search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    11-ம் வகுப்பு பொதுத்தேர்வு - தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    11-ம் வகுப்பு பொதுத்தேர்வு - தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100

    • 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100 எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.
    • ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100 எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.

    ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

    இயற்பியலில் 440 பேரும், வேதியியல் 107 பேரும், உயிரியல் 65 பேரும், தாவரவியல் 15 பேரும், விலங்கியல் 34 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    Next Story
    ×