என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கவில்லை
    • இந்தி மொழியை என்றும் எதிர்ப்போம் என்று சிறுமி ஜாக்லின் ரோஸ் பேசியுள்ளார்.

    சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் வேப்பூரில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீர்வரிசை கொண்டு வந்து வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    அப்போது மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக் கூடிய 2 ஆயிரம் கோடி வழங்கப்படும். இதன் மூலம் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலையில், தமிழக அரசு நிதி மூலம் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

    இதனையடுத்து, கடலூரை சேர்ந்த எல்.கே.ஜி படித்து வரும் நன்முகை என்ற சிறுமி தான் சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து ரூபாய் 10 ஆயிரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டத்திற்காக நிதி வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது

    இந்நிலையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவி ஜாக்லின் ரோஸ் ரூ.5 ஆயிரத்தை தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    "எனது சிறுசேமிப்பில் இருந்து ரூ.5 ஆயிரத்தை மகிழ்வோடு அனுப்புகிறேன்" என்று சிறுமி பேசியுள்ள வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் பேசிய சிறுமி, "வணக்கம் என் பெயர் ஜாக்லின் ரோஸ், நான் 5 ஆம் வகுப்பு படிக்கிறேன். குமாரி மாவட்டத்தை சேர்ந்தவள். அநாதை மொழியான இந்தி மொழி எம் ஆதி மொழியான தமிழை ஆழ்ந்து நிற்கலாமா? இந்தி மொழியை என்றும் எதிர்ப்போம். தமிழுக்கும் அமுதென்று பெயர். அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர். தமிழே ஆறாம் தமிழே உயர். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கவில்லை என்றால் என்ன? இதோ என்னுடைய சிறு சேமிப்பு நிதியில் இருந்து ரூ. 5 ஆயிரத்தை தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு மகிழ்வோடு வழங்குகிறேன்" என்று பேசியுள்ளார்.

    • அடுத்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கு இரு முறை பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
    • செய்முறை தேர்வு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய கல்வி மந்திரி தலைமையில் சமீபத்தில் உயர்நிலைக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கல்வித்துறை செயலாளர், சி.பி.எஸ்.இ. கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளின் உயர் அதிகாரிகள் மற்றும் உலகளாவிய பாடத்திட்டத்தை கொண்ட பள்ளிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    இந்தக் கூட்டத்தில் உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, 2026-2027-ம் ஆண்டு முதல் வெளிநாட்டுப் பள்ளிகளுக்கான உலகளாவிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், அதற்கேற்ப விரிவான செயல் திட்டத்தை தயாரிக்கவும் சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடப்பட்டது.

    உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவும் பணிகளில் தேர்வு முறையும் மாற்றப்படுகிறது. அதாவது தற்போது சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது. இதனை ஆண்டுக்கு இருமுறை தேர்வாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    2 முறை நடக்கும் இந்தத் தேர்வுகள், அதன் முடிவுகள் மாணவர்களுக்கு இளங்கலை படிப்பில் சேர்வதற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் திட்டமிடப்பட வேண்டும் என சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், இந்த திட்டத்துக்கான அறிவிப்பை சி.பி.எஸ்.இ. இன்று வெளியிட்டுள்ளது.

    அதன்படி, முதல் கட்டமாக அடுத்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கு இரு முறை பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. பிப்ரவரி-மார்ச்சில் முதல் தேர்வும், மே மாதம் இரண்டாவது தேர்வும் நடத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. செய்முறை தேர்வு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    • கழுககள் கண்களுக்கு பிணங்கள் மட்டுமே தெரிந்தன. பன்றிகள் கண்களுக்கு அசுத்தம் தெரிந்தது. பக்தர்கள் கடவுளை கண்டனர்- யோகி ஆதித்யநாத்
    • துக்கத்தில் இருக்கும் இந்த குடும்பங்களை முதலமைச்சர் கழுகுகள் என்று அழைக்கிறாரா?- அகிலேஷ் யாதவ்

    மகா கும்பமேளாவை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றன. நாளையுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது. இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர்.

