெரிக்க, ஐரோப்பிய பிரபலங்கள் இந்த நிறுவனத்தின் தயரிப்புகளை பயனப்டுத்தி வருகின்றனர்.

    பிரிட்டனை சேர்ந்த குவென்டின், தனது முதல் மனைவியிடம் விவாகரத்து பெற்ற பிறகு, 2007ல் தாய்லாந்திற்கு குடிபெயர்ந்தார்.

    அங்கு ஒரு தாய்லாந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, பின்னர் அவரிடமிருந்தும் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.  

    • ராதிகா 75 வயது மூதாட்டியாக 'பவுனுத்தாயி' என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • லூட்டஸ் புரொடக்ஷன்ஸ்" (Lootus Productions), ஓடுங்க அது நம்மள நோக்கிதான் வருகின்றது போன்ற கிண்டலான வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

    அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஸன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகை ராதிகா நடித்துள்ளப் படம் தாய் கிழவி.

    இப்படத்தில் ராதிகா 75 வயது மூதாட்டியாக 'பவுனுத்தாயி' என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராதிகாவுடன் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் இப்படத்தில் 'தாய் கிழவி வாரா' என்ற பாடலைப் பாடியுள்ளார்.

    இப்படம் பிப்.27ஆம் தேதி வெளியாக உள்ளது. கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இப்படத்தைப் பார்த்து ராதிகாவின் நடிப்பைப் பாராட்டியுள்ளனர். இப்படத்தில் ராதிகாவின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருக்கும். அப்போஸ்டரை ரீகிரியேட் செய்து தமிழ்நாடு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளன. இது தற்போது இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது.  

    தேர்தல் நேரங்களில் கட்சிகள், எதிர்க்கட்சிகளை விமர்சிக்க சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தாய் கிழவி ராதிகாபோல சித்தரித்து, இயக்கம் ஆர்.எஸ்.எஸ். எனக் குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. லூட்டஸ் புரொடக்ஷன்ஸ்" (Lootus Productions), ஓடுங்க அது நம்மள நோக்கிதான் வருகின்றது போன்ற கிண்டலான வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

    இதற்குப் பதிலடியாக, பாஜக தரப்பில் சோனியா காந்தியை சித்தரித்து மற்றொரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் அவர் கையில் துடைப்பம் வைத்திருப்பது போன்றும், 2ஜி ஊழல், போஃபர்ஸ் போன்ற விவகாரங்களைக் குறிப்பிட்டுக் கிண்டல் செய்யும் வாசகங்களும் இடம்பெற்றன. பாஜக தலைவர் எஸ்.ஜி. சூர்யா, சோனியா காந்தியை "அசல் தாய் கிழவி" (Original Thai Kelavi) என்று விமர்சித்துப் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த போஸ்டர்கள் இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகின்றன. இதில் யார் OG என பலரும் கமெண்ட் செய்துவருகின்றனர்.

    ரஜினிகாந்த் - கமல் ஹாசன் இணையும் படத்தை இன்பநிதி தயாரிக்கிறார்.

    கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இதையடுற்றது ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

    இந்தப் படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    ரஜினி மற்றம் கமல் இணையும் படத்தின் ப்ரோமோ வீடியோ நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ரஜினி-கமல் 47 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் இணையும் படத்திற்கான ப்ரோமோ வீடியோ நாளை திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது.

    • அதிக ரத்தப்போக்கு காரணமாக கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது.
    • மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம், பஹ்ரைச்சிரியை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். நிறைமாத கர்ப்பமாக இருந்தார். இவரது கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

    கணவர் இறந்துவிட்டதால் கர்ப்பிணி பெண் மட்டும் தனியாக வசித்து வந்தார். கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது.

    வலி தாங்க முடியாத அவர் சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து வயிற்றை கிழித்துக்கொண்டார். அவரது வயிற்றில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

    அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. கத்தியால் ஆழமாக கிழித்து கொண்டதால் அதிக ரத்தப்போக்கு காரணமாக கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது.

    மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இந்த ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கிறது.

    ரியல்மி நிறுவனத்தின் P சீரிஸ் ஸ்மார்ட்போன் "ரியல்மி P4 லைட்" இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 6.74 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் T7250 சிப்செட், மாலி G57 MP1 கிராஃபிக்ஸ் யூனிட், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, IP54 தர டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் கொண்டுள்ளது.

