என் மலர்

  நீங்கள் தேடியது "samayapuram mariamman temple"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பக்தர்கள் முடிகாணிக்கை செய்தும், அக்னிச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
  • கோவிலுக்கு முன்புறமும், விளக்கு ஏற்றும் இடத்திலும் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

  அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். கார்த்திகை மாத அமாவாசையையொட்டி நேற்று அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்கள் மூலமாக சமயபுரம் வந்தனர். தொடர்ந்து, அவர்கள் முடிகாணிக்கை செய்தும், அக்னிச்சட்டி ஏந்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் கோவிலுக்கு முன்புறமும், விளக்கு ஏற்றும் இடத்திலும் விளக்கு ஏற்றி வழிபட்டனர். இந்தநிலையில் கோவிலில் தரிசனம் செய்து விட்டு திரும்பிய பக்தர்களை ஏற்றி செல்வதற்காக அரசு மற்றும் தனியார் பஸ்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தன. இதனிடையே அதிக அளவு பெண்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்த அரசு பஸ் டிரைவர்கள் சிலர் பஸ்சை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதனால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

  இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் நிலைய தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் கடைவீதியில் நின்று பயணிகளை ஏற்றக்கூடாது, பழைய பஸ் நிலையம் அருகே சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டும் என தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்களை போலீசார் எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து அனைத்து பஸ்களும் சமயபுரம் பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றி சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில்.
  • நவராத்திரி விழா 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 4-ந்தேதி வரை நடக்கிறது.

  அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதாவது ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுதினம் பிரதமை முதல் நவமி வரை தேவி பாகவதம், அக்னி புராணம், தேவி மஹாத்மியம் ஆகிய புராணக் கூற்றுகளின்படி அதர்மமான மகிஷாசூரனை அழிக்க ஊசி முனையில் துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி என முறையே முதல், நடு, கடை என மும்மூன்று நாட்களாக 9 நாட்கள் கடும் தவம் புரிந்து, 10-வது நாள் விஜயதசமி அன்று வெற்றி பெற்ற திருநாளை நவராத்திரி பெருவிழாவாக கொண்டாடுவது இத்தலத்தின் மரபு.

  அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி, அக்டோபர் மாதம் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 26-ந் தேதியன்று அம்மன் குமாரிகா அலங்காரத்திலும், 27-ந் தேதி திரிமூர்த்தி அலங்காரத்திலும், 28-ந் தேதி கல்யாணி அலங்காரத்திலும் (துர்க்கை அம்சம்) எழுந்தருளுகிறார்.

  29-ந்தேதி ரோகினி அலங்காரத்திலும் 30-ந்தேதி காளகா அலங்காரத்திலும், அக்டோபர் மாதம் 1-ந்தேதி சண்டிகா அலங்காரத்திலும் (மகாலட்சுமி அம்சம்) அம்மன் எழுந்தருளுகிறார். அக்டோபர் 2-ந் தேதி ஸாம்பவி, துர்கா அலங்காரத்திலும், 8-ம் நாள் விழாவான 3-ந்தேதி சுபத்ரா அலங்காரத்திலும், (சரஸ்வதி அம்சம்) அம்மன் அருள்பாலிக்கிறார்.

  அக்டோபர் 4-ந்தேதி விஜயதசமியன்று அம்மன் வேடுபரி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வன்னி மரம் சென்றடைகிறார். அதைத்தொடர்ந்து அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாள் இரவும் பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

  விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் மணியக்காரர் பழனிவேல் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

  அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர்.

  பக்தர்கள் கரும்புத் தொட்டிலில் குழந்தையை சுமந்து சென்றும், அக்னி சட்டி ஏந்தியும் கோவிலை வலம் வந்தும், கோவிலுக்கு முன்புறம் மற்றும் தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று மூலஸ்தான அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

  இந்நிலையில், நேற்று ஆவணி மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையையொட்டி காலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவில் ஆஸ்தான மண்டபத்தில் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து தங்க சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மேற்பார்வையில் மணியக்காரர் பழனிவேல் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • யாகசாலை பூஜையில் தர்மபுர ஆதீனம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
  • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி கோஷம் விண்ணையே முட்டியது.

