என் மலர்
நீங்கள் தேடியது "பொதுத் தேர்வு"
- தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 219 தேர்வு மையங்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
- தேர்வு பணியில் சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெறுவதால் அரசு பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. அரசு, தனியார் பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக பெயர் படுத்தப்பட வேண்டிய நிலை இருப்பதால் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கியது. இந்தத் தேர்வு 4219 மையங்களில் நடக்கிறது. பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 82 ஆயிரம் பேரும் தனித்தேர்வர்கள் 26 ஆயிரம் பேரும் என மொத்தம் 9 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதினார்கள்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் பொதுத்தேர்வினை 49 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 4954 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தேர்வு கூடங்களில் மாணவ மாணவிகள் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் பறக்கும் படை அவ்வப்போது வந்து கண்காணித்தனர்.
முதல் நாளான இன்று தமிழ் தேர்வு நடந்தது. மாணவ-மாணவிகள் உற்சாகமாக தேர்வினை எழுதினார்கள். ஒவ்வொரு தேர்விற்கும் குறிப்பிட்ட கால இடைவெளி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் படித்ததை மீண்டும் மறு ஆய்வு செய்து தேர்வு எழுதுவதற்கு வசதியாக இருந்தது. இன்று தொடங்கியுள்ள தேர்வு ஏப்ரல் மாதம் 6 தேதி வரை நடைபெறுகிறது.
சிறைவாசிகள், மாற்றுத் திறனாளிகள், தேர்வு எழுத முடியாத சூழ்நிலையில் சிக்கிக்கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளிக்கல்வி அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து மேற்பார்வையில் ஈடுபட்டனர்.
தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் சரியான நேரத்தில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் தேர்வினை முறையாக நடத்தி முடிக்க தேர்வுத்துறை அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து இருந்தது.
- செல்போன் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள்கொண்டுவர தடை விதிக்கப்பட்டது.
- ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளைப் பின்பற்றி மாணவர்கள் நடக்கவேண்டும்.
சென்னை:
தமிழகம், புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இது ஏப்ரல் 6ம் தேதி வரையில் நடக்கும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 12,467 பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பேர் மற்றும் தனித் தேர்வர்கள் 26 ஆயிரத்து 196 என மொத்தம் 9 லட்சத்து 9 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். இதுதவிர, பத்தாம் வகுப்பில் 395 சிறைவாசிகளும் எழுத பதிவு செய்துள்ளனர். இந்த தேர்வில் பங்கேற்க உள்ள 12,292 மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியருக்கு வசதியாக, சொல்வதை எழுதும் நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வுக்கு வரும் மாணவ, மாணவியருக்கு கேள்வித்தாள் வழங்கிய பிறகு, ஒவ்வொரு தேர்வு அறையிலும் மீதம் உள்ள கேள்வித்தாள்களை தேர்வறை கண்காணிப்பாளர்களே மாணவர்கள் முன்னிலையில் உறையிலிட்டு சீலிடும் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தேர்வறை கண்காணிப்பாளர்கள் பத்தாம் வகுப்பு தேர்வுக்காக 49,542 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தேர்வில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க 4,800 பறக்கும் படையினரும், தேர்வு நடக்கும் வளாகத்துக்குள் ஆசிரியர்கள் உள்பட யாரும் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வுகள் தொடர்பான புகார்கள் ஏதாவது இருந்தால், அதுகுறித்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் 9498383075 மற்றும் 9498383076 ஆகிய எண்களில் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத இருக்கிறார்கள்.
- மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 15ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத இருக்கிறார்கள்.
இதற்காக மாநிலம் முழுக்க 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 48 ஆயிரத்து 426 பேரும், தேர்வு கண்காணிக்கும் பணியில் 4 ஆயிரத்து 858 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வின் முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் சுய விவரங்களை விடைத்தாளில் பதிவு செய்வதற்கும், 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கி கடந்த செவ்வாய் கிழமை (மார்ச் 25) நிறைவு பெற்றது. இதேபோல், பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கிய நிலையில், அவர்களுக்கு நேற்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைந்தது.
- மொத்தம் 192 பள்ளிகளை சேர்ந்த 20,159 மாணவ, மாணவிகள் 87 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
- இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொது தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்கி, ஏப்ரல் 3-ந் தேதி வரையும், 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 14-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 5-ந் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வினை ஓசூர் கல்வி மாவட்டத்தில் 35 அரசு பள்ளிகள், 33 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 68 பள்ளிகளில் பயிலும் 10,167 மாணவ, மாணவிகளும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 71 அரசு பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி, 46 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என 118 பள்ளிகளில் பயிலும் 14,245 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 24,412 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக கிருஷ்ணகிரியில் 48, ஓசூரில் 34 தேர்வு மையங்கள் என மொத்தம் 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உள்ள மேஜைகள் மீது மாணவர்களின் பதிவு எண்ணை எழுதும் பணியில் ஆசிரியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி தொடங்கும் பிளஸ் 1 பொதுத் தேர்வினை ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 35 அரசு பள்ளிகள், 33 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 72 பள்ளிகளை சேர்ந்த 7,887 மாணவ, மாணவிகள் 36 மையங்களிலும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 71 அரசு பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி, 46 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 120 பள்ளிகளை சேர்ந்த 12,272 மாணவ, மாணவிகள் 51 தேர்வு மையங்களிலும் என மொத்தம் 192 பள்ளிகளை சேர்ந்த 20,159 மாணவ, மாணவிகள் 87 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.
- தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
- 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
- 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100 எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.
- ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100 எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.
ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இயற்பியலில் 440 பேரும், வேதியியல் 107 பேரும், உயிரியல் 65 பேரும், தாவரவியல் 15 பேரும், விலங்கியல் 34 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
- மாணவி மரியம் தமிழில் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
- வேதியியல் பாடத்தில் மாணவி அனுசியா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தென்காசி:
பிளஸ்-1 பொதுத்தேர்வை இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவ-மாணவிகள் மொத்தம் 63 பேர் எழுதினர். மாணவி ஹரிணி சமஸ்கிருதத்தில் 99 மதிப்பெ ண்களும், ஆங்கிலத்தில் 95 மதிப்பெண்களும், வணிகவியலில் 76 மதிப்பெ ண்களும், கணக்குப் பதிவியலில் 92 மதிப்பெண்களும், பொருளியலில் 98 மதிப்பெண்களும், வணிக கணிதத்தில் 80 மதிப்பெண்களும் பெற்று முதலிடத்தில் சாதனை படைத்தனர். மாணவி மரியம் தமிழில் 92 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 91 மதிப்பெ ண்களும், இயற்பியலில் 92 மதிப்பெண்களும், வேதியலில் 94 மதிப்பெண்களும், உயிரியலில் 97 மதிப்பெண்களும், கணிதத்தில் 73 மதிப்பெண்களும் பெற்று 2-ம் இடத்தை பிடித்துள்ளார். மாணவி அனுசியா தமிழில் 75 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 86 மதிப்பெ ண்களும், இயற்பியலில் 97 மதிப்பெண்களும், வேதியலில் 100 மதிப்பெண்களும், உயிரியலில் 90 மதிப்பெண்களும், கணிதத்தில் 87 மதிப்பெண்களும் பெற்று 3-ம் இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் பாடவாரியாக தமிழில் 92 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 96 மதிப்பெ ண்களும், சமஸ்கிருதத்தில் 99 மதிப்பெண்களும், இயற்பியலில் 97 மதிப்பெண்களும், வேதியலில் 100 மதிப்பெண்களும், உயிரியலில் 97 மதிப்பெ ண்களும், பொருளியலில் 98 மதிப்பெண்களும், கணக்குப் பதிவியலில் 92 மதிப்பெண்களும் பெற்றுச் சாதனை படைத்தனர்.
பிளஸ்-1 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா, ஆலோசகர் உஷா ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே குருவராஜப்பேட்டை மங்கலங்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் 2022-23-ம் கல்வியாண்டில் அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கி பேசினார்.
ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, ஒய்வு பெற்ற டிஐஜி பாண்டியன், ஒய்வு பெற்ற கல்லூரி முதல்வர் பால் வண்ணன், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பிரேமலதா, வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்றவ்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.
மேலும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளையும் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
- தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 7.25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை எவ்வித குழப்பம் இல்லாமல் நடத்த தேர்வுத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது.
குறிப்பாக வினாத்தாள் கசியாமல் பாதுகாப்பாக வைக்கவும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி கையேடு வழங்கப்பட்டுள்ளது. அதில் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டிலும் வினாக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் கேள்விகளின் வரிசை மாற்றப்பட்டு இருக்கும். ஒரு தேர்வு மையத்தில் உள்ள மாணவர்களுக்கு ஏ, பி, என 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும்.
இந்த 2 வகையான வினாத்தாள் வரிசை எண் மாற்றப்பட்டு இருக்கும். இதனால் மாணவர்கள் அருகருகே இருந்தாலும் விடைத்தாளை பார்த்து எழுத முடியாது.
இது குறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் கேட்ட போது இந்த முறை 15 வருடத்திற்கு முன்பே இருந்து உள்ளது. ஏ, பி, சி, டி என 4 வகையான வினாத்தாள் தயாரிக்கப்படும். தற்போது 2 வகையில் வினாத் தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க முடியும் என்றார்.
- 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நாளை, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாளை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்! அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை நம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே வந்து, வினாத்தாள்களை விடாமுயற்சியுடன் படித்துவிட்டு, முதலில் எளிதான கேள்விகளுடன் தொடங்கவும். உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம்; பதில்கள் பல சமயங்களில் ஒரு மனதைக் கொண்டு வரும்.
அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிபூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நம் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 10ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறும்.
- 12ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும்.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, 10ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், 12ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 23ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றன.
10-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை விபரம்;
டிசம்பர் 10, செவ்வாய்க்கிழமை - தமிழ்
டிசம்பர் 11 புதன் கிழமை - விருப்ப மொழி பாடம்
டிசம்பர் 12 வியாழக்கிழமை - ஆங்கிலம்
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - கணிதம்
டிசம்பர் 19 வியாழக்கிழமை - அறிவியல்
டிசம்பர் 23 திங்கட்கிழமை - சமூக அறிவியல்

- இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டது.
- வருகிற 20-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
சென்னை:
ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தொடர் கன மழை காரணமாக தேர்வர்களின் நலன் கருதி வருகிற 20-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.