    கடந்த மாதம் மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட குவிந்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக உத்தர பிரதேச அரசு தெரிவித்தது. ஆனால் உயிரிழந்தவர்கள் அதிகம். உண்மையான எண்ணிக்கைகை மாநில அரசு வெளியிட மறுக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் குரல் எழுப்பின.

    இதற்கிடையே உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் "கழுககள் கண்களுக்கு பிணங்கள் மட்டுமே தெரிந்தன. பன்றிகள் கண்களுக்கு அசுத்தம் தெரிந்தது. பக்தர்கள் கடவுளை கண்டனர்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் யோகி ஆதித்ய நாத் கழுகுகள் எனக் கூறியதற்கு அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளனர். தங்களுடைய அன்பானவர்களை தேடிக்கொண்டிருக்கும் நபர்களை அவமதித்துள்ளார் என அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "தற்போது கூட, ஏராளமான மக்கள் கும்பமேளா கூட்ட நெரிசலில் இழந்த தங்களுடைய சகோதரர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் என அன்பானவர்களை தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில மாயமாகியுள்ளனர்.

    துக்கத்தில் இருக்கும் இந்த குடும்பங்களை முதலமைச்சர் கழுகுகள் என்று அழைக்கிறாரா? அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருக்கும் ஒருவரின் உணர்வின்மையின் உச்சக்கட்டம் இது.

    மிகப்பெரிய அளவிலான துயர சம்பவம் நடைபெற்ற போது, முதலமைச்சர் நடத்திய ஆய்வு என்ன?. மகா கும்பமேளாவில் நடைபெற்ற உயிரிழப்புகள் மற்றும் குழப்பங்கள் யோகி ஆதித்யநாத் அரசின் தோல்விக்கு ஆதாரம்.

    லக்னோ மற்றும் டெல்லியில் உள்ள பாஜக அரசாங்கங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. இப்போது பிரயாக்ராஜில் கங்கை நீரின் தரம் குறித்து மத்திய மற்றும் மாநில நிறுவனங்கள் மோதிக் கொள்வதைக் காண்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    • நான் 2007 இல் வரைந்த கடைசி பிரமாதமான ஓவியம் பெரியார் ஓவியம் தான் என சிவகுமார் தெரிவித்தார்.
    • பெரியாரின் ஓவியத்தை திரையிட்டு மாணவர்கள் மத்தியில் நடிகர் சிவகுமார் பேசினார்.

    திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் வரைந்த பெரியாரின் ஓவியத்தை திரையிட்டு மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் சிவகுமார், "இன்றைக்கும் ஒரு சாதிய கட்டமைப்பு உள்ளது. இவன் மேல்சாதிக்காரன், இவன் கீழ் சாதிக்காரன்.. பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என 4 வகைகளாக பிரித்து.. இதில் சூத்திரன் கடைசி ஆளு.

    இப்படி கீழ் சாதிக்காரன் என மக்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கும்போது.. ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து IAS, IPS வருவதற்கு போராடிய ஒரே போராளி பெரியார். நான் 2007 இல் வரைந்த கடைசி பிரமாதமான ஓவியம் பெரியார் ஓவியம் தான்" என்று தெரிவித்தார். 

    • விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்துள்ளனர்
    • அப்பெண்ணின் கணவர் சக்திவேல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்த வழக்கில், அப்போதைய எஸ்.ஐ உள்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    2001 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட பெண்ணை, அவரின் கணவரின் கண்முன்னே ஆடைகளைக் களைந்து போலீசார் மானபங்கம் செய்யப்பட்டார். இதனால் மனம் உடைந்த அப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றால். ஆனால் ஊர் மக்கள் அவரை மீட்டனர்.

    பின்னர் சில நாட்கள் கழித்து அப்பெண்ணின் கணவர் சக்திவேல் விஷம் அருந்தி தற்கொலை செய்தது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளராக இருந்த ரங்கசாமி (77), காவலர்கள் வீர தேவர் (68), சின்ன தேவர் (69) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இது தொடர்பான வழக்கில் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். 24 ஆண்டுகளாக நடந்த வழக்கில் திண்டுக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது

    ரங்கசாமி, வீரத்தேவர், சின்னத்தேவர் ஆகிய மூவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.36,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

    • ராணுவ பட்ஜெட்டை பாதியாக குறைக்கலாம் என சீன அதிபர் மற்றும் ரஷியா அதிபர் புதினிடம் கூற விரும்புகிறேன் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
    • இது நல்ல யோசனை. அமெரிக்கா செய்தால், நாங்கள் செய்வோம் என புதின் கருத்து தெரிவித்திருந்தார்.

    அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் செலவினங்களை குறைக்க முடிவு செய்துள்ளார். இதனால் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். நேட்டோ அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும சமஅளவில் நிதியளிக்க வேண்டும். அமெரிக்காக அதிக அளவில் நிதி வழங்காது என மிரட்டல் விடுத்துள்ளார்.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோரை சந்தித்து பேசும்போது, நம்முடைய ராணுவ பட்ஜெட்டை பாதியாக குறைக்கலாம் என அவர்களிடம் சொல்ல விரும்புவேன் எனத் தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக நேற்று ரஷிய அதிபர் புதின் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ரஷிய அதிபர் புதின் கூறுகையில் "இந்த சிறந்த யோசனை என நினைக்கிறேன். அமெரிக்கா முதலில் 50 சதவீதம் குறைக்க வேண்டும். பின்னர் நாங்கள் 50 சதவீதம் குறைப்போன். அதன்பின் சீனா விரும்பினால், கட்டாயம் இணையும்" எனத்தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் டிரம்பின் பரிந்துரையில் இணைய விரும்பவில்லை என சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில் "சீனா அமைதியான வளர்ச்சிக்கு உறுதிப்பூண்டுள்ளது. ஆனால், அதன் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு செலவினம் இறையாண்மை மற்றும் வளர்ச்சி நலன்களை பாதுகாப்பதாகும்.

    சீனா ஒரு தற்காப்பு உத்தியை கொண்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு இடையில் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பின்பற்றுகிறது. மேலும் எந்த நாட்டுடனும் ஒருபோதும் ஆயுதப் போட்டியில் ஈடுபடுவதில்லை." எனத் தெரிவித்துள்ளார்.

    • சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி இல்ல திருமண விழா நடைபெறுகிறது.
    • இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி மனைவியின் சகோதரர் தனராஜ் மகன் சேதுநாயக்கின் திருமணம் நாளை மெய்யனூர் சூரமங்கலத்தில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


    மேலும், இந்த விழாவில் திரைப்பிரபலங்கள் விஜய் சேதுபதி மற்றும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    ஜி.கே.மணியின் மகனான தமிழ் குமரன் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெசெர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கின் விலை ரூ.21.78 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • 937 cc L-twin எஞ்சினுடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது DesertX Discovery பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

    டெசெர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கின் விலை ரூ.21.78 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    108 hp ஆற்றலுடன் 937 cc L-twin எஞ்சினுடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து காத்திருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்தலாம்.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி சாலை மற்றும் இ.சி.ஆர். சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பை கடக்க குறைந்தபட்சம் சாதாரண நேரங்களில் 10 நிமிடங்கள் வரை ஆகும். அதே நேரத்தில் பீக் ஹவர்சில் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். இதனால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து காத்திருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ராஜீவ்காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்திரா நகர் ரெயில் நிலையம் அருகே யு டர்ன் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு கடந்தாண்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டைடல் பார்க் அருகில் 2-வது யு டர்ன் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

    தற்போது பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ள டைடல் பார்க் மேம்பாலம் 510 மீட்டர் நீளமும், 8.50 மீட்டர் அகலமும் கொண்டது. மேம்பாலத்தின் மையத்தூண் 18 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


    இந்த மேம்பாலம் திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகன ஓட்டிகள் யு டர்ன் எடுக்க பயன்படுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் இடது புறம் திரும்பி மேம்பாலத்தில் ஏறி, உயரமான மட்டத்தில் யு டர்ன் எடுத்து, டைடல் பூங்காவிற்கு செல்லும் சாலையில் இறங்கிச் செல்ல முடியும்.

    இந்நிலையில், டைடல் பார்க் யு வடிவ மேம்பாலத்தை இன்று மாலை 4 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்துவைத்தனர்.


    • பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் மோகன் ஜி.
    • கடைசியாக செல்வராகவன் நடிப்பில் பகாசூரன் திரைப்படத்தை இயக்கினார்.

    2016 ஆம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயக்கினார்.

    இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும். திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

    கடைசியாக செல்வராகவன் நடிப்பில் பகாசூரன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    மோகன் ஜி அடுத்து இயக்கும் படத்திற்கான பூஜை சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை நாளை மதியம் 11.59 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போஸ்டரில் ஒரு ரத்தம் படிந்த வாழ் இடம்பெற்றுள்ளது. இப்படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாராளுமன்ற இடங்கள் எல்லை நிர்ணயம் தென் மாநிலங்கள் உட்பட அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என மோடி தெளிவாக கூறியுள்ளார்.
    • கற்பனையான பயங்களும், முட்டாள்தனமான வாதங்களுமே தமிழக முதல்வரின் ஒரே செயல்பாடாக மாறிவிட்டன.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமது குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளைப் போல தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் எங்கள் குழந்தைகளுக்கும், மும்மொழிக் கல்வி கிடைப்பதைத் தடுக்கும் தனது வாதத்தை பெயிண்ட் டப்பாவைத் தூக்கித் திரியும் சிலரைத் தவிர, ஒட்டு மொத்த தமிழகமுமே நிராகரித்துவிட்டதை அறிந்தவுடன் பாராளுமன்ற இடங்கள் குறைப்பு என்ற தனது கற்பனையின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

    தனது நிலைப்பாட்டில் அவமானகரமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது திமுக.

    பாராளுமன்ற இடங்கள் எல்லை நிர்ணயம் எப்போது நடக்கும், அது நடக்கும்போது எப்படி அது தென் மாநிலங்கள் உட்பட அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என்று, பிரதமர் மோடி தெளிவாகக் கூறியிருந்தும், ஏன் இந்த பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

    கற்பனையான பயங்களும், முட்டாள்தனமான வாதங்களுமே தமிழக முதல்வரின் ஒரே செயல்பாடாக மாறிவிட்டன.

    இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் "தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.

    மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?

    ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!

    கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

    இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.

    நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    • ஆறு வார போர்நிறுத்தம் வரும் சனிக்கிழமை முடிவடைய உள்ளது.
    • அவர்கள் கட்டடங்களை மட்டும் அழிப்பதில்லை, அவர்கள் எங்களையும் எங்கள் அடையாளத்தையும் அழிக்கிறார்கள்

    'தற்காலிக' போர் நிறுத்தம்

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    இந்நிலையில் இடிபாடுகளால் சூழப்பட்ட காசாவுக்கு திரும்பிய லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இடத்தையும் வாழ்க்கையும் மீண்டும் கட்டமைக்க போராடி வருகின்றனர்.

     

    இடிபாடுகளுக்கிடையில் வடக்கு காசா

    ஐநா கூற்றுப்படி, காசாவில் ஒரு மாதமாக நீடிக்கும் போர் நிறுத்தத்தின் கீழ் கிட்டத்தட்ட 600,000 பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிற்குள் மீண்டும் வந்தனர்.

    அவர்களின் ஒரு குடும்பம் ராவ்யா தம்பூராவினுடையது. தனது இளம் மகன்களுடன் இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் குவிந்த இடிபாடுகளுக்கிடையில் வாழ்ந்து வருகிறார்.

    16 மாத காலப் போருக்கு பிறகு தம்பூரா தனது இடிபாடுடைய வீட்டுக்கு திரும்பி வந்தார். குழாய் நீர், மின்சாரம் என அத்தியாவசிய வசதிகள் இல்லாமல், சுற்றியுள்ள இடிபாடுகளை அகற்ற எந்த கருவிகளும் இல்லாமல் அவர்கள் திகைத்து நிற்கின்றனர்.

    இதுவே அங்கு திரும்பி வந்த 600,000 சொச்சம் மக்களின் சிரமமும் ஆகும். மறுகட்டமைப்பு வேலையைத் தொடங்க வழி இல்லை. இடிபாடுகளுக்கிடையில் என்றென்றும் வாழும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    "சிலர் போர் ஒருபோதும் முடிவடையாமல் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கொல்லப்படுவது நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறார்கள்," என்று தம்பூரா கூறுகிறார். "நீண்ட காலத்திற்கு நாம் என்ன செய்வோம் என்று எனக்குத் தெரியவில்லை. என் மூளை எதிர்காலத்திற்கான திட்டமிடலை நிறுத்தியது" என்று அவர் கூறுகிறார்.

