என் மலர்
இந்தியா

நாலாச்சோப்ராவில் ரூ.1 கோடி போதைப்பொருளுடன் 2 பேர் கைது
- தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பெண்ணிடம் சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
வசாய்:
பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ராவில் அனுமார் கோவில் செல்லும் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பெண்ணிடம் சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, போலீசாரின் கேள்விகளுக்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் போலீசார் பெண் மற்றும் ஆட்டோ டிரைவரை சோதனை போட்டனர். இச்சோதனையில் 2 பேரிடம் இருந்து 520.6 கிராம் எடையுள்ள எம்.டி. என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 4 லட்சம் ஆகும்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை வசாய் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து போதைப்பொருளை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தனர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






