என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பொதுத்தேர்வு கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • தேர்வு நுழைவுச் சீட்டு காட்டி இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி இந்த தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் அரசு போக்குவரத்து கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.

    தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் தங்களின் வீடு அமைந்துள்ள பகுதியில் இருந்து தேர்வு மையத்திற்கு இலவசமாக பயணிக்கலாம். தேர்வு நுழைவுச் சீட்டு காட்டி இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    அதேபோல் பெங்களூரு மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போக்குவரத்து கழக பஸ்களிலும் தேர்வு எழுதும் மாணவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பெண்ணிடம் சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    வசாய்:

    பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ராவில் அனுமார் கோவில் செல்லும் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பெண்ணிடம் சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது, போலீசாரின் கேள்விகளுக்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் போலீசார் பெண் மற்றும் ஆட்டோ டிரைவரை சோதனை போட்டனர். இச்சோதனையில் 2 பேரிடம் இருந்து 520.6 கிராம் எடையுள்ள எம்.டி. என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 4 லட்சம் ஆகும்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை வசாய் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து போதைப்பொருளை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தனர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
    • மத்திய ரெயில்வே 28 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளதாக அறிவித்து உள்ளது.

    மும்பை:

    மார்ச் மாதம் 13-ந்தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள். இந்தநிலையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மத்திய ரெயில்வே 28 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளதாக அறிவித்து உள்ளது.

    இந்த சிறப்பு ரெயில்கள் மும்பையில் இருந்து புனே, நாக்பூர், மட்காவ், நாந்தெட் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களில் ஏ.சி. மற்றும் முன்பதிவு படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும் என ரெயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

    • பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி வைத்துக் கொண்டு இணைய மோசடியில் ஈடுபட அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
    • போலி கால் சென்டரில் இருந்து ஆயிரக்கணக்கான சீன இளைஞர்கள் சமீபத்தில் மீட்கப்பட்டனர்.

    பீஜிங்:

    மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சமீப காலமாக போலி கால்சென்டர் மோசடி அதிகளவில் அரங்கேறுகின்றன. இதற்காக நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை என்று ஆசை வார்த்தை கூறி படித்த இளைஞர்களுக்கு வலை விரிக்கப்படுகிறது.

    ஆனால் அங்கு சென்ற பிறகு பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி வைத்துக் கொண்டு இணைய மோசடியில் ஈடுபட அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதில் பெரும்பாலும் சீன தொழிலதிபர்களே குறிவைக்கப்பட்டதால் ஆங்கிலம், சீன மொழி தெரிந்த இளைஞர்களை மோசடி கும்பல் அதிகளவில் பணியமர்த்தியது. எனவே போலி கால் சென்டரில் இருந்து ஆயிரக்கணக்கான சீன இளைஞர்கள் சமீபத்தில் மீட்கப்பட்டனர்.

    இதற்கிடையே இதுதொடர்பான வழக்கு சீன கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் மோசடி கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சீன கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    • காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • மயிலாடுதுறை , ராமநாதபுரம் , புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (25.02.2025) மற்றும் நாளை (26.02.2025) தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், நள்ளிரவு 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை , ராமநாதபுரம் , புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
    • குஜராத் அணி 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    பெங்களூரு:

    மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) தொடரின் 3வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் குஜராத் அணி 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து டியாண்ட்ரா டாட்டின் 26, தனுஜா கன்வர் 16 என அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

     

    கடைசி வரை ஒற்றை ஆளாக போராடிய பாரதி ஃபுல்மாலி 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்துள்ளது.

    இதனையடுத்து 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் களமிறங்க உள்ளது.

    இறுதியில் டெல்லி அணி 15.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது . இதனால் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் ஜெஸ் ஜோனாசென் 61 ரன்களும், ஷபாலி வர்மா 44 ரன்களும் எடுத்தனர்.

    இந்த வெற்றிக்கு பின்னர் புள்ளிப்பட்டியல் நான்காவது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு டெல்லி கேப்ட்டல்ஸ் அணி முன்னேறியுள்ளது.