     

    எதிர்காலம் என்ன?

    ஆறு வார போர்நிறுத்தம் வரும் சனிக்கிழமை முடிவடைய உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பது நிச்சயமற்றது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடையும் போது அமைதி நீடிக்க உத்தரவாதம் இல்லை. மீண்டும் சண்டை வெடித்தால், வடக்கு காசாவுக்கு திரும்பியவர்கள் நிலை மீண்டும் முன்போலவே நரகமாக மாறும்.

    உலக வங்கி, ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலின் குண்டுவீச்சு தாக்குதல்களால் முழு இடமும் அழிந்த பின்னர், காசாவை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  

     ஐ.நா.வின் கூற்றுப்படி, போர் நிறுத்தத்துக்குப் பின், மனிதாபிமான உதவி அமைப்புகள் பணிகளை முடுக்கிவிட்டன. இலவச சமையலறைகள் மற்றும் நீர் விநியோக நிலையங்களை அமைத்தல் மற்றும் காசா முழுவதும் லட்சக்கணக்கான மக்களுக்குக் கூடாரங்கள் விநியோகித்தல் ஆகியவை முழு வீச்சில் நடந்தன.

    காசா நகராட்சி நீர் குழாய்களை சரிசெய்யவும், தெருக்களில் இருந்து இடிபாடுகளை அகற்றவும் தொடங்கியது. ஆனால் அதை முழு வீச்சில் செய்ய கனரக உபகரணங்கள் இல்லை. நகராட்சியின் 40 புல்டோசர்கள் மற்றும் ஐந்து டம்ப் லாரிகளில் சில மட்டுமே இன்னும் வேலை செய்கின்றன என்று செய்தித் தொடர்பாளர் அசெம் அல்னாபிஹ் கூறுகிறார்.

    காசா 50 மில்லியன் டன்களுக்கும் அதிகமான கட்டட இடிபாடுகளால் நிரம்பியுள்ளது. 100 லாரிகள் 15 ஆண்டுகள் முழு திறனில் இயங்கினால் மட்டுமே அதை அகற்ற சாத்தியப்படும் என்று ஐ.நா. மதிப்பிடுகிறது.

    அழிக்கப்படும் அடையாளம்

    காசா குடும்பங்கள் ஒவ்வொரு நாளாக வாழ்க்கையை கடந்த முயற்சிக்கின்றன. 25 வயதான பல் மருத்துவர் அஸ்மா த்வைமாவும் அவரது குடும்பத்தினரும் காசா நகரத்திற்குத் திரும்பிய மற்றொரு குடும்பம். டெல் அல்-ஹவா பகுதியில் உள்ள அவர்களின் வீடு அழிக்கப்பட்டது .

    திரும்பி வந்த சில வாரங்களுக்குப் பிறகு, இப்போது தட்டையான மற்றும் எரிந்த இடிபாடுகளின் குவியல் போல இருக்கும் அவர்களின் நான்கு மாடி வீட்டைப் பார்த்து அவர் பெருமூச்செறிகிறார்.

    இஸ்ரேல் மக்களை மட்டும் கொள்ளவில்லை. வீடு, நகரம் என்ற அவர்களுக்கு நெருக்கமானவற்றை அளிப்பதன் மூலம் அந்நகருடனான அவர்களது அடையாளத்தை அளிக்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.

    "நான் பயந்ததால் இங்கு வர முடியவில்லை. என் மனதில் என் வீட்டில் அழகு மற்றும் அரவணைப்பு இருந்தது. ஆனால் இப்போது அது இல்லை என்ற இந்த உண்மையை எதிர்கொள்ள நான் பயந்தேன். அவர்கள் கட்டடங்களை மட்டும் அழிப்பதில்லை, அவர்கள் எங்களையும் எங்கள் அடையாளத்தையும் அழிக்கிறார்கள்" என்று அவர் கூறுகிறார். 

     

    ×