என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10th public exam"

    • 2ம் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் விருப்பம் இருந்தால் எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தார்களோ அதுவே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும்.

    சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார்.

    அதன்படி, முதல் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும், 2ம் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் விருப்பம் இருந்தால் எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2 முறை தேர்வு எழுதியவர்களில் அவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தார்களோ அதுவே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    முதல் கட்ட தேர்வில் மதிப்பெண் போதவில்லை எனக் கருதினால் 2ம் கட்ட தேர்வை எழுதலாம் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • கேள்வியில் கூற்றும் காரணமும் முரணாக உள்ளதால் அதற்கு மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை எழுந்தது.
    • ஜோதிபா பூலே குறித்த கேள்வியின் கூற்று, காரணம் முரணாக உள்ளதாக ஆசிரியர்கள் கூறினர்.

    10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாவில் 4வது கேள்வியை அட்டென்ட் செய்திருந்தால் ஒரு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை அறிவறுத்தி உள்ளது.

    சம்பந்தப்பட்ட 4வது கேள்வியில் உள்ள கூற்றும் காரணமும் முரணாக உள்ளதால் அதற்கு மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை எழுந்தது.

    ஜோதிபா பூலே குறித்த கேள்வியின் கூற்று, காரணம் முரணாக உள்ளதாக ஆசிரியர்கள் கூறிய நிலையில் தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    சமூக அறிவியல் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கிய நிலையில் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாணவிகளின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர்.
    • சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க வந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.

    திருச்சி:

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று நிறைவடைந்தது. கடைசி தேர்வான சமூக அறிவியல் பாடத் தேர்வினை நேற்று மாணவ-மாணவிகள் எழுதினர். ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 5 மாணவிகள் மாலையில் வீடு திரும்பவில்லை.

    இரவு 8 மணி ஆகியும் அந்த மாணவிகள் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பள்ளியில் விசாரித்த போது, தேர்வு எழுதிவிட்டு மதியமே தேர்வு மையத்திலிருந்து வெளியே சென்றதாக தெரிவித்தனர்.

    பின்னர் அவர்களது தோழிகளிடம் விசாரித்த போது, எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பதட்டமடைந்த மாணவிகளின் பெற்றோர் பவானி போலீசில் புகார் செய்தனர்.

    பின்னர் துணை போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை போலீசார் மாணவிகளின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர்.

    இதில் 5 மாணவிகளும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனே பவானி போலீசார் சமயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சென்று 5 மாணவிகளையும் மீட்டனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தேர்வில் வெற்றி பெற பெற்றோருக்கு தகவல் கொடுக்காமல் சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க வந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து மாணவிகளுக்கு போலீசார் அறிவுரை கூறினர். இதை தொடர்ந்து 5 பேரையும் ஈரோட்டுக்கு அழைத்து சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    • மாணவி நிரஞ்சானாவின் நிலை கண்டு சக மாணவிகள் கண்கலங்கினர்.
    • சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (51). உரக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் நிரஞ்சனா தா.பேட்டையில் செயல்படும் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு நிரஞ்சனாவின் தந்தை முரளி மாரடைப்பு காரணமாக இறந்து போனார். இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு அரசு தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி நிரஞ்சனா தனது தந்தையின் இழப்பை மனதளவில் ஏற்று கொண்டு தா.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு வந்தார்.

    சமூகஅறிவியல் தேர்வு எழுதுவதற்காக மாணவி தனது உறவினருடன் விழி நிறைய கண்ணீருடன் மனதில் சோகத்தை சுமந்து கொண்டு வந்த மாணவி நிரஞ்சானாவின் நிலை கண்டு சக மாணவிகள் கண்கலங்கினர்.

    மாணவி நிரஞ்சனாவிற்கு பள்ளி ஆசிரியர்களும், தேர்வு மைய மேற்பார்வையாளர் சிவானந்தம் ஆகியோரும் ஆறுதல் கூறி தேர்வை நல்ல முறையில் எழுதுமாறு ஆலோசனை வழங்கினர்.

    தந்தையின் உடலுக்கு உறவினர்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் மாணவி தந்தையை இழந்த துயரத்துடன் தேர்வு எழுதியது ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. 

    • பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தன.
    • பிளஸ்-1 தேர்வு 5-ந் தேதி தொடங்கி நாளை நிறைவடைகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தன. பிளஸ்-1 தேர்வு 5-ந் தேதி தொடங்கி நாளை நிறைவடைகிறது.

    இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாைள மறுநாள் (28-ந் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர்.

    4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும், தனித் தேர்வர்கள் 25,888 பேரும், சிறைவாசிகள் 272 பேரும் எழுதுகிறார்கள்.

    12,480 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 4113 தேர்வு மையங்களில் இத்தேர்வினை எழுத தயா ராக உள்ளனர். தேர்வில் முறைகேடு நடக்காமல் கண்காணிக்க 4,858 பறக்கும் படைகள் அமைக்கப்பட் டுள்ளன. 48 ஆயிரத்து 426 பேர் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

    மாணவர்கள் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத் தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வு துறை எச்சரித்துள்ளது.

    மேலும் தேர்வு பணிகளில் ஈடுபடக் கூடிய ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்து தல், மாணவர்கள் பார்த்து எழுதுவதற்கு உதவுதல் போன்ற தவறான செயல்களுக்கு துணை போகக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் 2,3 நாட்கள் இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    10, 11, 12-ம் வகுப்புகளை சேர்ந்த 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு பொதுத் தேர்வை சந்திக்கிறார்கள்.

    • ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
    • ஆங்கிலப் பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட 4 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்.

    தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6ம் தேதி தொடங்கி 20ம் தேதி அன்று நிறைவு பெற்றது.

    இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஆங்கிலப் பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும், ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒரு மதிப்பெண் கேள்வி எண்கள் 4, 5, 6 மற்றும் 2 மதிப்பெண் கேள்வி எண் 28க்கும் முழு மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகம் முழுவதும் பொதுத் தேர்வு மற்றும் 11ம் வகுப்புக்கான தேர்தவு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
    • 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியும் அறிவிப்பு.

    தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

    11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், அதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 10ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறும்.
    • 12ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும்.

    10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 10ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், 12ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 23ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றன.

    10-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை விபரம்;

    டிசம்பர் 10, செவ்வாய்க்கிழமை - தமிழ்

    டிசம்பர் 11 புதன் கிழமை - விருப்ப மொழி பாடம்

    டிசம்பர் 12 வியாழக்கிழமை - ஆங்கிலம்

    டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - கணிதம்

    டிசம்பர் 19 வியாழக்கிழமை - அறிவியல்

    டிசம்பர் 23 திங்கட்கிழமை - சமூக அறிவியல் 

    ×