10ம் வகுப்பிற்கு இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு- சிபிஎஸ்இ

2ம் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் விருப்பம் இருந்தால் எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தார்களோ அதுவே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும்.
10ம் வகுப்பிற்கு இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு- சிபிஎஸ்இ
Published on

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார்.

அதன்படி, முதல் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும், 2ம் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் விருப்பம் இருந்தால் எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 முறை தேர்வு எழுதியவர்களில் அவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தார்களோ அதுவே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முதல் கட்ட தேர்வில் மதிப்பெண் போதவில்லை எனக் கருதினால் 2ம் கட்ட தேர்வை எழுதலாம் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com