    இத்துடன் புகைப்படங்கள் எடுக்க 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 4ஜி எல்.டி.இ., ப்ளூடூத் 5.2, வைபை, ஜி.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது. சென்சார்களை பொருத்தவரை பிராக்ஸிமிட்டி, ஆம்பியன்ட் லைட் சென்சார் இடம்பெற்றுள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கைரோஸ்கோப் மற்றும் அக்செல்லோமீட்டர் உள்ளது.

    டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரியல்மி P4 லைட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ரியல்மி யுஐ கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6300mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் வயர்டு சார்ஜிங் வசதி உள்ளது.

    விலையை பொருத்தவரை ரியல்மி P4 லைட் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும் டாப் எண்ட் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ. 1000 வங்கி தள்ளுபடி அல்லது ரூ. 1000 கூப்பன் வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பிப்ரவரி 24ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஆன்லைன் ஸ்டோரில் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் பீச் கோல்டு, அப்சிடியன் பிளாக் மற்றும் சீ புளூ நிறங்களில் கிடைக்கிறது.

    • திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடிந்து விழும்.
    • ஒட்டுமொத்த ஊழலும் நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்டு, தமிழக மக்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்படும்.

    தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில் 10% வரை லஞ்சம் பெற்று ரூ.1,020 கோடி ஊழல் புரிந்த புகாரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் மீது வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திமுக அமைச்சர் நேரு அவர்கள், அரசு வேலையை விற்று ரூ.888 கோடி ஊழல் புரிந்த புகார் மீதும் கூடிய விரைவில் வழக்கு பதிந்து, உண்மை வெளிக்கொணரப்படும் என்னும் நம்பிக்கையை இந்த நீதிமன்ற உத்தரவு ஏற்படுத்துகிறது.

    மொத்தத்தில், மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சி, கமிஷனில் கொளுக்கும் #ALLFAIL திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடிந்து விழும் நாளுக்கான Countdown இன்றோடு தொடங்கிவிட்டது! கூடிய விரைவில்,

    திமுக உடன்பிறப்புகளின் ஒட்டுமொத்த ஊழலும் நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்டு, தமிழக மக்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்படும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஹாட் ஸ்பாட் 2 மச் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

    'ஹாட் ஸ்பாட் 2 மச்' (Hot Spot 2 Much) என்பது 2024ஆம் ஆண்டு வெளியான 'ஹாட் ஸ்பாட்' திரைப்படத்தின் தொடர்ச்சி ஆகும். முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள புதிய தமிழ் அந்தாலஜி திரைப்படம் இது. விஷ்ணு விஷால் தயாரித்து, தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர், எம்.எஸ். பாஸ்கர், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் இந்தப் பட்த்தில் நடித்துள்ளனர்.

    இந்தப் படம் சமூகப் பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் கடந்த ஜனவரி 23ஆம் தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், ஹாட் ஸ்பாட் 2 மச் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

    இந்த நிலையில், ஹாட் ஸ்பாட் 2 மச் திரைப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்தப் படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைக்க அனீல் ரெட்டி தயாரித்துள்ளார்.

     

    • பெட்ரோல் செலுத்தும் குழாயின் முகப்பு பகுதியில் தீயைப் பற்ற வைத்துள்ளார்.
    • அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    சிகரெட் பிடிக்கக்கூடாது என கூறியதால் பெட்ரோல் பங்க்-குக்கு நபர் ஒருவர் தீ வைக்க முயன்ற சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நிகழ்ந்துள்ளது.

    ராய்ப்பூரின் உர்லா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நேற்று, தர்மேந்திரா மற்றும் இம்ரான் என்ற இரு இளைஞர்கள் தங்களது பைக்கிற்கு பெட்ரோல் போட வந்துள்ளனர்.

    இம்ரான் பைக்கில் அமர்ந்திருக்க, அருகில் நின்றிருந்த தர்மேந்திரா திடீரென சிகரெட் பற்ற வைக்க முயன்றுள்ளார்.

    பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கு புகைபிடிக்கக் கூடாது என்று தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தர்மேந்திரா, ஊழியர் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த போதே, தனது கையில் இருந்த தீப்பெட்டியால் பெட்ரோல் செலுத்தும் குழாயின் முகப்பு பகுதியில் தீயைப் பற்ற வைத்துள்ளார்.

    பெட்ரோல் வெளியே வந்து கொண்டிருந்ததால், நொடிப் பொழுதில் தீயானது, பைக் மற்றும் பெட்ரோல் நிரப்பும் இயந்திரம் வரை பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு, அங்கிருந்த தீயணைப்பு உபகரணங்களை பயன்படுத்தி தீயை அணைத்ததால் மிகப்பெரிய வெடி விபத்து தவிர்க்கப்பட்டது.

    பெட்ரோல் பங்க் மேலாளர் அளித்த புகார் மற்றும் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில், தர்மேந்திரா மற்றும் இம்ரானை உர்லா போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.  

    • விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.
    • சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிப். 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தவெக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் வருகிற 23-ந் தேதி அன்று நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது, தற்போது நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வில் பங்கேற்க 4,900 நிர்வாகிகளுக்கு க்யூ ஆர் கோடு வசதியுடன் கூடிய நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சீட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே நிர்வாகிகள் அரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இது முற்றிலும் கட்சி நிர்வாகிகளுக்கான சந்திப்பு என்பதால், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலக்குறைவு உள்ள வர்கள் மற்றும் நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் நேரில் வருவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    கட்சியின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை கருதி அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வடகிழக்கு டெல்லியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்.
    • ஐஎஸ்ஐ உடன் தொடர்புடைய சலீம் பிஸ்டல் என்பவரிடம் துப்பாக்கிகள் வாங்கியுள்ளனர்.

    இந்தியாவை சேர்ந்த சர்வதேச குற்ற கும்பலான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த பெண் தாதா கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட நேஹா என்ற குஸ்னுமா அன்சாரி, 'மேடம் சேகர்' என்று அழைக்கப்படுகிறார்.

    வடகிழக்கு டெல்லியில் ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வந்த நேஹா, வெளிப்பார்வைக்கு சாதாரண பெண்ணாக வாழ்ந்து மறைமுகமாக தாதாவாக செயல்பட்டு வந்துள்ளார்.

    இவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் போதைப்பொருள் விநியோக நெட்வொர்க்கை நிர்வகித்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    நேஹாவுடன் அவரது கூட்டாளியான மஃபூஸ் என்கிற பாபி கபுதர் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    பாபி கபுதர், பாகிஸ்தானின் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 'சலீம் பிஸ்டல்' என்று அழைக்கப்படுபவரிடம் என்பவரிடமிருந்து நவீன ரகத் துப்பாக்கிகளை வாங்கி வந்துள்ளார்.

    லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் நடத்திய பல முக்கியக் குற்றங்களுக்குப் பாபி கபுதர் வழங்கிய ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டதாகப் போலீசார் தெரிவிக்கின்றனர்.

    பஞ்சாபி பாடகர் சிந்து மூஸேவாலா கொலை, திஷா பதானி வீடு அருகே துப்பாக்கிச் சூடு, இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    2024 இல் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் கொலையும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இவர்களிடம் நடத்தப்படும் விசாரணை மூலம் இந்த சர்வதேச நெட்வொர்க் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    லாரன்ஸ் பிஷ்னோய்:

    31 வயதான லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தட்டரன்வாலி கிராமத்தில் வசதி படைத்த விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஆவார், இவரின் பிஸ்னாய் சமுதாயம் பஞ்சாப் , அரியானா, மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.

    சண்டிகரில் கல்லூரி காலத்திலேயே மாணவர் அரசியலை மறைப்பாக வைத்துக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடத்தொடங்கியுள்ளார் லாரன்ஸ்.

    2010 ஆம் ஆண்டு அவர் மீது முதல் வழக்கு பதிவாகியுள்ளது. அதுவும் ஓரூ கொலை முயற்சி வழக்கு. இவ்வாறு குற்றச்செயலுக்காக ஒரு குவளை சிறிய அளவில் தொடங்கி காலப்போக்கில் அதை விரிவுபடுத்தியுள்ளார்.

    ஆள் கடத்தல், காண்டிராக்ட் கொலைகள் என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் இவர்கள் சிறைகளில் இருந்தும்கூட நெட்வொர்க்கிங் மூலம் செயல்பட்டவரே இருக்கின்றனர் கடந்த 2015 இல் லாரன்ஸ் பிஷ்னோய் கைதுசெய்யப்பட்டு தற்போது குஜராத்தின் அகமதாபாத் சபர்மதி சிறையில் உள்ளார்.   

    ×