  மண்ணச்சநல்லூர் :

  சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படுவது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்ததாக திகழ்வதால் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். பெண்கள் அதிக அளவில் விரதம் இருந்தும், பாதயாத்திரையாக வந்தும் வழிபடுகிறார்கள்.

  பல்வேறு பெருமைகளை கொண்டுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆகம விதிப்படி கடந்த 2016 பிப்ரவரி 6-ந்தேதி மூலவர் சன்னதி, உள், வெளி பிரகாரங்கள், மேற்கு, தெற்கு, வடக்கு கோபுரங்களுக்கு மட்டும் கும்பாபிஷேகம் நடந்தது.

  கிழக்கு ராஜகோபுரம் கல்காரம் எனப்படும் கருங்கற்களால் கட்டப்பட இருந்ததால் அதற்கு தனியாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன் படி பணிகள் தற்போது முழுமை அடைந்து இன்று (6-ந்தேதி, புதன் கிழமை) ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  101.6 அடி உயரம், 7 நிலைகள், 324 கதை சிற்பங்களுடன் கூடிய ராஜகோபுர கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 3-ந்தேதி இரவு தொடங்கியது. தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு மேல் இரவு 8.30 மணிக்குள் முதல் கால யாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து ராஜகோபுரத்தின் உச்சியில் கும்ப கலசங்கள் பொருத்தப்பட்டன. நிகழ்ச்சியில் ராஜகோபுர உபயதாரர்களான பொன்னர், சங்கர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  ராஜகோபுர கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடைவீதியில் உள்ள ஆண்டவர் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். யாகசாலை பூஜையில் தர்மபுர ஆதீனம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நேற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.

  இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் மற்றும் நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 6 மணிக்கு மகாபூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் யாத்ராதானம் செய்யப்பட்டு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, மேள வாத்தியங்களுடன் ராஜகோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள், உபயதாரர்கள் தலையில் புனித நீர் சுமந்து வந்தனர்.

  ராஜகோபுரத்தில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சரியாக 7.15 மணிக்கு ராஜகோபுரத்தில் உள்ள 7 கலசங்களுக்கும் சிவாச்சார்யார்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். முன்னதான நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு விழாவில் கலந்துகொண்டு பச்சை கொடியசைத்து கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தார்.

  அப்போது அங்கு குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி கோஷம் விண்ணையே முட்டியது. பின்னர் ஷவர் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட பக்தர்கள் கண்களில் ஒற்றிக்கொண்டனர்.

  விழாவையொட்டி இன்று காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் கட்டணமின்றி இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  கும்பாபிஷேகத்தைக் காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்ததால் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார் மேற்பார்வையில், டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவின் பேரில் எஸ்.பி. சுஜித்குமார் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், குற்ற சம்பவங்களைத் தடுக்கும் விதமாக சமயபுரம் நால்ரோடு பகுதி முதல் கோவில் வரை கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா அமைத்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

  மேலும் தீயணைப்புத் துறையினர், தொற்று ஏற்படா வண்ணம் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் சார்பில் அதிக அளவில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாளை காலை 6.45 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
  • கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.

  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏழு நிலைகளை கொண்ட ராஜகோபுர கும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைக்காக ராஜகோபுரத்தின் முன்புறம் புதிதாக யாகசாலை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. இதில் யஜமான சங்கல்பம், தேவதானுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், தனபூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

  இதைத்தொடர்ந்து நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, அக்னி சங்கரஹணம், தீர்த்த சங்கரஹகணமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு மேல் இரவு 8.30 மணிக்குள் முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

  தொடர்ந்து ராஜகோபுரத்தின் உச்சியில் கும்ப கலசங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராஜகோபுர கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடைவீதியில் உள்ள ஆண்டவர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். யாகசாலை பூஜையில் தர்மபுர ஆதீனம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

  இன்று (செவ்வாய்க்கிழமை) விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5.30 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் மற்றும் நான்காம் கால யாக பூஜை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 6 மணிக்கு மகாபூர்ணாஹுதியும், தீபாராதனையும் நடைபெறுகிறது. அன்று காலை 6.45 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 6-ந்தேதி காலை 6.45 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
  • இன்று மாலை 6.05 மணிக்கு மேல் இரவு 8.30 மணிக்குள் முதல் காலயாக பூஜை தொடங்குகிறது.

  சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக திகழும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏழு நிலைகளை கொண்ட ராஜகோபுர கும்பாபிஷேகம் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைக்காக ராஜகோபுரத்தின் முன்புறம் புதிதாக யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

  இதைத்தொடர்ந்து நேற்று இரவு கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. இதில் யஜமான சங்கல்பம், தேவதானுக்ஞை, விக்னேஸ் வர பூஜை, புண்ணியாக வாசனம், தனபூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் நடைபெற்றது.

  அதைத் தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையர் கல்யாணி ராஜகோபுர கலச உபயதாரர்களான இரட்டை சகோதரர்கள் பொன்னர், சங்கர் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.


  இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, அக்னி சங்க்ரஹணம், தீர்த்த சங்க்ரஹணம் நடைபெற்றது. மாலை 6.05 மணிக்கு மேல் இரவு 8.30 மணிக்குள் முதல் காலயாக பூஜை தொடங்குகிறது.

  நாளை (செவ்வாய்க்கிழமை) விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், இரண்டாம் காலயாக பூஜையும், மாலை 5.30 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் விக்னேஸ்வர வந்த பூஜை, புண்ணியாக வாசனம், மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது.

  6-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம் மற்றும் நான்காம் கால யாக பூஜை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 6 மணிக்கு மகாபூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடைபெறுகிறது. அன்று காலை 6.45 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.
  • ஏராளமான பக்தர்கள் கோபுர கலசங்களை தரிசனம் செய்தனர்.

  திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 107 அடி உயரம் கொண்ட கிழக்கு ராஜகோபுர கும்பாபிஷேக விழா வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி ராஜகோபுரத்துக்கு செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட சுமார் தலா 4¾ அடி உயரம் கொண்ட 7 கோபுர கும்ப கலசங்கள் பிரத்யேகமாக கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்டது.

  இந்த கலசங்கள், ராஜகோபுரத்தை கட்டியுள்ள உபயதாரர்களான இரட்டை சகோதரர்கள் பொன்னர் சங்கர் ஆகியோருடைய சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாருக்கு கொண்டு வரப்பட்டது.

  இதையடுத்து அங்குள்ள அழகு நாச்சியம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் கலசங்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் கலசங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பரமத்தி வேலூர், போத்தனூர், பாண்டமங்கலம், கபிலர்மலை, பரமத்தி, நாமக்கல், மோகனூர், திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர், தொட்டியம், முசிறி, கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட், சமயபுரம் நால்ரோடு, மாரியம்மன் கோவில் நுழைவு வாயில், கடைவீதி வழியாக ராஜகோபுரம் அருகே வந்தடைந்தது.

  வழியில் ஏராளமான பக்தர்கள் கோபுர கலசங்களை தரிசனம் செய்தனர். மேலும் சமயபுரத்தில் கோபுர கலசங்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி, ராஜகோபுர உபயதாரர்கள் பொன்னர் சங்கர், கோவில் அர்ச்சகர்கள், மேலாளர், உள்துறை கண்காணிப்பாளர் மற்றும் கோவிலுக்கு அம்மனை தரிசிக்க வந்த ஏராளமான பக்தர்கள் பூக்களை தூவி வரவேற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவிலுக்கு முன்பும், விளக்கேற்றும் இடத்திலும் விளக்கேற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.
  • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

  அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன். அமாவாசையையொட்டி இக்கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர். அவர்கள் முடிகாணிக்கை செய்தும், கோவிலுக்கு முன்பும், விளக்கேற்றும் இடத்திலும் விளக்கேற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

  இதேபோல், சமயபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் தா.பேட்டை பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்கள் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தா.பேட்டை பிள்ளாதுரை பெரியமாரியம்மன், செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, தேவானூர் ராஜகாளியம்மன், கரிகாலி மகாமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வழிபாடுகள் நடந்தது.

  அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருளினார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
  • ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்றது. இந்த கோபுரத்தில் ஒவ்வொரு நிலையிலும் மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சிற்பங்களுக்கு பல மாதங்களாக வர்ணம் தீட்டும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வருகிற ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

  இதையடுத்து கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ராஜகோபுரத்தின் தரை தளத்தில் இருந்து 7 நிலைகள் வரை ஆயிரக்கணக்கான சவுக்குக் கட்டைகளால் கட்டப்பட்ட சாரம் பிரிக்கும் பணி சில நாட்களாக நடைபெற்று, தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேக விழாவிற்காக ராஜகோபுரத்தின் முன்பு யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

  இதில் கொடிமரத்திற்கு முன்பு முகூர்த்தக்காலுக்கு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து தீபாராதனை நடைபெற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கல்யாணி, ராஜகோபுர உபயதாரர்கள் பொன்னர், சங்கர், கோவில் அலுவலக பணியாளர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கண்நோய் தீர்க்கும் சிறப்பு மிக்க தலமாக சமயபுரம் மாரியம்மன் ஆலயம் விளங்குகிறது.
  • இங்கு நடைபெறும் ‘பூச்சொரிதல்’ விழா மிகவும் பிரசித்திப்பெற்றது.

  திருச்சியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சமயபுரம் என்ற ஊர். இங்குள்ள மாரியம்மன், ஊர் பெயரோடு சேர்த்து 'சமயபுரம் மாரியம்மன்' என்றே அழைக்கப்படுகிறார். கண்நோய் தீர்க்கும் சிறப்பு மிக்க தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.

  வேப்பிலை ஆடை தரிப்பது, தீச்சட்டி ஏந்தி அம்பாளை வழிபடுவது, கண்மலர் வாங்கி காணிக்கை செலுத்துவது போன்றவை, இங்கு முக்கியமான நேர்த்திக்கடன்களாக இருக்கின்றன. மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் 'பூச்சொரிதல்' விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. அதே போல் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவும் மிகவும் பிரபலம்.

  ஆண்டு தோறும் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமையில், தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிப்பதைப் பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வேம்பு.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
  சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும் ஐம்பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். மாயாசூரனை சம்ஹாரம் செய்ய பராசக்தி மகா மாரியம்மன் வடிவம் எடுத்த இத்தலத்தில் அக்னி நட்சத்திஇரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்காக இந்த உற்சவம் கடந்த 6-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. சமயபுரம் மாரியம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக வரும் பஞ்சப்பிரகார திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி வட திருக்காவிரியில் இருந்து வெள்ளிக்குடங்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் தீர்த்தம் கொண்டுவருதல் மற்றும் யானை மேல் தங்கக்குடத்தில் தீர்த்தம் கொண்டுவருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  முன்னதாக கடைவீதியில் உள்ள கோவில் திருமண மண்டபத்தில் இருந்து 25 வெள்ளிக் குடங்களில் பட்டாச்சாரியார்கள் புனித நீரை சுமந்து ஊர்வலமாக வந்தனர். அதைத் தொடர்ந்து மாரியம்மன் கோவில் அர்ச்சகர் அலங்கரிக்கப்பட்ட யானை மீது அமர்ந்து தங்கக்குடத்தில் புனிதநீரை ஊர்வலமாக கொண்டுவந்தார்.

  இதைத்தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மனுக்கு கும்ப அபிஷேகமும், மதியம் 2 மணிக்கு பஞ்சப்பிரகார மகாஅபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.  இதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் வெண்ணிற பாவாடை அணிந்து வெள்ளி விமானத்தில் மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாஇரத்தில் முதல் சுற்றாகவும், தங்க கொடி மஇரத்தை 2-வது சுற்றாகவும், தங்க ரதம் வலம் வரும் பிரகாஇரத்தில் 3-வது சுற்றாகவும், தெற்கு ரத வீதியில் பாதியும் வடக்கு மடவாள வீதியில் 4-வது சுற்றாகவும், கீழ ரதவீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி ஆகியவற்றில் 5-வது சுற்றாகவும் வீதிஉலா வந்து பஞ்சப்பிரகார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

  உற்சவத்தை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி வரை இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளிக்கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இன்று(வியாழக்கிழமை) அம்மன் தங்க சிம்மவாகனத்திலும், நாளை(வெள்ளிக்கிழமை) முத்துப்பல்லக்கிலும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) தங்க கமல வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

  வருகிற 19-ந்தேதி வெள்ளிக்குதிரை வாகனத்திலும் 20-ந் தேதி வெள்ளிக்காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி கற்பக விருட்ச வாகனத்திலும், 22-ந்தேதி காமதேனு வாகனத்திலும், 23-ந்தேதி அன்னப்பட்சி வாகனத்திலும் அம்மன் புறப்பாடாகி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin