search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Examination"

    • மே மாதம் சிறப்பு தேர்வு நடத்தப்படுமென அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
    • தொலைதூர கல்வி பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடக்கவுள்ளது.

    திருப்பூர் :

    தொலைதூர கல்வி வழியில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக மே மாதம் சிறப்பு தேர்வு நடத்தப்படுமென அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம், திருப்பூர் படிப்பு மைய பொறுப்பு அதிகாரி அருள்அரசு கூறியதாவது :- திருப்பூர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடக்கவுள்ளது. கடந்த, 2002 முதல் 2014 வரையிலான கல்வியாண்டில் தொலைதூர கல்வி வழியில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக வரும் மே 2023 - டிசம்பர் 2023 இரு பருவங்களில் சிறப்பு தேர்வு நடக்கிறது.இதில் மே மாதம் நடக்கவுள்ள சிறப்பு தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் www.coe.annamalaiuniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்ச்சி பெறாத மாணவர்கள் வெற்றி பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார். 

    • தேர்வில் தோல்வி அடைந்தவர்களும், மற்றும் ஏற்கனவே தோல்வி அடைந்தவர்களுக்கும் எஸ்.எஸ்.எல்.சி. துணை தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
    • தேர்வு முடிவுகள் பள்ளி கல்வித்துறை தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1000-க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இங்கு மாணவ- மாணவிகள் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் கல்வி பயின்று வருகின்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. துணை தேர்வு

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதையடுத்து தேர்வில் தோல்வி அடைந்தவர்களும், மற்றும் ஏற்கனவே தோல்வி அடைந்தவர்களுக்கும் எஸ்.எஸ்.எல்.சி. துணை தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    இதையடுத்து கடந்த மாதம் துணை தேர்வு நடந்தது. சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பலர் தேர்வு எழுதினர்.

    இந்த நிலையில் தேர்வு முடிவுகள் பள்ளி கல்வித்துறை தேர்வுகள் இயக்க இணையதளத்தில் இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிழை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மறுகூட்டல்

    இந்த தேர்வுக்கான மறுகூட்டலுக்கு வருகிற 25, 26-ந்தேதிகளில் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும். மறு கூட்டலுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 205 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டல் முடிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    ×