    • லாகூர் கடாஃபி மைதானம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது.
    • பஞ்சாப் மாகாண போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல் பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. லாகூர் நகர் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளதால் கடாஃபி மைதானம் மற்றும் வீரர்கள் தங்கும் ஹோட்டல், வீரர்கள் ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு வருகை, மைதானத்தில் இருந்து ஹோட்டலுக்கு செல்லுதல் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு பணியில் அம்மாகாண போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அனால் சில போலீசார் பணிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல் சிலர் அவர்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் பஞ்சாப் மாகாண நிர்வாகம் 100-க்கும் மேற்பட்ட போலீசாரை அதிரடியாக வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இதில் போலீஸ் துறையில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் அடங்குவார்கள்.

    போட்டியை நடத்தும் பாகிஸ்தான் நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

    • 500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று ஹெச். ராஜா தெரிவித்தார்.
    • ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு.

    மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கை மூலமாக தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே 500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று எச். ராஜா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், எச். ராஜா பேசியது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால்விடுகிறார் ஹெச். ராஜா. ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு. சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம். அது தான் அறிவுடமை" என்று தெரிவித்துள்ளார். 

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரூப்லெவ் தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், பிரான்சின் குயிண்டின் ஹேலிஸ் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-3 என ரூப்லெவ் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட ஹேலிஸ் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-5) என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான ரூப்லெவ் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார்.

    ரஷியா வீரரான ரூப்லெவ் சமீபத்தில் நடந்த கத்தார் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இத்திரைப்படத்தில் ரம்யா என்ற கதாப்பாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார்

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.

    'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர், வரும் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பா.ஜ.க மாநகர், மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
    • மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.

    கோவை:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக இன்று கோவை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு வந்த அவர் இரவு 9 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து இறங்கினார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அங்கிருந்து கார் மூலம் அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் செல்கிறார். அங்கு கொங்கு மண்டல முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழில்அதிபர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

    கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாநகர், மாவட்ட அலுவலகத்தை நாளை திறந்து வைக்கிறார். அதன்பின், ராமநாதபுரம், நெல்லை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகங்களை காணொலி மூலம் திறந்துவைக்கிறார்.

    மாலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்குச் செல்கிறார்.

    அங்கு தியான லிங்கம், லிங்க பைரவியை வழிபட்டு விட்டு ஆதியோகி சிலை முன்பு நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் கோவை வரும் அமித்ஷா இரவில் ஓய்வெடுக்கிறார். நாளை மறுநாள் காலை 9 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி திரும்புகிறார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோவை விமான நிலையம், அவர் ஓய்வெடுக்கும் நட்சத்திர ஓட்டல், புதிய பா.ஜ.க. அலுவலகம், ஈஷா யோகா மையம் உள்பட அவர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கவில்லை
    • இந்தி மொழியை என்றும் எதிர்ப்போம் என்று சிறுமி ஜாக்லின் ரோஸ் பேசியுள்ளார்.

    சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் வேப்பூரில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீர்வரிசை கொண்டு வந்து வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    அப்போது மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக் கூடிய 2 ஆயிரம் கோடி வழங்கப்படும். இதன் மூலம் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலையில், தமிழக அரசு நிதி மூலம் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

    இதனையடுத்து, கடலூரை சேர்ந்த எல்.கே.ஜி படித்து வரும் நன்முகை என்ற சிறுமி தான் சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து ரூபாய் 10 ஆயிரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டத்திற்காக நிதி வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது

    இந்நிலையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவி ஜாக்லின் ரோஸ் ரூ.5 ஆயிரத்தை தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    "எனது சிறுசேமிப்பில் இருந்து ரூ.5 ஆயிரத்தை மகிழ்வோடு அனுப்புகிறேன்" என்று சிறுமி பேசியுள்ள வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் பேசிய சிறுமி, "வணக்கம் என் பெயர் ஜாக்லின் ரோஸ், நான் 5 ஆம் வகுப்பு படிக்கிறேன். குமாரி மாவட்டத்தை சேர்ந்தவள். அநாதை மொழியான இந்தி மொழி எம் ஆதி மொழியான தமிழை ஆழ்ந்து நிற்கலாமா? இந்தி மொழியை என்றும் எதிர்ப்போம். தமிழுக்கும் அமுதென்று பெயர். அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர். தமிழே ஆறாம் தமிழே உயர். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கவில்லை என்றால் என்ன? இதோ என்னுடைய சிறு சேமிப்பு நிதியில் இருந்து ரூ. 5 ஆயிரத்தை தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு மகிழ்வோடு வழங்குகிறேன்" என்று பேசியுள்ளார்.

    ×